8TH TAMIL அணி இலக்கணம்
8TH TAMIL அணி இலக்கணம்
- செய்யுளுக்கு அழகு தருவன அணிகள் ஆகும்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பிறிது மொழிதல் அணி என்றால் என்ன
- உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.
- பிறிது மொழிதல் அணியில் “உவமை” மட்டுமே இடம்பெறும்.
- எ.கா:
- கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து
- இத்திருக்குறள், “நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது. கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது” என்று உவமையை மட்டும் கூறுகிறது.
- இதன்மூலம் ஒவ்வொருவரும் தமக்கு உரிய இடத்தில் வெற்றி பெறமுடியும்;
- தமக்குப் பொருத்தமில்லாத இடத்தில் வெற்றிபெறுதல் இயலாது என்னும் கருத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
- எனவே இக்குறட்பாவில் பிறிதுமொழிதல் அணி இடம்பெற்றுள்ளது.
வேற்றுமை அணி என்றால் என்ன
- இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமையணி எனப்படும்.
- எ.கா:
- தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
- இத்திருக்குறளில் முதலில் நெருப்பு, கொடுஞ்சொல் ஆகிய இரண்டும் சுடும்தன்மை உடையவை என்று கூறப்படுகிறது.
- பின்னர், நெருப்பினால் சுட்ட காயம் ஆறிவிடும்;
- உள்ளத்தில் ஏற்பட்ட வடு ஆறாது என்று இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு கூறப்படுகிறது.
- எனவே இது வேற்றுமை அணி ஆகும்.
இரட்டுற மொழிதல் அணி என்றால் என்ன
- ஒரு சொல் அல்லது தொடர் இருபொருள் தருமாறு அமைவது இரட்டுறமொழிதல் என்னும் அணியாகும்.
- இதனைச் சிலேடை என்றும் கூறுவர்.
- எ.கா:
ஓடும் இருக்கும் அதனுள்வாய் வெளுத்திருக்கும் நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே தீங்காயது இல்லா திருமலைரா யன்வரையில் தேங்காயும் நாயும்நேர் செப்பு |
- இப்பாடலின் பொருள் தேங்காய், நாய் ஆகிய இரண்டுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளது.
- தேங்காயில் ஓடு இருக்கும்; தேங்காயின் உட்பகுதி வெண்மை நிறத்தில் இருக்கும்; தேங்காய் கோணல் இல்லாமல் குலையாகத் தொங்கும்.
- நாய் சிலசமயம் ஓடிக்கொண்டிருக்கும்; சிலசமயம் ஓரிடத்தில் படுத்து இருக்கும்; அதன் வாயின் உட்பகுதி வெண்மையாக இருக்கும்; குரைப்பதற்கு வெட்கப்படாது.
- இவ்வாறு இப்பாடல் இரண்டு பொருள் தரும்படி பாடப்பட்டுள்ளதால் இஃது இரட்டுறமொழிதல் அணி ஆகும்.
- கல்வி அழகே அழகு
- புத்தியைத் தீட்டு
- பல்துறைக் கல்வி
- ஆன்ற குடிப்பிறத்தல்
- வேற்றுமை
- நிறுத்தற்குறிகள்
- திருக்கேதாரம்
- பாடறிந்து ஒழுகுதல்
- நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
- தமிழர் இசைக்கருவிகள்
- தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள்
- இணைச்சொற்கள்
- வளம் பெருகுக
- மழைச்சோறு
- கொங்குநாட்டு வணிகம்
- காலம் உடன் வரும்
- புணர்ச்சி