7TH TAMIL கண்ணியமிகு தலைவர்
7TH TAMIL கண்ணியமிகு தலைவர்
- மக்களுக்கு வழிகாட்டிய தலைவர்கள் பலர்.
- அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கே உரிய தனித்தன்மையான பண்புகளால் முத்திரை பதித்துள்ளனர்
- எளிமை, நேர்மை, உழைப்பு, பொறுமை, நாட்டுப்பற்று முதலிய பண்புகளை ஒருங்கே கொண்டு சிறந்து விளங்கிய தலைவர் ஒருவர் ‘கண்ணியமிகு’ என்னும் அடைமொழியால் அழைக்கப்படுகிறார்.
- “கண்ணியமிகு” என அழைக்கப்படுபவர் = காயிதே மில்லத் ஆவார்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
எளிமையின் சிகரம்
- பொது நிகழ்சிகளில் கலந்துக் கொள்ள எப்பொழுதும் பொதுப் போக்குவரத்து ஊர்திகளையே பயன்படுத்தினார் காயிதே மில்லத்.
- தனக்கு வழங்கப்பட்ட மகிழுந்தும் பெரும் தொகையையும் தான் துவக்கி வைத்த கல்லூரியின் பயன்பாட்டிற்கு கொடுத்துவிட்டார்.
ஆடம்பரம் அற்ற திருமணம்
- காயிதே மில்லத் அவர்கள் தனது ஒரே மகனின் திருமணத்தை மணக்கொடை எதுவும் இன்றி மிகவும் எளிமையாக நடத்தினார்.
- “மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்துக் கொள்ள மாட்டேன்” என்று உறுதிப்பட தெரிவித்தார் காயிதே மில்லத்.
மொழிக் கொள்கை
- இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் ஆட்சிமொழியைத் தேர்வு செய்வது தொடர்பான கூட்டம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
- அதில் கலந்துக்கொண்ட இவர், “பழமையான மொழிகளிலே ஒன்றைத்தான் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழிதான் என்று நான் உறுதியாகச் சொல்வேன். இன்னமும் விரிவாகச் சொல்ல வேண்டும் என்றால் திராவிட மொழிகள்தாம் இந்த மண்ணிலே முதன்முதலாகப் பேசப்பட்ட மொழிகள். அவற்றுள் மிகவும் இலக்கியச் செறிவுகொண்ட தமிழ்மொழிதான் மிகப் பழமையான மொழி. எனவே, தமிழ்மொழியை நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
நாட்டுப்பற்று
- 1962 இந்திய – சீனப் போரின் பொழுது தனது ஒரே மகனை போர் முனைக்கு அனுப்ப முடிவு செய்தி அதற்காக நேருவிற்கு கடிதம் எழுதினார் காயிதே மில்லத் அவர்கள்.
காயிதே மில்லத்
- “கண்ணியமிகு” என அழைக்கப்படுபவர் = காயிதே மில்லத் ஆவார்.
- காயிதே மில்லத் அவர்களின் இயற்பெயர் = முகம்மது இசுமாயில்.
- அனால் மக்கள் அவரை “காயிதே மில்லத்” என்றே அழைத்தனர்.
- “காயிதே மில்லத்” என்னும் அரபுச் சொல்லின் பொருள் = “சமுதாய வழிகாட்டி”.
அரசியல் பொறுப்புகள்
- காயிதே மில்லத் 1946 முதல் 1952 வரை அப்போதைய சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றினார்.
- இந்திய அரசியலமைப்பு உருவாக்கக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
கல்விப்பணி
- கல்வி ஒன்றுதான் ஒட்டுமொத்தச் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எண்ணினார் காயிதே மில்லத்.
- “கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை” என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தார்.
- திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி, கேரளாவில் ஃபரூக் கல்லூரி ஆகியவற்றைத் தொடங்க காரணமாக இருந்தவர் = காயிதே மில்லத்.
காயிதே மில்லத் பற்றி அறிஞர் அண்ணா
- “தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்றி ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்” என்று கூறியவர் = அறிஞர் அண்ணா.
காயிதே மில்லத் பற்றி தந்தை பெரியார்
- “இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்” என்று பாராட்டியவர் = தந்தை பெரியார்.
- கப்பலோட்டிய தமிழர்
- வழக்கு
- கலங்கரை விளக்கம்
- கவின்மிகு கப்பல்
- தமிழரின் கப்பற்கலை
- ஆழ்கடலின் அடியில்
- இலக்கியவகைச் சொற்கள்
- இன்பத்தமிழ்க் கல்வி
- அழியாச் செல்வம்
- வாழ்விக்கும் கல்வி
- பள்ளி மறுதிறப்பு
- ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- 7TH TAMIL கண்ணியமிகு தலைவர்
- ஒரு வேண்டுகோள்
- கீரைப்பாத்தியும் குதிரையும்
- பேசும் ஓவியங்கள்
- தமிழ் ஒளிர் இடங்கள்
- தொழிற்பெயர்
- விருந்தோம்பல்