7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
- நல்ல பாடல்களைப் படித்துச் சுவைப்பது உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
- அதுபோலவே சிறந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வதும் நமக்கு மகிழ்ச்சி தரும்
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் உருவாகியுள்ளனர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
திருநெல்வேலிச் சீமை
- திருநெல்வேலிச் சீமை = திருநெல்வேலி + தூத்துக்குடி மாவட்டங்கள்.
- திருநெல்வேலிச் சீமை என்று குறிப்பிடப்படுவது இன்றைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் இணைந்த பகுதியாகும்.
பாரதியாரும் தேசிக விநாயகனாரும்
- பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம்.
- தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம் – அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவர்.
கடிகைமுத்துப் புலவர்
- கோயில்பட்டியிலிருந்து கிழக்கே எட்டு மைல் தூரத்தில்தான் பாரதியாரின் பிறப்பிடமாகிய எட்டையபுரம் இருக்கிறது.
- அங்கே சுமார் இருநூறு வருஷங்களுக்கு முன் இருந்தவர் கடிகைமுத்துப் புலவர்.
- அவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.
சீவலப்பேரி என்கிற முக்கூடல்
- மணியாச்சியி அருகே தாமிரபரணி ஆறும் சிற்றாறும் கலக்கிற இடம்தான் சீவலப்பேரி என்கிற முக்கூடல்.
- முக்கூடல் பள்ளு என்னும் பிரபந்தம் முக்கூடலைப் பற்றியதுதான்.
- “ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி – மலை யாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே!” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = முக்கூடற்பள்ளு.
பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
- மதுரையில் இருந்து நெல்லைக்கு வந்தவர்.
- நெல்லையப்பர் கோவிலில் எழுந்தருளியுள்ள காந்திமதித் தாயைத் தரிசித்தார்.
சீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி
- பிள்ளைப்பெருமாள் சீவைகுண்டத்துப் பெருமாளைப் பற்றிப் பாடியுள்ளார்.
- நம்மாழ்வார் அவதார ஸ்தலம் = ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்).
- ஆழ்வார்திருநகரி பகுதியை பழங்காலத்தில் அழைத்த பெயர் = திருக்குருகூர்.
- நம்மாழ்வார் தமது ஈடுபாட்டை ஆயிரம் தமிழ்ப்பாட்டில் (திருவாய்மொழியில்) வெளியிட்டார்.
முத்தொள்ளாயிர ஆசிரியர்
- முத்தொள்ளாயிரம் நூலின் ஆசிரியர் “கொற்கை” நகரின் புகழ்பெற்ற முத்தை புகழ்ந்து பாடியுள்ளார்.
- மேற்கே ரோமாபுரி, கிரேக்கதேசம் முதல் கிழக்கே சைனா வரையும் கொற்கையிலிருந்தே முத்து போய்க் கொண்டிருந்தது.
வள்ளல் சீதக்காதி
- வள்ளல் சீதக்காதியின் ஊர் = காயல்பட்டினம்,
- வள்ளல் சீதக்காதி தமிழ்ப் புலவர்களுக்குப் பெருங்கொடை கொடுத்து வந்தார்.
- வள்ளல் சீதக்காதியின் இறப்பை, நமச்சிவாயப் புலவர் கீழ்க்கண்டவாறு பாடுகிறார்.
பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில் நாமாது இருந்தென்ன நாமும் இருந்தென்ன நாவலர்க்குக் கோமான் அழகமர் மால்சீதக் காதி கொடைக்கரத்துச் சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே! – நமச்சிவாயப் புலவர் |
காவடிச்சிந்து அண்ணாமலையார்
- கழுகுமலை முருகன் மீது காவடிச்சிந்து பாடியவர் = காவடிச்சிந்து அண்ணமலையார்.
- காவடிச்சிந்து பாட பம்பை, மேளம் போன்ற கருவிகள் அவசியம் ஆகும்.
அழகிய சொக்கநாதர்
- சங்கரன்கோவில் “கோமதித் தாய்” மீது பல பக்திப் பாடல்களை பாடியவர் = திருநெல்வேலி அழகிய சொக்கநாதர்.
‘வாடா’ என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக் கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே! – அழகிய சொக்கநாதர் |
கருவைநல்லூர்
- சங்கரன்கோயிலுக்கு அருகே உள்ள ஊர் கருவைநல்லூர்.
- இதற்குக் கரிவலம் வந்த நல்லூர் என்றும் பெயர்.
- இத்திருத்தலத்தின் சிறப்பில் தோய்ந்த புலவர் ஒருவர் திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி என்ற மூன்று நூல்களைப் பாடியிருக்கிறார்.
- திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி நூல்களை பாடியவர் = அதிவீரராம பாண்டியன்.
நுண் துளி தூங்கும் குற்றாலம்
- கவி இல்லாமலே மனசைக் கவரக்கூடிய இடம் குற்றாலம்.
- “நுண் துளி தூங்கும் குற்றாலம்” என்று பாடியவர் = திருஞானசம்பந்தர்.
குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே
- குற்றாலத்தின் பெருமையை கூறும் விதமாக மாணிக்கவாசகர் தனது பாடலில் குற்றாலத்தை குறிப்பிட்டுள்ளார்.
உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன் கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும் குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே! – மாணிக்கவாசகர் |
திரிகூடராசப்பக் கவிராயர்
- உண்மையான தமிழ்ப் பண்பும் கவிப்பண்பும் வாய்ந்த நூல் = குற்றாலக் குறவஞ்சி.
- குற்றாலத்துக்குக் அருகே உள்ள மேலகரத்தில் வாழ்ந்துவந்த திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய நூல்.
- இந்நூலில் குறி சொல்லுகிற பெண் குற்றாலமலையின் பெருமையைக் கூறுகிறாள்.
கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே! கனகமகா மேருவென நிற்கும்மலை அம்மே! துயிலும் அவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும் துங்கர்திரி கூடமலை எங்கள்மலை அம்மே! |
இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர்
- டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாதர் வழக்கறிஞர் தொழில் செய்தவர்;
- தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர்;
- இரசிகமணி என்று சிறப்பிக்கப்பட்டவர்.
- இவர் தமது வீட்டில் ‘வட்டத்தொட்டி’ என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்.
- இவர் கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார்.
- “இதய ஒலி” என்னும் நூலின் ஆசிரியர் = இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர்
- “கடித இலக்கியத்தின் முன்னோடி” என அழைக்கப்படுபவர் = இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர்
- “தமிழிசைக் காவலர்” என்று அழைக்கப்படுபவர் = இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர்
- “வளர்தமிழ் ஆர்வலர்” என்று அழைக்கப்படுபவர் = இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர்
- “குற்றால முனிவர்” என்று அழைக்கப்படுபவர் = இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர்.
- வழக்கு
- கலங்கரை விளக்கம்
- கவின்மிகு கப்பல்
- தமிழரின் கப்பற்கலை
- ஆழ்கடலின் அடியில்
- இலக்கியவகைச் சொற்கள்
- இன்பத்தமிழ்க் கல்வி
- அழியாச் செல்வம்
- வாழ்விக்கும் கல்வி
- பள்ளி மறுதிறப்பு
- ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- 7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
- 7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
- 7TH TAMIL திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
- ஒரு வேண்டுகோள்
- கீரைப்பாத்தியும் குதிரையும்
- பேசும் ஓவியங்கள்
- தமிழ் ஒளிர் இடங்கள்
- தொழிற்பெயர்
- விருந்தோம்பல்