8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்
8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்
- உலகத்திலேயே மிகமிக வியப்பானது மனித மூளை.
- அதன் செயல்பாடுகள் விந்தையானவை மட்டுமல்ல, புதிரானவை.
- மருத்துவ மேதைகளும் அறிவியலாளர்களும் இதனைத் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
- நமது உடல் இயக்கத்திற்கும் மன இயக்கத்திற்கும் காரணமானது = மூளை.
மனித மூளை
- பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் = மனித மூளை.
- மனித மூளைக்குள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை = ட்ரில்லியன்
- அவற்றில் நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
மூளையின் அமைப்பு
- மூளை எங்கிருந்து முளைக்கிறது = முதுகுத்தண்டு.
- முதுகுத் தண்டில் இருந்து மடிப்பு மடிப்பாக உருவாகிறது.
- மூளை மூன்று பாகங்களாக பிரித்துள்ளனர். அவை,
- உள் மூளை
- நடு மூளை
- பின் மூளை
- மூக்கு, கண் போன்றவற்றின் முடிவு எங்குள்ளது = முன்மூளையில்.
- நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவது = சிறுமூளை.
- நம் உடலில் அசைவுகளை கட்டுப்படுத்துவது = சிறுமூளை
- உடலில் உணர்சிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது = சிறுமூளை.
மூளையின் உணவு
- மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு தேவைப்படும் இரத்தம் (குருதி) = 800 மி.லி.
- உடலின் மொத்த எடையில் ஐம்பதில் ஒரு பங்கு எடை கொண்டது = மூளை.
- உடலுக்கு தேவையான “குருதி, உயிர்வளி” ஆகியவற்றின் மொத்தத் தேவையில் ஐந்தில் ஒரு பங்கை மூளை மட்டுமே எடுத்துக் கொள்கிறது.
- தனக்கான ஆற்றலை சேமித்து வைக்க மூளைக்கு இடம் இல்லை.
- அதனால் மூளைக்கு “குருதி ஓட்டம்” எப்போதும் இருந்துக் கொண்டே இருக்க வேண்டும்.
முதுகுத்தண்டின் குறுக்கு இணைப்புகள்
- தும்மல், இருமல், சூடான பாத்திரத்தை தொட்டால் உடனே கையை விலக்கிக் கொள்வது = தன்னிச்சையான செயல்கள்.
- உடலின் தன்னிச்சையான செயல்களுக்கு காரணமாக இருப்பவை = முதுகுத்தண்டின் குறுக்கு இணைப்புகள்.
மூளையில் இட வல மாற்றம்
- மூளைக்கு செல்லும் நரம்புகளில் இட – வல மாற்றம் நிகழ்கிறது.
- உடலின் வலப்பக்கச் செய்திகள் = மூளையின் இடப்பக்கத்திற்கு செல்லும்.
- உடலின் இடதுபக்கச் செய்திகள் = மூளையின் வலப்பக்கத்திற்கு செல்லும்.
மூளையின் இடது பகுதி
- மக்களில் பெரும்பாலானோர் வலது கை பழக்கம் உள்ளவர்களாக இருக்க காரணம், மூளையின் இடது பகுதி பாதிப்பே ஆகும்.
- மனிதன் பேச, எழுத, கணக்கிட, தர்க்க ரீதியில் சிந்திக்க காரணமாக இருப்பது = மூளையின் இடது பகுதியே.
- அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பாக இருப்பது போன்றவற்றிற்கு காரணம் = நமது மூளையின் இடப்பக்கம்
- “மொழி அறிவிற்கு” காரணமாக இருப்பது = மூளையின் இடப்பகுதி.
- இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் = பட்டயக் கணக்கர்கள், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கு படித்தவர்கள் போன்றோர்.
மூளையின் வலது பகுதி
- வடிவங்களை உணர்தலுக்கு காரணம் = மூளையின் வலது பக்கம்
- கவிதை எழுதுவது, நடனம் ஆடுவது, படம் போடுவது, நடிப்பது போன்ற “கலை” தொடர்பான நிகழ்வுகளுக்கு காரணமாக இருப்பது = மூளையின் வலது பகுதி.
