7TH TAMIL ஒப்புரவு நெறி
7TH TAMIL ஒப்புரவு நெறி
- மனிதர்கள் தனித்து வாழப் பிறந்தவர்கள் அல்லர். சமுதாயமாகக் கூடி வாழ்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழப்பிறந்தவர்கள்.
- பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படாவண்ணம் உதவுவதே சிறந்த பண்பாகும்
- அறநெறியில் பொருளீட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெறியாகும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
வாழ்வின் குறிக்கோள்
- வாழ்க்கை, தொண்டினையே குறிக்கோளாக உடையது.
- இந்தக் குறிக்கோளுடன்தான் ஒப்புரவு நெறியைத் திருக்குறள் அறிமுகப்படுத்துகிறது.
- திருவள்ளுவரின் வாழும் நெறி = ஒருவர் எல்லாருக்காகவும், எல்லாரும் ஒருவருக்காகவும் என்னும் பொதுவுடைமை நெறி.
ஒப்புரவின் இயல்பு
- ஒப்புரவில் ஈதல்- ஏற்றல் என்பதன் வழியாக அமையும் புரவலர் – இரவலர் உறவு இல்லை.
- ஒப்புரவுநெறி சார்ந்த வாழ்க்கை உரிமையும் கடமையும் உடைய வாழ்வு முறையாக அமைவதால் கடமைகள் உரிமைகளை வழங்குகின்றன.
பொருள்ஈட்டலும் ஒப்புரவும்
- பொருள் ஈட்டலிலும் அந்தப் பொருளை நுகர்தலிலும் அறிவியல் பாங்கு தேவை.
- வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும்.
- வாழ்வு அறநிலையப் பாதுகாவல் வாழ்வாக அமைய வேண்டும் என்று கூறியவர் = அப்பரடிகள்.
- “உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய்” என்று கூறியவர் = பாரதிதாசன்.
- செல்வத்துப் பயன் ஒப்புரவு வாழ்க்கை.
- இரப்பார்க்கு இல்லென்று இயைவது கரத்தல் அறிவியல் அன்று; அறமும் அன்று.
- வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை மருந்து என்றும் கூறுவது தமிழ் மரபு.
- செல்வத்தைத் தனியே அனுபவித்தல் இழத்தலுக்குச் சமம் என்று கூறும் நூல் = புறநானூறு.
- “செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = புறநானூறு.
ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகவாம்
- “ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகவாம் பேரறி வாளன் திரு” என்கிறார் திருவள்ளுவர்.
- உலகினர் விரும்புமாறு உதவி செய்து வாழ்பவரது செல்வமானது ஊருணியில் நிரம்பிய நீர்போலப் பலருக்கும் பயன்படும்.
- “பயன்மரம் உள்ளூர்ப் பழுத்துஅற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்” என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
- நற்பண்பு உடையவரிடம் செல்வம் சேர்வது ஊருக்குள் பயன் தரும் மரத்தில் பழங்கள் பழுத்திருப்பதைப் போன்றது.
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
- மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித் தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.
- குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கிய இவர் தமது பேச்சாலும் எழுத்தாலும் இறைத்தொண்டும் சமூகத் தொண்டும் இலக்கியத் தொண்டும் ஆற்றியவர்.
- திருக்குறள் நெறியைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்.
- நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம், ஆலயங்கள் சமுதாய மையங்கள் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
- அருளோசை, அறிக அறிவியல் உள்ளிட்ட சில இதழ்களையும் நடத்தியுள்ளார்.
- தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்
- கப்பலோட்டிய தமிழர்
- வழக்கு
- கலங்கரை விளக்கம்
- கவின்மிகு கப்பல்
- தமிழரின் கப்பற்கலை
- ஆழ்கடலின் அடியில்
- இலக்கியவகைச் சொற்கள்
- இன்பத்தமிழ்க் கல்வி
- அழியாச் செல்வம்
- வாழ்விக்கும் கல்வி
- பள்ளி மறுதிறப்பு
- ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- ஒரு வேண்டுகோள்
- கீரைப்பாத்தியும் குதிரையும்
- பேசும் ஓவியங்கள்
- தமிழ் ஒளிர் இடங்கள்
- தொழிற்பெயர்
- விருந்தோம்பல்