11TH TAMIL சி வை தாமோதரனார்

11TH TAMIL சி வை தாமோதரனார்

11TH TAMIL சி வை தாமோதரனார்

11TH TAMIL சி வை தாமோதரனார்

  • ‘தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்’ என்று போற்றப்படுபவர் = சி.வை. தாமோதரனார்.
  • இவர் இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.
  • தமிழ்நாட்டுக்கு வருகைபுரிந்து, தம் இருபதாவது வயதிலேயே ‘நீதிநெறி விளக்கம்’ என்னும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியிட்டு, அறிஞர்களின் கவனத்தைக் கவர்ந்தார்.
  • 1868ஆம் ஆண்டு, தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையையும் பின்னர்க் கலித்தொகை, இறையனார் அகப்பொருள், வீரசோழியம் உள்ளிட்ட பல நூல்களையும் செம்மையாகப் பதிப்பித்துப் புகழ்கொண்டார்.

சி வை தாமோதரனார்

  • கட்டளைக் கலித்துறை, நட்சத்திர மாலை, சூளாமணி வசனம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
  • ஆறாம் வாசகப்புத்தகம் உள்ளிட்ட பள்ளிப்பாடநூல்களையும் எழுதினார்.
  • அவருடைய தமிழ்ப்பணியைக் கண்ட பெர்சிவல் பாதிரியார், அவரைத் தாம் நடத்திய ‘தினவர்த்தமானி’ என்னும் இதழுக்கு ஆசிரியராக்கினார்.
  • கும்பகோணத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி, 1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
  • தாமோதரனார் எந்தப் பணி ஆற்றினாலும் தமது சொந்தப் பணியாகக் கருதிக் கடமையாற்றினார்.

 

 

 

 

Leave a Reply