6TH TAMIL இன்பத்தமிழ்
6TH TAMIL இன்பத்தமிழ்
- நமது தாய்மொழியாகிய தமிழைத் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன
- தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாக ஆகிவிட்டது.
- பாரதிதாசன் தமிழைப் பலவாறாகப் போற்றுகிறார்.
- கண்ணே! மணியே! என்று குழந்தையைக் கொஞ்சுவதும் உண்டு.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பாரதிதாசன் பாடல்
தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! – இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! – இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! – பாரதிதாசன் |
அருஞ்சொற்பொருள்
- நிருமித்த = உருவாக்கிய
- சமூகம் = மக்கள் குழு
- விளைவு = வளர்ச்சி
- அசதி = சோர்வு
பாடல் பொருள்
- பாரதிதாசன் தமிழுக்கு என்னென்ன பெயர் வைத்து அழைக்கிறார் = அமுது, நிலவு, மணம்.
- தமிழை எங்கள் உயிருக்கு இணையானது என்கிறார் பாரதிதாசன்.
- தங்கள் சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான நீரை போன்றது தமிழ் என்கிறார் பாரதிதாசன்.
- எங்கள் வாழ்விற்காக உருவாக்கப்பட்ட ஊர் தமிழ் மொழி என்கிறார் பாரதிதாசன்.
- “இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்” என்று பாடியவர் = பாரதிதாசன்.
- விளைவுக்கு = நீர்
- அறிவுக்கு = தோள்
- இளமைக்கு = பால்
- புலவர்க்கு = வேல்
பாரதிதாசன் ஆசிரியர் குறிப்பு
- பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம்.
- பாரதியாரின் கவிதைகள் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.
- தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளைப் பாடுபொருளாகப் பாடியுள்ளார்.
- எனவே, இவர் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார்.
- இவர் பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.
- இப்பாடல், ‘பாரதிதாசன் கவிதைகள்’ என்ற நூலில் ‘தமிழ்’ என்னும் தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது.
- அழியாச் செல்வம்
- வாழ்விக்கும் கல்வி
- பள்ளி மறுதிறப்பு
- ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- ஒரு வேண்டுகோள்
- கீரைப்பாத்தியும் குதிரையும்
- பேசும் ஓவியங்கள்
- தமிழ் ஒளிர் இடங்கள்
- தொழிற்பெயர்
- விருந்தோம்பல்
- வயலும் வாழ்வும்
- திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
- திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
- அணி இலக்கணம்
- புதுமை விளக்கு
- அறம் என்னும் கதிர்
- ஒப்புரவு நெறி
- அணி இலக்கணம்
- திருக்குறள்
- மலைப்பொழிவு
- தன்னை அறிதல்
- கண்ணியமிகு தலைவர்
- பயணம்
- ஆகுபெயர்