சமசீர் கல்வி 12 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள்

நூல் குறிப்பு:

  • திருக்குறள் என்பது அடையடுத்த கருவியாகுபெயர்
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பெரும்பிரிவுகளை கொண்டது.
  • அறத்துப்பால் = பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என நான்கு இயல்களும் 38 அதிகாரங்களையும் கொண்டது.
  • பொருட்பால் = அரசியல், அங்கவியல், ஒழிபியல் என் 3 இயல்களும், 70 அதிகாரங்களையும் கொண்டது.
  • இன்பத்துப்பால் = களவியல், கற்பியல் என் 2 இயல்களும், 25அதிகாரங்களையும் உடையது.
  • திருக்குறளின் வேறு பெயர்கள் = முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், பொருளுரை, முதுமொழி.
  • திருவள்ளுவரின் வேறு பெயர்கள் = நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யில் புலவர்.

சொற்பொருள்:

வையகம் – உலகம் நன்றி – நன்மை
தினை – மிகச் சிறிய அளவு பனை – ஒரு பேரளவு
சால்பு – நிறைபண்பு கேண்மை – நட்பு
மாசு – குற்றம் விழுமம் – துன்பம்
அகழ்வாரை – தோண்டுபவரை தலை – சிறந்த அறமாகும்
பொறுத்தல் – மன்னிக்க இன்மை – வறுமை
ஓரால் – நீக்குதல் வன்மை – வலிமை
மடவார் – அறிவிலிகள் பொறை – பொறுத்தல்
விருந்து – புதியராய் வந்தவர் நிறை – சால்பு
பொன்றும் – அழியும் அற்றம் – அழிவு
அரண் – கோட்டை ஓரீஇ – நீக்கி
ஒட்பம் – அறிவுடைமை கூம்பல் – குவிதல்
அதிர – நடுங்கும் படி நோய் – துன்பம்
திட்பம் – வலிமை ஊறு – பழுதுபடும் வினை
ஒரால் – செய்யாமை ஆறு – நெறி
கோள் – துணிபு கொட்க – புலப்படும் படி
வீறு – செய்தல் திண்ணியர் – வலியர்

இலக்கணக்குறிப்பு:

செய்யாமல் – எதிர்மறை வினையெச்சம் செய்த – இறந்தகால பெயரெச்சம்
வையகமும் வானகமும் – எண்ணும்மை தூக்கார் – முற்றெச்சம்
தூக்கின் – எதிர்கால பெயரெச்சம் செயின் – வினையெச்சம்
தெரிவார் – வினையாலணையும் பெயர் சால்பு – பண்புப்பெயர்
மறவற்க – எதிர்மறை வியங்கோள் வினைமுற்று எழுபிறப்பும் – முற்றும்மை
துடைத்தவர் – வினையாலணையும் பெயர் உள்ள – வினையெச்சம்
கொன்றார் – வினையாலணையும் பெயர் அகழ்வார் – வினையாலணையும் பெயர்
பொறுத்தல் – தொழிற்பெயர் விருந்து – பண்பாகு பெயர்
ஒரால், பொறை – தொழிற்பெயர் நீங்காமை – எதிர்மறை தொழிற்பெயர்
போற்றி – வினையெச்சம் ஒருத்தார் – வினையாலணையும் பெயர்
செய்தாரை – வினையாலணையும் பெயர் துறந்தார் – வினையாலணையும் பெயர்
இன்னா சொல் – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் உண்ணாது – எதிர்மறை வினையாலணையும் பெயர்
அற்றம் – தொழிற்பெயர் ஓரீஇ – சொல்லிசை அளபெடை
உய்ப்பது – வினையாலணையும் பெயர் எண்பொருள் – பண்புத்தொகை
கூம்பல் – தொழிற்பெயர் அறிகல்லாதவர் – வினையாலணையும் பெயர்
அஞ்சுவது – வினையாலணையும் பெயர் அஞ்சல் – தொழிற்பெயர்
அதிர – வினையெச்சம் உடையார் – குறிப்பு வினைமுற்று
மனத்திட்பம் – ஆறாம் வேற்றுமைத்தொகை ஒல்காமை – தொழிற்பெயர்
ஏற்றா – ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் சொல்லுதல் – தொழிற்பெயர்
யார்க்கும் – முற்றும்மை எளிய – குறிப்பு வினைமுற்று
எய்தி – வினையெச்சம் மாண்டார் – வினையாலணையும் பெயர்

Leave a Comment

Your email address will not be published.