7TH TAMIL பேசும் ஓவியங்கள்
7TH TAMIL பேசும் ஓவியங்கள்
- ஆயகலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்று ஓவியக்கலை
- காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் ஓவியத்திற்கு உண்டு.
- ஒரு கருத்தைப் பேச்சாலும் எழுத்தாலும் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ஓர் ஓவியத்தால் மிக நுட்பமாகப் புரிய வைத்துவிட முடியும்.
- அதனால்தான் ஓவியத்தை நுண்கலைகளுள் முதன்மையான ஒன்றாகக் கருதுகின்றனர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
குகை ஓவியம்
- பழங்கால மனிதர்கள் முதலில் குகைகளில் தான் ஓவியங்களை வரைந்தனர்.
- செய்திகளை மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்காக ஓவியங்கள் வரையப்பட்டன.
- பழங்கால ஓவியங்கள் பெரும்பாலும் “கோட்டோவிங்கள்” ஆக இருந்தன.
- குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்டவை = மண் மற்றும் கல் துகள்கள்.
சுவர் ஓவியம்
- மனிதர்கள் வீடு கட்டி வாழத் துவங்கியது முதல் சுவர் ஓவியங்கள் உருவாகத் துவங்கின.
- சித்தன்னவாசல் ஓவியங்கள் “சுவர் ஓவியங்கள்” வகையை சார்ந்தது ஆகும்.
- தஞ்சை பெரியகொவிளில் சுவர் ஓவியங்கள் நிறைய உள்ளன.
- தஞ்சை பெரியகொவிளில் நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
துணி ஓவியம்
- ஓவியம் வரையப் பயன்படும் துணியை எவ்வாறு அழைத்தனர் = “எழினி, திரைச்சீலை, கிழி, படாம்”.
- சீவகசிந்தாமணி காப்பியத்தில் “குணமாலை” என்னும் தலைவி யானையைக் கண்டு அஞ்சிய காட்சியைச் சீவகன் துணியில் வரைந்ததாக கூறப்பட்டுள்ளது.
- துணி ஓவியங்களை தற்காலத்தில் “கலம்காரி ஓவியங்கள்” என்று அழைக்கின்றனர்.
ஓலைச்சுவடி ஓவியங்கள்
- ஓலைச்சுவடியில் வரையப்படும் ஓவியங்கள் = கோட்டோவியங்கள், வண்ணப்பூச்சு ஓவியங்கள்.
- ஓலைச்சுவடி ஓவியங்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் காணலாம்.
செப்பேட்டு ஓவியம்
- முற்காலத்தில் அரசர்களின் ஆணைகளையும், அரசு ஆவணங்களையும் செப்பேட்டில் பொறிப்பர்.
- உளி கொண்டு வரைக்கோடுகளாக வரையப்படும் ஓவியங்கள் = செப்பேட்டு ஓவியங்கள்.
- நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள், விலங்குகள் போன்ற ஓவியங்கள் இடம்பெறுவது = செப்பேட்டு ஓவியங்கள்.
தந்த ஓவியங்கள்
- யானையின் தந்தங்கள் மீது பலவகை நீர் வண்ணங்களை பயன்படுத்தி வரையப்படும் ஓவியங்கள் இது.
- கேரளாவில் இவ்வகை ஓவியங்கள் அதிகம் காணப்படுகிறது.
கண்ணாடி ஓவியங்கள்
- பலவகையான உருவங்கள், இயற்கை காட்சிகளை வரைய கண்ணாடி ஓவியங்கள் பயன்படுகின்றன.
- தஞ்சாவூரில் கண்ணாடி ஓவியர்கள் அதிகளவில் உள்ளனர்.
தாள் ஓவியங்கள்
- தற்கால ஓவியங்கள் இது.
- கோட்டோவியங்கள், வண்ண ஓவியங்கள், நவீன ஓவியங்கள் என பலவகை ஓவியங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது.
- தற்காலத்தில் ஓவியங்கள் வரைய பயன்படுபவை = கரிக்கோல், நீர் வண்ணம், எண்ணெய் வண்ணம்.
கருத்துப்பட ஓவியங்கள்
- கருத்துப்பட ஓவியங்களை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் = பாரதியார்.
- பாரதியார் தனது “இந்தியா” இதழில் முதன் முதலில் கருத்துப்பட ஓவியங்களை அறிமுகம் செய்தார்.
- கருத்துப்பட ஓவியங்களின் மற்றொரு வடிவம் = கேலிச்சித்திரம்.
கேலிச்சித்திரம் என்றால் என்ன
- மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதையே “கேலிச்சித்திரம்” என்பர்.
- கேலிச்சித்திரங்களை அறிமுகம் செய்தவர் = பாரதியார்.
நவீன ஓவியங்கள்
- புதுமையான பார்வையில் புதுமையான கருத்துக்களை வெளிப்படுத்த நவீன ஓவியங்கள் பயன்படுகின்றன.
- பார்வையாளர்களின் மனப்பான்மைக்கு ஏற்பப் பொருள் கொள்ளும் வகையில் கோடுகளாகவும் கிறுக்கல்களாகவும் வரையப்படுகின்றன நவீன ஓவியங்கள்.
சங்க இலக்கியங்களில் புனையா ஓவியங்கள்
- “புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = நெடுநல்வாடை.
- “புனையா ஓவியம் புறம் போந்தன்ன” என்ற டிகள் இடம்பெற்றுள்ள நூல் = மணிமேகலை.
இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்
- ஓவிய மண்டபத்தில் பல வகை ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.
- “இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = பரிபாடல்.
- ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறும் செய்தி இடம்பெற்ற நூல் = பரிபாடல்.
ஓவியத்தின் வேறு பெயர்கள்
- ஓவியத்தின் வேறு பெயர்கள் = ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி.
ஓவியம் வரைபவரின் வேறு பெயர்கள்
- ஓவியம் வரைபவரின் வேறு பெயர்கள் = கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர், ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர்.
ஓவியக் கூடத்தின் வேறு பெயர்கள்
- ஓவியக் கூடத்தின் வேறு பெயர்கள் = எழுதெழில் அம்பலம், எழுத்துநிலை மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம், சித்திரமண்டபம், சித்திர சபை.
இராஜா இரவிவர்மா
- ஐரோப்பியக் கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் இராஜா இரவிவர்மா.
- இவரது ஓவியமுறைகள் பிற்காலத்தில் நாட்காட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டன.
நாட்காட்டி ஓவியங்களின் முன்னோடி
- நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர் = கொண்டையராஜு.
- நாட்காட்டி ஓவியங்களைப் பசார் பெயிண்டிங் என்றும் அழைப்பர்.
- பசார் பெயிண்டிங் என்று அழைக்கப்படுவது = நாட்காட்டி ஓவியங்கள்.
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
- விலங்குகள் உலகம்
- இந்திய வனமகன்
- நால்வகைக் குறுக்கங்கள்
- திருக்குறள்
- புலி தங்கிய குகை
- பாஞ்சை வளம்
- தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்
- கப்பலோட்டிய தமிழர்
- வழக்கு
- கலங்கரை விளக்கம்
- கவின்மிகு கப்பல்
- தமிழரின் கப்பற்கலை
- ஆழ்கடலின் அடியில்
- இலக்கியவகைச் சொற்கள்
- இன்பத்தமிழ்க் கல்வி
- அழியாச் செல்வம்
- வாழ்விக்கும் கல்வி
- பள்ளி மறுதிறப்பு