6TH TAMIL கடலோடு விளையாடு

6TH TAMIL கடலோடு விளையாடு

6TH TAMIL கடலோடு விளையாடு

6TH TAMIL கடலோடு விளையாடு

  • பாடல் மனிதர்க்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அசதியைப் போக்குகிறது.
  • உழைக்கும் தொழிலாளர்கள் களைப்புத் தெரியாமல் இருக்கப் பாடி மகிழ்கிறார்கள்.
  • வாட்டும் வெயிலையும் தாக்கும் புயலையும் தன் கூட்டாளியாக்கிக் கொண்டு மீன்பிடிப்பவர்கள் மீனவர்கள்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

அருஞ்சொற்பொருள்

  • கதிர்ச்சுடர் = கதிரவனின் ஒளி
  • மின்னல்வரி = மின்னல் கோடு
  • அரிச்சுவடி = அகரவரிசை எழுத்துகள்
6TH TAMIL கடலோடு விளையாடு
6TH TAMIL கடலோடு விளையாடு

பாடலின் பொருள்

  • மீனவர்களுக்கு,
    • விண்மீன்களே விளக்குகள்
    • விரிந்த கடலே பள்ளிக்கூடம்
    • கடல் அலையே தோழன்
    • மேகமே குடை
    • மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை
    • விண்ணின் இடி அவர்கள் காணும் கூத்து
    • சீறிவரும் புயலே விளையாடும் ஊஞ்சல்
    • பனிமூட்டம்தான் உடலைச் சுற்றும் போர்வை
    • அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் மேற்கூரை
    • கட்டுமரம்தான் அவர்கள் வாழும் வீடு
    • மின்னல் கோடுகளே அடிப்படைப் பாடம்
    • வலைவீசிப் பிடிக்கும் மீன்களே அவர்களது செல்வம்
    • முழு நிலவுதான் கண்ணாடி
    • மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் தவம்
    • வானமே அவர்கள் வணங்கும் தலைவன்

நெய்தல் திணை குறிப்புகள்

  • நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்
  • மக்கள் : பரதவர், பரத்தியர்
  • தொழில்: மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
  • பூ : தாழம்பூ
6TH TAMIL கடலோடு விளையாடு
6TH TAMIL கடலோடு விளையாடு

வாய்மொழி இலக்கியம் என்றால் என்ன

  • உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும்.
  • காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.

நாட்டுப்புற இயல் ஆய்வு

  • ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும்.
  • இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
  • “நாட்டுப்புற இயல் ஆய்வு” என்னும் நூலை தொகுத்தவர் = சு. சக்திவேல்.

 

 

 

Leave a Reply