6TH TAMIL அணி இலக்கணம்
6TH TAMIL அணி இலக்கணம்
- எதிலும் அழகைக் காண விரும்புவது மனிதர்களின் இயல்பு. நாம் நம்மை அணிகலன்களால் அழகுபடுத்திக் கொள்கிறோம்.
- அதுபோல் கவிஞர்கள் தங்கள் கற்பனைத் திறத்தாலும் புலமையாலும் தாங்கள் இயற்றும் பாடல்களில் அழகைச் சேர்க்கின்றனர்.
- இதனை விளக்குவது அணி இலக்கணம் ஆகும்.
- அணி என்பதற்கு அழகு என்பது பொருள்.
- கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது அணி.
- மருந்தைத் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளைச் சுவைபடக் கூறுவது அணியாகும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இயல்பு நவிற்சி அணி என்றால் என்ன
- ஒரு பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது இயல்பு நவிற்சி அணி ஆகும்.
- இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர்.
- எ.கா:
தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி – கவிமணி தேசிக விநாயகனார் |
- இப்பாடலில் கவிஞர் பசுவும் கன்றும் ஒன்றுடன் ஒன்று கொஞ்சி விளையாடுவதை இயல்பாக எடுத்துக் கூறியுள்ளார்.
- எனவே இது இயல்பு நவிற்சி அணி ஆகும்.
உயர்வு நவிற்சி அணி என்றால் என்ன
- ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது உயர்வு நவிற்சி அணி ஆகும்.
- எ.கா:
குளிர்நீரில் குளித்தால் கூதல் அடிக்குமென்று வெந்நீரில் குளித்தால் மேலே கருக்குமென்று ஆகாச கங்கை அனல் உறைக்குமென்று பாதாள கங்கையைப் பாடி அழைத்தார் உன் தாத்தா |
- இதில் உயர்வு நவிற்சி அணி அமைந்துள்ளது.
- கனவு பலித்தது
- தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
- சிலப்பதிகாரம்
- காணி நிலம்
- சிறகின் ஓசை
- முதலெழுத்தும் சார்பெழுத்தும்
- திருக்குறள்
- அறிவியல் ஆத்திச்சூடி
- கணியனின் நண்பன்
- ஒளி பிறந்தது
- மொழி முதல் இறுதி எழுத்துகள்
- மூதுரை
- துன்பம் வெல்லும் கல்வி
- கல்விக்கண் திறந்தவர்
- நூலகம் நோக்கி
- இன எழுத்துகள்
- ஆசாரக்கோவை
- கண்மணியே கண்ணுறங்கு