7TH TAMIL விருந்தோம்பல்

7TH TAMIL விருந்தோம்பல்

7TH TAMIL விருந்தோம்பல்

7TH TAMIL விருந்தோம்பல்

  • தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ‘விருந்தோம்பல்’ முதன்மையானதாகும்
  • தமக்கு இல்லாவிட்டாலும் இருப்பதை விருந்தினருக்குத் தந்து மகிழ்ந்த நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன.
  • கடையெழு வள்ளல்களுள் ஒருவர் பாரி.
  • அப்பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமையாக உணவு அளித்த செய்தியைக் கூறுகிறது ஒரு பாடல்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

ஒன்றுறா முன்றிலோ இல்

மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்

பாரி மடமகள் பாண்மகற்கு – நீர்உலையுள்

பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்

ஒன்றுறா முன்றிலோ இல்

–    முன்றுறை அரையனார்

பாடல் பொருள்

  • வறட்சி காலத்தில் பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர்.
  • பாரி மகளிர் பொன் இட்டு அவர்களுக்கு தந்தனர்.
  • இப்பாடலில் இடம்பெற்றுள்ள பழமொழி = ஒன்றுறா முன்றிலோ இல்
  • ஒன்றுறா முன்றிலோ இல் = ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை என்பது இதன் பொருள்.

அருஞ்சொற்பொருள்

  • மாரி = மழை
  • வறந்திருந்த = வறண்டிருந்த
  • புகாவாக = உணவாக
  • மடமகள் = இளமகள்
  • நல்கினாள் = கொடுத்தாள்
  • முன்றில் = வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது.
7TH TAMIL விருந்தோம்பல்
7TH TAMIL விருந்தோம்பல்

முன்றுறை அரையனார் ஆசிரியர் குறிப்பு

  • பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் முன்றுறை அரையனார் ஆவார்.
  • இவர் கி.பி. (பொ.ஆ.) நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர்.
  • பழமொழி நானூறு நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல் மூலம் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.

பழமொழி நானூறு நூல் குறிப்பு

  • பழமொழி நானூறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இது நானூறு பாடல்களைக் கொண்டது.
  • ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதால் இது பழமொழி நானூறு என்னும் பெயர்பெற்றது.

 

 

 

 

Leave a Reply