7TH TAMIL அறம் என்னும் கதிர்
7TH TAMIL அறம் என்னும் கதிர்
- இளமைப்பருவம் எதனையும் எளிதில் கற்றுக்கொள்ளும் பருவமாகும்.
- இப்பருவத்தில் கல்வியை மட்டுமல்லாது நற்பண்புகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்
- அது வாழ்வு முழுமைக்கும் பயனளிக்கும்.
- அறநெறிகளை இளமைப்பருவத்தில் கற்றுக்கொள்வதை உழவுத்தொழிலோடு ஒப்பிட்டுக் கூறுகிறார் = முனைப்பாடியார்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அறநெறிச்சாரம் பாடல்
இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர் பைங்கூழ் சிறுகாலைச் செய் – முனைப்பாடியார் |
அருஞ்சொற்பொருள்
- வித்து = விதை
- ஈன = பெற
- நிலன் = நிலம்
- களை = வேண்டாத செடி
- பைங்கூழ் = பசுமையான பயிர்
- வன்சொல் = கடுமையான சொல்
பாடலின் பொருள்
- விளைநிலம் = இனிய சொல்லையே விளைநிலமாகக் கொள்ளவேண்டும்
- விதை = ஈகை என்னும் பண்பை விதையாக விதைக்க வேண்டும்
- களை = வன்சொல் என்னும் களையை நீக்க வேண்டும்
- எரு = உண்மை பேசுதல் என்னும் எருவினை இடவேண்டும்
- நீர் = அன்பாகிய நீரைப் பாய்ச்ச வேண்டும்
- கதிர் = அறமாகிய கதிரைப் பயனாகப் பெற முடியும்.
முனைப்பாடியார் ஆசிரியர் குறிப்பு
- முனைப்பாடியார் திருமுனைப்பாடி என்னும் ஊரைச் சேர்ந்த சமணப்புலவர்.
- இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு.
- முனைப்பாடியார் எழுதிய நூல் = அறநெறிச்சாரம்.
அறநெறிச்சாரம் நூல் குறிப்பு
- முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் 225 பாடல்களைக் கொண்டது.
- அறநெறிகளைத் தொகுத்துக் கூறுவதால் இந்நூல் அறநெறிச்சாரம் எனப் பெயர்பெற்றது.
- தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்
- கப்பலோட்டிய தமிழர்
- வழக்கு
- கலங்கரை விளக்கம்
- கவின்மிகு கப்பல்
- தமிழரின் கப்பற்கலை
- ஆழ்கடலின் அடியில்
- இலக்கியவகைச் சொற்கள்
- இன்பத்தமிழ்க் கல்வி
- அழியாச் செல்வம்
- வாழ்விக்கும் கல்வி
- பள்ளி மறுதிறப்பு
- ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- ஒரு வேண்டுகோள்
- கீரைப்பாத்தியும் குதிரையும்
- பேசும் ஓவியங்கள்
- தமிழ் ஒளிர் இடங்கள்
- தொழிற்பெயர்
- விருந்தோம்பல்