11TH TAMIL இலக்கண நூல்கள்

11TH TAMIL இலக்கண நூல்கள்

11TH TAMIL இலக்கண நூல்கள்
11TH TAMIL இலக்கண நூல்கள்

11TH TAMIL இலக்கண நூல்கள்

  • தமிழில் இலக்கண நூல்கள் செய்யுள் வடிவத்தையும், உரைநடை வடிவத்தையும் கொண்டுள்ளன.
  • பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் செய்யுள் வடிவில் அமைந்த இலக்கண நூலாகும்.
  • தொல்காப்பியத்தை பின்பற்றி பல இலக்கண நூல்கள் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டன.

தொல்காப்பியம் நூல் குறிப்பு

  • தொல்காப்பியம் ஐந்திலக்கண நூலாகும்.
  • தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்கள் = 3 (எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம்)
  • தொல்காப்பியத்தில் உள்ள இயல்கள் = 27
  • ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 9 இயல்கள் உள்ளன.
  • இந்நூல், எழுத்துகளாலும் சொற்களாலும் உருவாக்கப்படும் செய்யுளுக்கும் அதில் இடம்பெறும் பொருளுக்கும் இலக்கண வரையறைகளைத் தந்துள்ளது.
  • தொல்காப்பியப் பொருளதிகாரம், பழந்தமிழரின் நாகரிகத்தையும் அவர்தம் வாழ்வியல் நடைமுறைகளையும் எடுத்தியம்புகிறது.
  • இவ்வதிகாரத்தில் அமைந்துள்ள இயல்களிலிருந்து இயற்கை, சுற்றுப்புறச்சூழல், அக்கால மக்களின் அகவுணர்வுகள், பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளமுடிகிறது.
  • போர் நெறிகள் குறித்த செய்திகளைப் புறப்பொருள் பற்றிய இயலிலும் அன்பின் ஐந்திணை அவற்றின் முதல், கரு, உரிப்பொருள் ஆகியவற்றை அகப்பொருள் பற்றிய இயல்களிலும் அறியமுடிகிறது.
  • இந்நூலுக்கு இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பேராசிரியர் முதலானோர் உரை எழுதியுள்ளனர்.
  • தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகள் = 7
  • புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் புறத்திணைகள் = 12
  • புறநானூற்றில் துறை, திணை வகுக்கப்பட்டது = புறப்பொருள் வெண்பாமாலை அடிப்படையில்
11TH TAMIL இலக்கண நூல்கள்
11TH TAMIL இலக்கண நூல்கள்

தொல்காப்பியம்

வ.எண்

எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருளதிகாரம்
1 நூல் மரபு கிளவியாக்கம்

அகத்திணையியல்

2

மொழி மரபு வேற்றுமையியல் புறத்தினையியல்
3 பிறப்பியல் வேற்றுமை மயங்கியல்

களவியல்

4

புணரியல் விளிமரபு கற்பியல்
5 தொகைமரபு பெயரியல்

பொருளியல்

6

உருபியல் வினையியல் மெய்ப்பாட்டியல்
7 உயிர்மயங்கியல் இடையியல்

உவமவியல்

8

புள்ளி மயங்கியல் உரியியல் செய்யுளியல்
9 குற்றியலுகரப்புணரியல் எச்சவியல்

மரபியல்

இறையனார் அகப்பொருள் நூல் குறிப்பு

  • இந்நூலினை எழுதியவர் = இறையனார்.
  • அகப்பொருள் சார்ந்தது இந்நூல்.
  • இறையனார் அகப்பொருள் நூலின் வேறுபெயர் = களவியல்
  • “களவியல்” எனப்படும் நூல் = இறையனார் அகப்பொருள்.
  • இறையனார் அகப்பொருள், அகம் என்பதனைக் களவு, கற்பு என்று இரண்டாகப் பிரிக்கிறது.
  • இந்நூலுக்கான மூலம் கிடைக்கவில்லை.
  • எனினும், நூலுக்குரிய முழுமையான உரைப்பகுதி கிடைத்துள்ளது.
  • தமிழில் தோன்றிய முதல் உரைநூல் = இறையனாரகப்பொருள் உரை

