சமசீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாட புத்தகம் அழகர் கிள்ளைவிடு தூது

அழகர் கிள்ளைவிடு தூது

தூது:

 • தூது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
 • தலைவன் ஒருவனைக் கண்டு காதல் கொண்ட தலைவி ஒருத்தி தன் காதலையும் பிரிவாற்றாமையும் வெளிப்படுத்த விரும்பித் தலைவன்பால் தூது அனுப்புதல்.
 • தூதின் இலக்கணம் கூறும் நூல் = இலக்கண விளக்க நூற்பா
 • தூது வெண்டளை விரவிய கலிவென்பாவால் பாடப்படும்.
 • தூதாக செல்பவை = அன்னம், மயில், கிளி, குயில், வண்டு, நெஞ்சம், முகில், தென்றல், மான், தமிழ்.

அழகர் கிள்ளைவிடு தூது:

 • திருமாலிருஞ்சோலை மலையில் கோவில் கொண்டிருக்கும் அழகரிடத்து பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை என்ற புலவர் கிளியைத் தூது விடுவதாக அமைத்துப் பாடியிருப்பது அழகர் கிள்ளை விடு தூது ஆகும்.
 • இந்நூல் 250 ஆண்டுகளுக்கு முந்தைய நூலாகும்.
 • இந்நூல் காப்பு வெண்பா ஒன்றையும் 239 கண்ணிகளையும் உடையது.
 • பாட்டின் இரண்டு அடி கண்ணி எனப்படும்.

ஆசிரியர் குறிப்பு:

 • சொக்கநாதப் பிள்ளை மரபினர் பலபட்டடைக்கணக்கு என்னும் ஒருவகைப் பணியைச் செய்து வந்தனர்.
 • இவர் தந்தையார் பெயர் சொக்கலிங்கம் பிள்ளை.
 • நூல்கள் = மதுரை மும்மணிக்கோவை, தென்றல் விடு தூது போன்றவை.

சொற்பொருள்:

அரி – சிங்கம் அரன் – சிவன்
அவுணன் – இரணியன் காயம் – உடம்பு
சேனை – சைனியம் பண்ணும் தொழில் – காத்தல் தொழில்
படி – உலகம் பாதவம் – மருத மரம்
பெண் – அகலிகை பாரம் – பளு
நாரி – சீதாப்பிராட்டி வேலை – கடல்

இலக்கணக்குறிப்பு:

 • வன்காயம் – பண்புத்தொகை
 • அரைத்திடும் சேனை – எதிர்காலப் பெயரெச்சம்
 • மலர்க்கால் – உவமைத்தொகை
 • வன்கானகம் – பண்புத்தொகை

Leave a Comment

Your email address will not be published.