6TH TAMIL வளரும் வணிகம்
6TH TAMIL வளரும் வணிகம்
- மனிதர் வாழ்வில் வணிகம் பெரும்பங்கு வகிக்கிறது.
- வணிகம் இல்லையேல் மனிதர்கள் தம் தேவைகளை எளிதாக நிறைவேற்றிக் கொள்ள இயலாது.
- வணிகம் பல வகைகளில் நடைபெறுகிறது.
- வணிக நிறுவனங்களும் பல வகைகளாக உள்ளன.
- தமிழர் பழங்காலத்தில் இருந்தே வணிகத்தில் சிறந்து விளங்கினர்.
- உலகம் முழுவதும் வணிகத்தொடர்பு கொண்டு இருந்தனர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
வணிகர், நுகர்வோர்
- பொருளை விற்பவர் = வணிகர்.
- பொருளை வாங்குபவர் = நுகர்வோர்.
பண்டமாற்று வணிகம் என்றால் என்ன
- நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் ஆகும்.
- நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக உப்பைப் பெற்றனர்.
வணிகச்சாத்து என்றால் என்ன
- வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும் போது குழுவாகவே செல்வார்கள்.
- இக்குழுவை வணிகச்சாத்து என்பர்.
பட்டினம், பாக்கம்
- கப்பல்கள் வந்து நின்றுபோகும் இடங்கள் துறைமுகங்கள் ஆகும்.
- துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும் பாக்கம் என்றும் குறிக்கப்பட்டன.
பண்டையகாலத்தில் வணிகம்
- “தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சாற்றி …………. உமணர் போகலும்” என்ற அடிகள் இடம்பெற்ற நூல் = நற்றிணை.
- “பாலொடு வந்து கூழொடு பெயரும் …” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = குறுந்தொகை.
- “பொன்னொடு வந்து கறியொடு பெயரும்…….” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = அகநானூறு.
தமிழகம் ஏற்றுமதி, இறக்குமதி
- பழங்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை = தேக்கு, மயில்தோகை, அரிசி, சந்தனம், இஞ்சி, மிளகு
- வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டவை = சீனத்திலிருந்து கண்ணாடி, கற்பூரம், பட்டு. அரேபியாவில் இருந்து குதிரைகள் வாங்கப்பட்டன.
வணிகத்தில் நேர்மை
- “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = திருக்குறள்.
- வணிகரை “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்று பாராட்டி கூறும் நூல் = பட்டினப்பாலை.
- “கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = பட்டினப்பாலை.
- கனவு பலித்தது
- தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
- சிலப்பதிகாரம்
- காணி நிலம்
- சிறகின் ஓசை
- முதலெழுத்தும் சார்பெழுத்தும்
- திருக்குறள்
- அறிவியல் ஆத்திச்சூடி
- கணியனின் நண்பன்
- ஒளி பிறந்தது
- மொழி முதல் இறுதி எழுத்துகள்
- மூதுரை
- துன்பம் வெல்லும் கல்வி
- கல்விக்கண் திறந்தவர்
- நூலகம் நோக்கி
- இன எழுத்துகள்
- ஆசாரக்கோவை
- கண்மணியே கண்ணுறங்கு