- “ஞாபகம், மறதி” போன்றவற்றிற்கு காரணமாக இருப்பது = மூளையின் வலது பகுதி.
- வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் = நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கருவிகளை கையாளுபவர்கள்.
உணர்ச்சிகளின் பிறப்பிடம்
- உணர்ச்சிகளின் பிறப்பிடம் = மூளை தான்.
- மூளை – உடல் இணைந்து செயல்படுவதால் வெளிப்படுவது = உணர்ச்சிகள்.
இருவகை நினைவுகள்
- மனித மூளையில் நினைவுகள் இரண்டு வகைகளில் சேமிக்கப்படுகிறது. அவை,
- குறுகிய கால நினைவு
- நிலையான நினைவு
தன்னுணர்வு
- சின்னக் குழந்தையில் இருந்து நான் என்ற உணர்வு நிச்சயம் நம் எல்லோருக்கும் இருக்கும்.
- இந்த தன்னுணர்வு தான் “மனதின் செயல்பாடு” என்கின்றனர்.
மனநிலை மாற்றம்
- ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மனிதர்கள் எத்தனை நிமிடத்திற்கு ஒரு முறை மனநிலை மாற்றம் ஏற்படுகிறது = 90 நிமிடங்கள்.
- சராசரி மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை ஆண்டுகள் தூங்குகிறான் = 20 ஆண்டுகள்.
- சராசரி மனிதன் தன் வாழ்நாளில் எவ்வளவு கனவுகளை காண்கிறான் = மூன்று இலட்சம் கனவுகள்.
கனவு என்பது யாது
- மனதில் உள்ள நினைவு அலைகளில் அன்றைய அல்லது சமீபத்திய நினைவுகளை வகைப்படுத்தி வரிசைப்படுத்தும் செயலே = கனவு.
- அலமாரியில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துத் திருப்பி வைப்பது போன்றது = கனவு.
மூளையும் கற்றலும்
- கற்க கற்க நம் நியூரான்களின் இணைப்புச் சிக்கல்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன;
- மூளையின் எடை கொஞ்சம் கூடுகிறது;
- அதில் உள்ள புரோட்டீன் அளவு அதிகரிக்கிறது;
- கற்பது, அனுபவ அறிவு ஆகியவை மூளையின் பல பகுதிகளைப் பாதிக்கின்றன என்பது உறுதி.
எழுத்தாளர் சுஜாதா ஆசிரியர் குறிப்பு
- சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன் என்பதாகும்.
- இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் புனைவுக்கதைகள், திரைப்படக் கதை வசனம் எனப் பலதுறைகளில் பணியாற்றியுள்ளார்.
- மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் இவர் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார்.
- என் இனிய எந்திரா, மீண்டும் ஜீனோ, ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், தூண்டில் கதைகள், தலைமைச்செயலகம் உள்ளிட்ட பலநூல்களை எழுதியுள்ளார்.
- தலைமைச்செயலகம் என்ற நூலின் ஆசிரியர் = சுஜாதா.
-
- சிற்பக்கலை
- இராவண காவியம்
- நாச்சியார் திருமொழி
- செய்தி
- புணர்ச்சி
- இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு
- 8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்
- 8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்
- 8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்
- 8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்
- 8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்
- சீவக சிந்தாமணி
- முத்தொள்ளாயிரம்
- மதுரைக்காஞ்சி
- சந்தை
- ஆகுபெயர்
- பெரியாரின் சிந்தனைகள்
- ஒளியின் அழைப்பு
- தாவோ தே ஜிங்
- யசோதர காவியம்
- மகனுக்கு எழுதிய கடிதம்
- யாப்பிலக்கணம்
- விரிவாகும் ஆளுமை
- அக்கறை
- குறுந்தொகை
- தாய்மைக்கு வறட்சி இல்லை
- அணியிலக்கணம்
8TH TAMIL
In short