புறப்பொருள் வெண்பாமாலை நூல் குறிப்பு

  • புறப்பொருளைப்பற்றி வெண்பா யாப்பில் கூறும் நூல் புறப்பொருள் வெண்பா மாலை.
  • இது புறப்பொருளுக்குரிய இலக்கணத்தையும் இலக்கியத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
  • புறப்பொருள் வெண்பாமாலை நூலினை இயற்றியவர் ஐயனாரிதனார்.
  • போர் பற்றிய செய்திகளை இந்நூலில் அறியமுடிகிறது.
  • வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய பன்னிரு திணைகளின் இலக்கணத்தைத் துறைவகையோடு புறப்பொருள் வெண்பாமாலை விளக்குகின்றது.
  • தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகள் = 7
  • புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் புறத்திணைகள் = 12
  • புறநானூற்றில் துறை, திணை வகுக்கப்பட்டது = புறப்பொருள் வெண்பாமாலை அடிப்படையில்
11TH TAMIL இலக்கண நூல்கள்
11TH TAMIL இலக்கண நூல்கள்

புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடும் திணைகள்

வெட்சி

பகைவரது ஆநிரை கவர்தல்
கரந்தை

பகைவர் கவர்ந்த ஆநிரை மீட்டல்

வஞ்சி

பகை நாட்டின் மீது போர் தொடுத்தல்
காஞ்சி

பகைவரை எதிர்த்துப் போரிடுதல்

நொச்சி

பகைவரிடம் இருந்து மதிலைக் காத்தல்
உழிஞை

பகைவர் நாட்டின் மதிலை சுற்றி வளைத்தல்

தும்பை

பகை மன்னர் இருவரும் போரிடுதல்
வாகை

போரில் வெற்றி பெற்ற மன்னரைப் புகழ்தல்

பாடாண்

ஒருவருடைய கல்வி, புகழ், வீரம், செல்வம் முதலியவற்றைப் போற்றுதல்
பொதுவியல்

வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளுக்கு பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுதல்

கைக்கிளை

ஒருதலைக் காமம்
பெருந்திணை

பொருந்தாக் காமம்

யாப்பருங்கலக்காரிகை நூல் குறிப்பு

  • யாப்பிலக்கணம் கற்பாருக்கு உறுதுணையாக அமைவது யாப்பருங்கலக் காரிகை.
  • காரிகை என்பதற்குப் பெண் எனவும் பொருள் உண்டு.
  • யாப்பருங்கலக்காரிகை நூலின் ஆசிரியர் = அமிர்தசாகரர்.
  • இந்நூலுள் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என்னும் இயல்கள் அமைந்துள்ளன.
  • ‘காரிகை கற்றுக் கவிபாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்’ என்னும் கூற்று, யாப்பருங்கலக் காரிகையின் பெருமையையும் அதன் யாப்பைக் கற்பதின் கடினத்தையும் உணர்த்தும்.
  • அமிர்தசாகரர் இயற்றிய மற்றொரு நூல் = யாப்பருங்கலம்.
  • இந்நூலுக்கு உரை எழுதியவர் குணசாகரர்.

வீரசோழியம் நூல் குறிப்பு

  • தொல்காப்பியத்திற்குப் பின்னர், ஐந்திலக்கண அமைப்பிலமைந்த நூல், வீரசோழியம்.
  • ஐந்திலக்கண நூல் = வீரசோழியம்.
  • இந்நூல், ஐந்து அதிகாரத்தையும் பத்துப் படலத்தையும் கொண்டுள்ளது.
  • வீரசோழியம் நூலின் ஆசிரியர் புத்தமித்திரர்.
  • வீரசோழியம் வடமொழி, தமிழ்மொழி ஆகிய இரண்டுக்கும் இலக்கணம் கூற முற்படுகிறது.
  • வடமொழி, தமிழ்மொழி இரண்டிற்க்கும் இலக்கணம் கூறும் நூல் = வீரசோழியம்

