8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்

8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்

8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்
8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்

8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்

  • உலகத்திலேயே மிகமிக வியப்பானது மனித மூளை.
  • அதன் செயல்பாடுகள் விந்தையானவை மட்டுமல்ல, புதிரானவை.
  • மருத்துவ மேதைகளும் அறிவியலாளர்களும் இதனைத் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
  • நமது உடல் இயக்கத்திற்கும் மன இயக்கத்திற்கும் காரணமானது = மூளை.

மனித மூளை

  • பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் = மனித மூளை.
  • மனித மூளைக்குள் இருக்கும் செல்களின் எண்ணிக்கை = ட்ரில்லியன்
  • அவற்றில் நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

மூளையின் அமைப்பு

  • மூளை எங்கிருந்து முளைக்கிறது = முதுகுத்தண்டு.
  • முதுகுத் தண்டில் இருந்து மடிப்பு மடிப்பாக உருவாகிறது.
  • மூளை மூன்று பாகங்களாக பிரித்துள்ளனர். அவை,
    • உள் மூளை
    • நடு மூளை
    • பின் மூளை
  • மூக்கு, கண் போன்றவற்றின் முடிவு எங்குள்ளது = முன்மூளையில்.
  • நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துவது = சிறுமூளை.
    • நம் உடலில் அசைவுகளை கட்டுப்படுத்துவது = சிறுமூளை
    • உடலில் உணர்சிகளின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது = சிறுமூளை.
8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்
8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்

மூளையின் உணவு

  • மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு தேவைப்படும் இரத்தம் (குருதி) = 800 மி.லி.
  • உடலின் மொத்த எடையில் ஐம்பதில் ஒரு பங்கு எடை கொண்டது = மூளை.
  • உடலுக்கு தேவையான “குருதி, உயிர்வளி” ஆகியவற்றின் மொத்தத் தேவையில் ஐந்தில் ஒரு பங்கை மூளை மட்டுமே எடுத்துக் கொள்கிறது.
  • தனக்கான ஆற்றலை சேமித்து வைக்க மூளைக்கு இடம் இல்லை.
  • அதனால் மூளைக்கு “குருதி ஓட்டம்” எப்போதும் இருந்துக் கொண்டே இருக்க வேண்டும்.

முதுகுத்தண்டின் குறுக்கு இணைப்புகள்

  • தும்மல், இருமல், சூடான பாத்திரத்தை தொட்டால் உடனே கையை விலக்கிக் கொள்வது = தன்னிச்சையான செயல்கள்.
  • உடலின் தன்னிச்சையான செயல்களுக்கு காரணமாக இருப்பவை = முதுகுத்தண்டின் குறுக்கு இணைப்புகள்.

மூளையில் இட வல மாற்றம்

  • மூளைக்கு செல்லும் நரம்புகளில் இட – வல மாற்றம் நிகழ்கிறது.
  • உடலின் வலப்பக்கச் செய்திகள் = மூளையின் இடப்பக்கத்திற்கு செல்லும்.
  • உடலின் இடதுபக்கச் செய்திகள் = மூளையின் வலப்பக்கத்திற்கு செல்லும்.

மூளையின் இடது பகுதி

  • மக்களில் பெரும்பாலானோர் வலது கை பழக்கம் உள்ளவர்களாக இருக்க காரணம், மூளையின் இடது பகுதி பாதிப்பே ஆகும்.
  • மனிதன் பேச, எழுத, கணக்கிட, தர்க்க ரீதியில் சிந்திக்க காரணமாக இருப்பது = மூளையின் இடது பகுதியே.
  • அறிவாற்றல், பிரச்சனைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பாக இருப்பது போன்றவற்றிற்கு காரணம் = நமது மூளையின் இடப்பக்கம்
  • “மொழி அறிவிற்கு” காரணமாக இருப்பது = மூளையின் இடப்பகுதி.
  • இடது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் = பட்டயக் கணக்கர்கள், கணக்கு ஆசிரியர்கள், இந்திய ஆட்சிப் பணிக்கு படித்தவர்கள் போன்றோர்.

