குடியரசு

குடியரசு

குடியரசு

குடியரசு என்றால் என்ன

        ஒரு நாட்டின் அரசாங்கமானது இரண்டு வகைப்படும். ஒன்று மன்னராட்சி (Monarchy) மற்றொன்று மக்களாட்சி (Democratic). இங்கிலாந்து போன்ற நாடுகளில் பரம்பரை பரம்பரையாக மன்னர் குடும்பத்தின் வாரிசுகள் அடுத்தடுத்து ஆட்சி செய்வர். மற்றொன்று இந்தியா போன்ற நாடுகளில் மக்களால தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஆட்சி செய்யும்.

            குடியரசு (Republic) ஆட்சி என்றால் அந்த நாட்டிலே மக்களே மேலாண்மை பெற்றவர்கள். சிறப்புரிமை பெற்றவர்கள் என்று அங்கு யாருமில்லை. அங்கே எந்தவிதமான பேதமும் இன்றி குடிமக்கள் அனைவருக்கும் அரசாங்க அலுவலகங்கள் அனைத்தும் பொதுவானதாகும் (A republic also means two more things: one, vesting of political sovereignty in the people and not in a single individual like a king; second, the absence of any privileged class and hence all public offices being opened to every citizen without any discrimination).

       “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆன அரசு” என்று குடி அரசு முறையை கூலே என்பவர் வரையறை செய்கிறார். “குடி அரசு என்பது அரசன் போன்ற தனியொரு மனிதனிடம் உச்சநிலை அதிகாரம் இல்லாமல், மக்களிடம் அதிகாரம் இருக்கின்ற நாடு” என்று நீதிபதி ஹிதாயத்துல்லா கூறியுள்ளார். எனவே மக்களாட்சிக் குடி அரசு எனும் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும், மக்கள் பிரதிநிதிகளால் ஆன அரசும் கொண்ட அமைப்பு என நாம் பொருள் கொள்ளலாம். பெடரலிஸ்ட் என்னும் நூலில் மடிசன் என்பார் கூறுவது, “மக்களிடமிருந்து நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அதிகாரத்தை பெறுகின்ற அரசே குடியரசு; குடியரசினை நிர்வகிக்கின்றவர்கள், மக்கள் விரும்புகின்ற வரையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அல்லது அவர்கள் நன்னடத்தை உடையவர்களாய் இருக்கின்றவரை பதவிகளை வகிக்கலாம்” என்றார்.

       இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் (Constitution of India) முகவுரையில், “குடியரசு” எனக் குறிப்பிடப்பட்டதின் பொருளானது, இந்தியாவின் தலைவரான குடிஅரசுத் தலைவரானவர் (President), மக்களால் தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகளால் தேர்வுசெய்யப்படுகிறார் என்பதாகும். அவர் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார்.

 

 

 

 

Leave a Reply