தண்டியலங்காரம் நூல் குறிப்பு

11TH TAMIL இலக்கண நூல்கள்
11TH TAMIL இலக்கண நூல்கள்
  • தமிழில் அணியிலக்கணம் கூறும் நூல்களுள் தண்டியலங்காரம் முதல் நூலாகும்.
  • தண்டி என்பவரால் வடமொழியிலுள்ள காவ்யதர்சம் என்னும் நூலைத்தழுவி, இந்நூல் எழுதப்பெற்றது.
  • இந்நூல் பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என்னும் இயல்களையும், 125 நூற்பாக்களையும் கொண்டுள்ளது.
  • பொதுவணியியலில் செய்யுள் வகை, அதன் இலக்கணம் ஆகியவை சொல்லப்பட்டுள்ளன.
  • பொருளணியியலில், தன்மையணி முதல் பாவிகவணி வரை 35 அணிகளின் இலக்கணமும் கூறப்பட்டுள்ளன.
  • சொல்லணியியலில் மடக்கின் வகைகள், அவற்றின் இலக்கணம், சித்திரகவிகளின் இலக்கணம், வழு, வழுவமைதி ஆகியவை சொல்லப்பட்டுள்ளன.
  • பெருங்காப்பியத்தின் இலக்கணமும் இந்நூலுள் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்நூலுக்குப் பின்னர், சந்திராலோகம், குவலாயனந்தம், மாறனலங்காரம் போன்ற அணியிலக்கண நூல்கள் தோன்றியுள்ளன.
  • தண்டியலங்காரம் நூல் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்

நேமிநாதம் நூல் குறிப்பு

  • எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும் மற்றொரு நூல் நேமிநாதம்.
  • எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும் நூல்கள் = தொல்காப்பியம், நேமிநாதம்
  • இந்நூல், தொல்காப்பிய எழுத்திலக்கணத்தையும் சொல்லிலக்கணத்தையும் சுருக்கமாகக் கூறுவதனால் ‘சின்னூல்’ என்று அழைக்கப்படுகிறது.
  • “சின்னூல்” என்று அழைக்கப்படும் = நேமிநாதம்
  • வெண்பாவால் அமைந்த நேமிநாதம் நூலைக் கற்றபின்னரே, தொல்காப்பியத்தைக் கற்கும் நடைமுறை இருந்தமை இந்நூலின் சிறப்பைப் புலப்படுத்தும்.
  • தொல்காப்பியம் கற்பதற்கு முன்னர், கற்க வேண்டிய நூல் = நேமிநாதம்.
  • நேமிநாதம் நூலினை எழுதியவர் குணவீரபண்டிதர் ஆவார்.
  • நேமிநாதர் எழுதிய மற்றொரு நூல் = வச்சணந்திமாலை (அல்லது) வெண்பாப் பாட்டியல்
  • வெண்பாப்பாட்டியல் நூலின் வேறு பெயர் = வச்சணந்திமாலை.

நன்னூல் நூல் குறிப்பு

  • தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக மிகுதியாகப் பயன்பாட்டிலிருக்கும் இலக்கண நூல், நன்னூல்.
  • தொல்காப்பியம், தெளிவும் எளிமையும் கொண்டு விளங்க, நன்னூல் செறிவும் சுருக்கமும் கொண்டு விளங்குகிறது.
    • தெளிவும் எளிமையும் கொண்டு விளங்கும் இலக்கண நூல் = தொல்காப்பியம்
    • செறிவும் சுருக்கமும் கொண்டு விளங்கும் இலக்கண நூல் = நன்னூல்
  • நன்னூலில் எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் உள்ளன.
  • இந்நூலுள் அமைந்துள்ள பொதுப் பாயிரம் (முகவுரை) நல்ல நூலுக்குரிய இலக்கணம், பத்து அழகு, பத்துக்குற்றம், நல்லாசிரியர், ஆசிரியர் ஆகாதவர் ஆகியோரது இலக்கணம், நல்ல மாணாக்கர், மாணாக்கர் ஆகாதவரின் இயல்புகள், பாடங்கற்பிக்கும் முறை, கற்கும் முறை ஆகியன குறித்து விரிவாகக் கூறியுள்ளது.
  • தொல்காப்பியத்தின் பாயிர உரை மேற்கோள்கள், இந்நூலில் இலக்கணச் சூத்திரங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
  • நன்னூலின் எழுத்ததிகாரத்திலுள்ள பதவியல், தொல்காப்பியத்தின் வளர்நிலையாக அமைந்துள்ளது.
  • இவ்வியல், சொற்களின் கட்டமைப்பைத் தெளிவாக விளக்குகிறது.
  • பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் எனச் சொற்களைப் பகுத்து விளக்குகிறது.
  • இந்நூலின் சொல்லதிகாரத்தில் இறுதியாக இடம்பெற்றுள்ள,

பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல கால வகையி னானே

  • வழக்கிழந்த இலக்கணக் கருத்துகளை நீக்குவதும் புதிய வழக்குகள் சிலவற்றை ஏற்றுக்கொள்வதும் தவறல்ல; காலந்தோறும் ஏற்படும் மாற்றத்திற்குட்பட்டதே இலக்கணம் எனக்கூறி அமைகிறது.
  • இந்நூலுக்கு மயிலைநாதர், சங்கர நமச்சிவாயர், சிவஞான முனிவர், ஆறுமுக நாவலர் முதலானோர் உரை கண்டுள்ளனர்.
  • 11 ஆம் வகுப்பு நன்னூல் பாயிரம்

நம்பியகப்பொருள் நூல் குறிப்பு

  • நம்பி என்பவரால் இயற்றப்பெற்ற இந்நூல் அகப்பொருள் சார்ந்தது.
  • இந்நூல் அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என ஐந்தியலாகப் பகுக்கப்பட்டுள்ளது.
  • தொல்காப்பியம், அகப்பொருள் இலக்கணத்தைத் கதை மாந்தர்களின் கூற்றுவகையாகக் கூற, நம்பியகப்பொருள் அகப்பொருள் இலக்கணத்தைத் துறைவகையாக விளக்கிக் கூறுகிறது.
  • அகஇலக்கிய நூல்களுக்கு நம்பியகப்பொருள் நூல் அடிப்படையிலேயே துறை வகுக்கப்பட்டுள்ளது.

இலக்கண விளக்கம் நூல் குறிப்பு

  • இந்நூல் எழுத்து, சொல், பொருள் என மூவதிகாரமாகப் பகுக்கப்பட்டு, ஐந்திலக்கணமும் கூறுகிறது .
  • தொல்காப்பியத்தைப் பின்பற்றி விரிவாக எழுதப்பட்டிருப்பதால் இந்நூலைக் ‘குட்டித்தொல்காப்பியம்’ என்றும் அழைப்பர்.
  • இந்நூலை இயற்றியவர் வைத்தியநாத தேசிகர் ஆவார்.

தொன்னூல் விளக்கம் நூல் குறிப்பு

  • வீரமாமுனிவர் இயற்றிய இலக்கண நூல் = தொன்னூல் விளக்கம்.
  • இந்நூல் ஐந்திலக்கண நூல் ஆகும்.
  • எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணத்தை உடையதாகும் தொன்னோல் விளக்கம்.
  • இந்நூலாசிரியர், தம் நூலில் நன்னூல் கருத்துகளையே பெரும்பான்மையாக எடுத்தாண்டுள்ளார்.

பாட்டியல் நூல்கள்

  • சிற்றிலக்கியங்களின் அமைப்பு முதலானவற்றை விளக்க, பாட்டியல் நூல்கள் தோன்றின.
  • பாட்டியல் நூல்களுள் முதன்மையானதாகக் கருதப்பெறுவது பன்னிரு பாட்டியல். இஃது எழுத்தியல், சொல்லியல், இனவியல் என மூவியலாக அமைந்துள்ளது.
  • ‘வச்சணந்தி மாலை’ என்னும் வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கப் பாட்டியல் என்பன, பாட்டியல் நூல்களுள் சிலவாகும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்

  • அவன், இவன், உவன் என்பனவற்றுள் “உவன்” என்னும் சுட்டுப்பெயர் இன்று வழக்கில் இல்லை.
  • நறுமணம் என்னும் பொருளைக் குறித்த “நாற்றம்” என்னும் சொல், இன்று விரும்பத்தகாத மணத்தைக் குறிக்கிறது.
  • தமிழில் மொழிமுதல் வாரா எழுத்துக்கள் = ல, ர. ஆனால் இன்று பலருடைய பெயர்களின் முதல் எழுத்துக்களாய் உள்ளன.

 

 

 

Leave a Reply