7TH TAMIL புலி தங்கிய குகை

7TH TAMIL புலி தங்கிய குகை

7TH TAMIL புலி தங்கிய குகை

7TH TAMIL புலி தங்கிய குகை

  • தமிழர்கள் பழங்காலம் முதலே கல்வியிலும் வீரத்திலும் சிறந்து விளங்கினார்.
  • நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதைத் தம் முதன்மையான கடமைகளுள் ஒன்றாகக் கருதினர்
  • கல்வியறிவும் கவிபாடும் திறனும் பெற்ற சங்ககாலத் தாய் ஒருவர் தம் மகனின் வீரத்தைப் பற்றி பெருமையாக கூறுகிறார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

புறநானூற்றுப் பாடல்

சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்

யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்

யாண்டுஉளன் ஆயினும் அறியேன் ஓரும்

புலிசேர்ந்து போகிய கல்அளை போல

ஈன்ற வயிறோ இதுவே

தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே*

–    காவற்பெண்டு

அருஞ்சொற்பொருள்

  • சிற்றில் = சிறு வீடு
  • கல்அளை = கற்குகை
  • யாண்டு = எங்கே
  • ஈன்ற வயிறு = பெற்றெடுத்த வயிறு
7TH TAMIL புலி தங்கிய குகை
7TH TAMIL புலி தங்கிய குகை

காவற்பெண்டு ஆசிரியர் குறிப்பு

  • காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர்.
  • சோழ மன்னன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளியின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர்.
  • கல்வியில் தேர்ச்சியும் கவிபாடும் ஆற்றலும் மிக்க இவர், சங்க கால மக்களின் வீரத்தைக் கருப்பொருளாகக் கொண்டு இப்பாடலைப் பாடியுள்ளார்.
  • இவர் பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

புறநானூறு நூல் குறிப்பு

  • புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இந்நூல் பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக விளங்குகிறது.

 

 

 

7TH TAMIL

 

Leave a Reply