8TH TAMIL யாப்பு இலக்கணம்
8TH TAMIL யாப்பு இலக்கணம்
- பாவலர்கள் தம் உள்ளத்தில் தோன்றும் உயர்ந்த கருத்துகளைப் பாடல்களாகப் படைக்கின்றனர்.
- குறிப்பிட்ட வடிவத்தில் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதப்படும் கவிதைகளை மரபுக்கவிதைகள் என்பர்
- இலக்கணக் கட்டுப்பாடுகளின்றிக் கருத்துக்கு மட்டும் முதன்மை கொடுத்து எழுதப்படும் கவிதைகளைப் புதுக்கவிதைகள் என்பர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
யாப்பு இலக்கணம் என்றால் என்ன
- மரபுக்கவிதைகள் எழுதுவதற்கான இலக்கணம் யாப்பு இலக்கணம் எனப்படும்.
யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள்
- யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் ஆறு. அவை
- எழுத்து
- அசை
- சீர்
- தளை
- அடி
- தொடை.
யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளை எத்தனை வகையாக பிரிப்பர்
- யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளை எத்தனை வகையாக பிரிப்பர் = மூன்று வகை. அவை,
- குறில் = உயிர்க்குறில், உயிர்மெய்க்குறில்
- நெடில் = உயிர்நெடில், உயிர்மெய் நெடில்
- ஒற்று = மெய்யெழுத்து, ஆய்த எழுத்து
அசை என்றால் என்ன
- ழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது அசை எனப்படும்.
- அசை எத்தனை வகைப்படும்?
- அசை இரண்டு வகைப்படும். அவை,
- நேரசை
- நிரையசை
நேரசை என்றால் என்ன
- குறில் அல்லது நெடில் எழுத்து, தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் நேரசையாகும்.
- (எ.கா.)
- ந, நம், நா, நாம்.
நிரையசை என்றால் என்ன
- இரண்டு குறில்எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தாலும் நிரையசையாகும்.
- (எ.கா.)
- கட, கடல், கடா, கடாம்.
சீர் என்றால் என்ன
- ஓர்அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்ந்து அமைவது சீர்.
- சீர் நான்கு வகைப்படும்.
- சீர்களை ஓரசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என வகைப்படுத்துவர்.
தளை என்றால் என்ன
- சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவதைத் தளை என்பர்.
- முதல் சீரின் இறுதியிலும் வரும்சீரின் முதலிலும் உள்ள அசைகள் எவ்வகை அசைகள் என்பதன் அடிப்படையில், தளைகள் ஏழு வகைப்படும்.
- தளை ஏழு வகைப்படும்.
அடி என்றால் என்ன
- இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது அடி ஆகும்.
- அடி எத்தனை வகைப்படும் = அடி ஐந்து வகைப்படும்.
தொடை என்றால் என்ன
- செய்யுளில் ஓசைஇன்பமும் பொருள்இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமையே தொடை ஆகும்.
- தொடை எத்தனை வகைப்படும் = தொடை எட்டு வகைப்படும்.
- முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை.
- இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை.
- இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது இயைபு.
- ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது அந்தாதித் தொடை.
பா வகைகள் எத்தனை வகைப்படும்
- பா நான்கு வகைப்படும்.
- அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா.
- வெண்பா = வெண்பா செப்பல் ஓசை உடையது. அறநூல்கள் பலவும் வெண்பாவால் அமைந்தவை.
- ஆசிரியப்பா = ஆசிரியப்பா அகவல் ஓசை உடையது. சங்க இலக்கியங்கள் பலவும் ஆசிரியப்பாவால் அமைந்தவை.
- கலிப்பா = கலிப்பா துள்ளல் ஓசை உடையது. கலித்தொகை கலிப்பாவால் ஆனது.
- வஞ்சிப்பா = வஞ்சிப்பா தூங்கல் ஓசை உடையது.
- பல்துறைக் கல்வி
- ஆன்ற குடிப்பிறத்தல்
- வேற்றுமை
- நிறுத்தற்குறிகள்
- திருக்கேதாரம்
- பாடறிந்து ஒழுகுதல்
- நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
- தமிழர் இசைக்கருவிகள்
- தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள்
- இணைச்சொற்கள்
- வளம் பெருகுக
- மழைச்சோறு
- கொங்குநாட்டு வணிகம்
- காலம் உடன் வரும்
- புணர்ச்சி