8TH TAMIL எச்சம்
8TH TAMIL எச்சம்
- படித்தான், படித்த, படித்து
- மேற்கண்ட சொற்களில் படித்தான் என்ற சொல்லில் பொருள் முற்றுப் பெற்றுள்ளது.
- ஆனால் படித்த, படித்து என்ற சொற்களில் பொருள் முற்றுப் பெறவில்லை.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
எச்சம் என்றால் என்ன
- பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல், “எச்சம்” எனப்படும்.
எச்சம் எத்தனை வகைப்படும்
- எச்சம் மூன்று வகைப்படும். அவை,
- பெயரெச்சம்
- வினையெச்சம்
- முற்றெச்சம்
பெயரெச்சம் என்றால் என்ன
- எச்சம் பெயரைக் கொண்டு முடிந்தால் அது “பெயரெச்சம்” எனப்படும்.
- எ.கா:
-
- படித்த மாணவன்.
- படித்த பள்ளி.
-
- பெயரெச்சம் மூன்று காலங்களிலும் வரும்.
- எ.கா:
-
- பாடிய பாடல் = இறந்தகாலப் பெயரெச்சம்
- பாடுகின்ற பாடல் = நிகழ்காலப் பெயரெச்சம்
- பாடும் பாடல் = எதிர்காலப் பெயரெச்சம்
-
தெரிநிலைப் பெயரெச்சம் என்றால் என்ன
- செயலையும் காலத்தையும் வெளிப்படையாக காட்டும் பெயரெச்சம் “தெரிநிலைப் பெயரெச்சம்” எனப்படும்.
- எ.கா;
- எழுதிய கடிதம்
- இதில் “எழுதிய” = எழுதுதல் என்ற செயலையும், இறந்த காலத்தையும் வெளிப்படையாக காட்டுகிறது.
குறிப்புப் பெயரெச்சம் என்றால் என்ன
- ஒரு செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் பெயரெச்சம் “குறிப்புப் பெயரெச்சம்” எனப்படும்.
- எ.கா;
- சிறிய கடிதம்
- இதில் “சிறிய” என்னும் சொல் செயலையோ, காலத்தையோ வெளிப்படையாக காட்டாமல் பண்பினை மட்டும் காட்டுகிறது.
வினையெச்சம் என்றால் என்ன
- வினையை (செயலை) கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும்.
- எ.கா:
- படித்து முடித்தான்
- படித்து வியந்தான்.
தெரிநிலை வினையெச்சம் என்றால் என்ன
- செயலையும் காலத்தையும் வெளிப்படையாக காட்டும் வினையெச்சம் “தெரிநிலை வினையெச்சம்” எனப்படும்.
- எ.கா:
- எழுதி வந்தான்
- இதில் “எழுதி” என்ற சொல் எழுதுதல் என்ற செயலையும், இறந்த காலத்தையும் வெளிப்படையாக காட்டுகிறது.
குறிப்பு வினையெச்சம் என்றால் என்ன
- ஒரு செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக காட்டும் வினையெச்சம் “குறிப்பு வினையெச்சம்” எனப்படும்.
- எ.கா:
- மெல்ல வந்தான்
- இத்தொடரில் “மெல்ல” என்னும் சொல் காலத்தை வெளிப்படையாக காட்டாமல் “மெல்ல” என்ற பண்பினை மட்டுமே வெளிப்படையாக காட்டுகிறது.
முற்றெச்சம் என்றால் என்ன
- ஒரு வினைமுற்று எச்சப் பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது “முற்றெச்சம்” எனப்படும்.
- எ.கா:
- வள்ளி படித்தனள்
- இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் “படித்தாள்” என்னும் வினைமுற்றுப் பொருளை தருகிறது.
- எ.கா:
- வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்
- இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது.
-
- இராவண காவியம்
- நாச்சியார் திருமொழி
- செய்தி
- புணர்ச்சி
- இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
- சீவக சிந்தாமணி
- முத்தொள்ளாயிரம்
- மதுரைக்காஞ்சி
- சந்தை
- ஆகுபெயர்
- பெரியாரின் சிந்தனைகள்
- ஒளியின் அழைப்பு
- தாவோ தே ஜிங்
- யசோதர காவியம்
- மகனுக்கு எழுதிய கடிதம்
- யாப்பிலக்கணம்
- விரிவாகும் ஆளுமை
- அக்கறை
- குறுந்தொகை
- தாய்மைக்கு வறட்சி இல்லை
8TH TAMIL