8TH TAMIL பாடறிந்து ஒழுகுதல்

8TH TAMIL பாடறிந்து ஒழுகுதல்

8TH TAMIL பாடறிந்து ஒழுகுதல்

8TH TAMIL பாடறிந்து ஒழுகுதல்

  • அன்பு, அறிவு, பண்பு போன்றவை ஒவ்வொரு மனிதனும் வளர்த்துக் கொள்ள வேண்டிய உயர் குணங்கள் ஆகும்.
  • இவை அனைத்திற்கும் நுட்பமான பொருள் உண்டு

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

கலித்தொகைப் பாடல்

8TH TAMIL பாடறிந்து ஒழுகுதல்
8TH TAMIL பாடறிந்து ஒழுகுதல்

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை

அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்

–    நல்லந்துவனார்

அருஞ்சொற்பொருள்

  • அலந்தவர் = வறியவர்
  • செறாஅமை = வெறுக்காமை
  • நோன்றல் = பொறுத்தல்
  • போற்றார் = பகைவர்
  • கிளை = உறவினர்
  • பேதையார் = அறிவற்றவர்
  • மறாஅமை = மறவாமை
  • பொறை = பொறுமை

பாடலின் பொருள்

  • இல்வாழ்வு என்பது வறியவர்களுக்கு (அலந்தவர்) உதவி செய்தல் ஆகும்.
  • நிறை எனப்படுவது மறைபொருளை பிறர் அறியாமல் காத்தல்.

கலித்தொகை நூல் குறிப்பு

  • கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • கலிப்பா என்னும் பா வகையால் ஆன நூல் இது.
  • கலித்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை = 150.
  • கலித்தொகையில் உள்ள பிரிவுகள் = ஐந்து.
  • ஐந்து பிரிவுகள் = முல்லைக்கலி, பாலைக்கலி, குறிஞ்சிக்கலி, நெய்தற்கலி, மருதக்கலி.
  • கலித்தொகையை தொகுத்தவர் = நல்லந்துவனார்.
  • நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
  • கலித்தொகையில் நெய்தற்கலிப் பாடல்களை பாடியவர் = நல்லந்துவனார்.

கலித்தொகை முக்கிய அடிகள்

  • ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
  • போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
  • பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
  • அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை
  • அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்
  • செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
  • நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
  • முறை எனப்படுவது கண்ஓடாது உயிர் வௌவல்
  • பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்

 

 

 

 

Leave a Reply