7TH TAMIL அணி இலக்கணம்
7TH TAMIL அணி இலக்கணம்
- “அணி” என்பதன் பொருள் = அழகு.
- ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
உவமை அணி என்றால் என்ன
- ஒரு பாடலில் உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும்.
- உவம உருபுகளாக வருபவை = போல, புரைய, அன்ன, இன்ன, அற்று, மான, கடுப்ப, ஒப்ப, உறழ.
- எ.கா:
- மயில் போல ஆடினாள்.
- மீன் போன்ற கண்.
- இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர்.
- இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில், மீன்) உவமை அல்லது உவமானம் என்பர்.
- உவமையால் விளக்கப்படும் பொருளை உவமேயம் என்பர்.
- இத்தொடர்களில் வந்துள்ள ‘போல’, ‘போன்ற’ என்பவை உவம உருபுகளாகும்.
- எ.கா:
- அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
- பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்வது போல நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது இக்குறளின் பொருள்.
- இதில் பூமி தன்னைத் தோண்டுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் என்பது உவமை.
- நாம் நம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒப்பிடப்படும் பொருள் (உவமேயம்). ‘போல’ என்பது உவம உருபு.
எடுத்துக்காட்டு உவமை அணி என்றால் என்ன
- உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் வந்து உவம உருபு மறைந்து வந்தால் அஃது எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.
- எ.கா:
- தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு
- மணற்கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்.
- மனிதர்கள் கற்கும் அளவிற்கு ஏற்ப அறிவு பெருகும் என்பதே இக்குறளின் கருத்தாகும்.
- இதில் தொட்டனைத்து ஊறும் மணற்கேணி என்பது உவமை.
- மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு என்பது உவமேயம்.
- இடையில் ‘அதுபோல்’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது.
இல்பொருள் உவமையணி என்றால் என்ன
- உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர்.
- எ.கா:
- மாலை வெயிலில் மழைத்தூறல் பொன்மழை பொழிந்ததுபோல் தோன்றியது.
- காளை கொம்பு முளைத்த குதிரை போலப் பாய்ந்து வந்தது.
- இத்தொடர்களில் ‘பொன்மழை பொழிந்தது போல்’, ‘கொம்பு முளைத்த குதிரை போல’ என்னும் உவமைகள் வந்துள்ளன.
- உலகில் பொன் மழையாகப் பொழிவதும் இல்லை.
- கொம்பு முளைத்த குதிரையும் இல்லை.
- இவ்வாறு உலகில் இல்லாத ஒன்றை உவமையாகக் கூறுவதை இல்பொருள் உவமை அணி என்பர்.
- வழக்கு
- கலங்கரை விளக்கம்
- கவின்மிகு கப்பல்
- தமிழரின் கப்பற்கலை
- ஆழ்கடலின் அடியில்
- இலக்கியவகைச் சொற்கள்
- இன்பத்தமிழ்க் கல்வி
- அழியாச் செல்வம்
- வாழ்விக்கும் கல்வி
- பள்ளி மறுதிறப்பு
- ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- ஒரு வேண்டுகோள்
- கீரைப்பாத்தியும் குதிரையும்
- பேசும் ஓவியங்கள்
- தமிழ் ஒளிர் இடங்கள்
- தொழிற்பெயர்
- விருந்தோம்பல்