7TH TAMIL தொழிற்பெயர்
7TH TAMIL தொழிற்பெயர்
- ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் எனப்படும்.
- தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது
- படர்க்கை இடத்தில் மட்டும் வரும்.
- எ.கா:
- உழவர் செய்யும் தொழில் உழுதல்.
- தையல்காரர் செய்யும் தொழில் தைத்தல்.
- இத்தொடர்களில் உழுதல், தைத்தல் என்பன செயல்களின் பெயர்களாக அமைகின்றன.
- எ.கா:
- படித்தல், ஆடல், நடிப்பு, எழுதுதல், பொறுத்தல்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தொழிற்பெயர் எத்தனை வகைப்படும்
- தொழிற்பெயர் மூன்று வகைப்படும். அவை,
- விகுதி பெற்ற தொழிற்பெயர்
- முதனிலைத் தொழிற்பெயர்
- முதனிலை திரிந்த தொழிற்பெயர்
விகுதி பெற்ற தொழிற்பெயர் என்றால் என்ன
- வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது விகுதி பெற்ற தொழிற்பெயராகும்.
- எ.கா:
- நடத்தல், உண்ணல், வாழ்வு, வாழ்க்கை
- இவற்றில் நட, உண், வாழ் ஆகிய வினைப்பகுதிகள் தல், அல், வு, கை ஆகிய விகுதிகளோடு சேர்ந்து தொழிற்பெயர்களாக அமைகின்றன.
தொழிற்பெயர் விகுதிகள் யாவை
- தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை போன்றவை தொழிற்பெயர் விகுதிகளாக வரும்.
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை |
- எ.கா:
- தருதல் – தல்
- கூறல் – அல்
- ஆட்டம் – அம்
- விலை – ஐ வருகைகை
- பார்வை – வை
- நட்பு – பு
- மறைவு – வு
- மறதி – தி
- கல்வி – வி
- உணர்ச்சி – சி
- செய்யாமை – மை
- போக்கு – கு
முதனிலைத் தொழிற்பெயர் என்றால் என்ன
- எ.கா:
- வானில் இடி இடித்தது
- சோறு கொதி வந்தது
- இடி, கொதி என்னும் சொற்கள் இடித்தல், கொதித்தல் என்னும் சொற்களின் பகுதிகளாகும்.
- இவ்வாறு ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை முதனிலை என்பர்.
- முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும்.
முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன
- எ.கா:
- தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்.
- உணவின் சூடு குறையவில்லை.
- இத்தொடர்களில் பேறு, சூடு ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
- பெறு, சுடு என்னும் பகுதிகளின் முதலெழுத்து நீண்டு, பேறு, சூடு எனத் திரிந்து தொழிற்பெயர்களாக மாறி உள்ளன.
- இவ்வாறு முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
- (எ.கா.) விடு – வீடு, மின் – மீன், கொள் – கோள், உடன்படு – உடன்பாடு
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
- விலங்குகள் உலகம்
- இந்திய வனமகன்
- நால்வகைக் குறுக்கங்கள்
- திருக்குறள்
- புலி தங்கிய குகை
- பாஞ்சை வளம்
- தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்
- 7TH TAMIL தொழிற்பெயர்
- 7TH TAMIL தொழிற்பெயர்
- 7TH TAMIL தொழிற்பெயர்
- 7TH TAMIL தொழிற்பெயர்
- கப்பலோட்டிய தமிழர்
- வழக்கு
- கலங்கரை விளக்கம்
- கவின்மிகு கப்பல்
- தமிழரின் கப்பற்கலை
- ஆழ்கடலின் அடியில்
- இலக்கியவகைச் சொற்கள்
- இன்பத்தமிழ்க் கல்வி
- அழியாச் செல்வம்
- வாழ்விக்கும் கல்வி
- பள்ளி மறுதிறப்பு