மூளையின் வலது பகுதி

  • வடிவங்களை உணர்தலுக்கு காரணம் = மூளையின் வலது பக்கம்
  • கவிதை எழுதுவது, நடனம் ஆடுவது, படம் போடுவது, நடிப்பது போன்ற “கலை” தொடர்பான நிகழ்வுகளுக்கு காரணமாக இருப்பது = மூளையின் வலது பகுதி.
  • “ஞாபகம், மறதி” போன்றவற்றிற்கு காரணமாக இருப்பது = மூளையின் வலது பகுதி.
  • வலது பகுதி ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பவர்கள் = நடிகர்கள், பாடகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கருவிகளை கையாளுபவர்கள்.

உணர்ச்சிகளின் பிறப்பிடம்

  • உணர்ச்சிகளின் பிறப்பிடம் = மூளை தான்.
  • மூளை – உடல் இணைந்து செயல்படுவதால் வெளிப்படுவது = உணர்ச்சிகள்.

இருவகை நினைவுகள்

  • மனித மூளையில் நினைவுகள் இரண்டு வகைகளில் சேமிக்கப்படுகிறது. அவை,
    • குறுகிய கால நினைவு
    • நிலையான நினைவு

தன்னுணர்வு

  • சின்னக் குழந்தையில் இருந்து நான் என்ற உணர்வு நிச்சயம் நம் எல்லோருக்கும் இருக்கும்.
  • இந்த தன்னுணர்வு தான் “மனதின் செயல்பாடு” என்கின்றனர்.

மனநிலை மாற்றம்

  • ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மனிதர்கள் எத்தனை நிமிடத்திற்கு ஒரு முறை மனநிலை மாற்றம் ஏற்படுகிறது = 90 நிமிடங்கள்.
  • சராசரி மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை ஆண்டுகள் தூங்குகிறான் = 20 ஆண்டுகள்.
  • சராசரி மனிதன் தன் வாழ்நாளில் எவ்வளவு கனவுகளை காண்கிறான் = மூன்று இலட்சம் கனவுகள்.

கனவு என்பது யாது

  • மனதில் உள்ள நினைவு அலைகளில் அன்றைய அல்லது சமீபத்திய நினைவுகளை வகைப்படுத்தி வரிசைப்படுத்தும் செயலே = கனவு.
  • அலமாரியில் உள்ள பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துத் திருப்பி வைப்பது போன்றது = கனவு.

மூளையும் கற்றலும்

  • கற்க கற்க நம் நியூரான்களின் இணைப்புச் சிக்கல்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன;
  • மூளையின் எடை கொஞ்சம் கூடுகிறது;
  • அதில் உள்ள புரோட்டீன் அளவு அதிகரிக்கிறது;
  • கற்பது, அனுபவ அறிவு ஆகியவை மூளையின் பல பகுதிகளைப் பாதிக்கின்றன என்பது உறுதி.

எழுத்தாளர் சுஜாதா ஆசிரியர் குறிப்பு

8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்
8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்
  • சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன் என்பதாகும்.
  • இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் புனைவுக்கதைகள், திரைப்படக் கதை வசனம் எனப் பலதுறைகளில் பணியாற்றியுள்ளார்.
  • மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் இவர் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார்.
  • என் இனிய எந்திரா, மீண்டும் ஜீனோ, ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், தூண்டில் கதைகள், தலைமைச்செயலகம் உள்ளிட்ட பலநூல்களை எழுதியுள்ளார்.
  • தலைமைச்செயலகம் என்ற நூலின் ஆசிரியர் = சுஜாதா.

 

 

 

 

8TH TAMIL

 

 

1 thought on “8TH TAMIL தலைக்குள் ஒர் உலகம்”

Leave a Reply