6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள்
6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள்
- பிழையின்றி எழுத எந்தெந்த எழுத்துக்களை எங்கெங்குப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்துக் கொள்வது இன்றியமையாதது ஆகும்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
மொழி முதல் எழுத்துக்கள்
- மொழி என்பதற்குச் சொல் என்னும் பொருளும் உண்டு. சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை மொழிமுதல் எழுத்துகள் என்பர்.
- உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.
- க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
- ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.
- ங – வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது. எ.கா- நுனம்
- (இக்காலத்தில் ஙனம் என்னும் சொல் தனித்து இயங்காமல் அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது.)
- ஞ – வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
- ய – வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
- வ – வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ ஆகிய எட்டு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்
- மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வாரா.
- ட,ண,ர,ல,ழ,ள,ற,ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது.
- டமாரம், ரம்பம், லண்டன். ஃப்ரான்ஸ், டென்மார்க், போன்றவை பிறமொழிச் சொற்கள். இவற்றைத் தமிழில் ஒலி பெயர்த்து எழுதுகிறோம்.
- ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
- ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா.
மொழி இறுதி எழுத்துகள்
- சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.
- உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்.
- ஞ், ண், ந், ம், ய்,ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும். (உரிஞ், வெரிந், அவ்)
மொழி இறுதியில் வராத எழுதுக்கள்
- சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.
- உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்.
- அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்.
- ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது.
- க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
- உயிர்மெய் எழுத்துகளுள் ‘ங’ எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.
- கார்த்திக், ஹாங்காங், சுஜித், மார்க்கெட், திலீப், மார்ச் போன்ற பிறமொழிப் பெயர்ச்சொற்களில் இவ்வெழுத்துகள் இறுதி எழுத்துகளாக இடம்பெறுவதுண்டு.
- எகர வரிசையில் கெ முதல் னெ முடிய எந்த உயிர்மெய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை.
- ஒகர வரிசையில் நொ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை.
- நொ என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் துன்பம் என்னும் பொருளில் வரும்
- நொ என்னும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் = துன்பம்.
சொல்லின் இடையில் வரும் எழுத்துகள்
- மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்.
- உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
- ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
- அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
- பள்ளி மறுதிறப்பு
- ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- ஒரு வேண்டுகோள்
- கீரைப்பாத்தியும் குதிரையும்
- பேசும் ஓவியங்கள்
- தமிழ் ஒளிர் இடங்கள்
- தொழிற்பெயர்
- விருந்தோம்பல்
- வயலும் வாழ்வும்
- திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
- 6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள்
- 6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள்
- 6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள்
- 6TH TAMIL மொழி முதல் இறுதி எழுத்துகள்
- திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
- அணி இலக்கணம்
- புதுமை விளக்கு
- அறம் என்னும் கதிர்
- ஒப்புரவு நெறி
- அணி இலக்கணம்
- திருக்குறள்
- மலைப்பொழிவு
- தன்னை அறிதல்
- கண்ணியமிகு தலைவர்
- பயணம்
- ஆகுபெயர்