7TH TAMIL ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
7TH TAMIL ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- ஈ, பூ, கை ஆகிய எழுத்துகளைக் கவனியுங்கள்.
- இவை ஒவ்வொன்றிற்கும் பொருள் உண்டு
- இவ்வாறு ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ஓரெழுத்து ஒருமொழி
- தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டவர் = பவணந்தி முனிவர்.
- தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிடும் நூல் = நன்னூல்.
- “நன்னூல்” எனும் நூலின் ஆசிரியர் = பவணந்தி முனிவர்.
- நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை = 42.
- நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகளுள்,
- 40 = நெடில் எழுத்துக்கள்
- 2 = குறில் எழுத்துக்கள் (நொ,து)
- நொ,து ஆகிய இரண்டு சொற்களைத்தவிர ஏனைய நாற்பது சொற்களும் நெடில் எழுத்துகளாக அமைந்தவை ஆகும்.
ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும்
- ஆ = பசு
- ஈ = கொடு
- ஊ = இறைச்சி
- ஏ = அம்பு
- ஐ = தலைவன்
- ஓ = மதகுநீர் தாங்கும் பலகை
- கா = சோலை
- கூ = பூமி
- கை = ஒழுக்கம்
- கோ = அரசன்
- சா = இறந்துபோ
- சீ = இகழ்ச்சி
- சே = உயர்வு
- சோ = மதில்
- தா = கொடு
- தீ = நெருப்பு
- தூ = தூய்மை
- தே = கடவுள்
- தை = தைத்தல்
- நா = நாவு
- நீ = முன்னிலை ஒருமை
- நே = அன்பு
- நை = இழிவு
- நோ = வறுமை
- பா = பாடல்
- பூ = மலர்
- பே = மேகம்
- பை = இளமை
- போ = செல்
- மா = மாமரம்
- மீ = வான்
- மூ = மூப்பு
- மே = அன்பு
- மை = அஞ்சனம்
- மோ = மோத்தல்
- யா = அகலம்
- வா = அழைத்தல்
- வீ = மலர்
- வை = புல்
- வௌ = கவர்
- நொ = நோய்
- து = உண்
பகுபதம் என்றால் என்ன
- சிறுசிறு உறுப்புகளாகப் பிரிக்கும் வகையில் அமையும் சொற்களைப் பகுபதங்கள் என்பர்.
- பிரிக்கப்படும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் எனக் குறிப்பிடுவர்.
- எ.கா:
- வேலன், படித்தான்
- வேலன் என்னும் சொல்லை வேல் + அன் எனப் பிரிக்கலாம்.
- படித்தான் என்னும் சொல்லை படி + த் + த் + ஆன் எனப் பிரிக்கலாம்.
பகுபதம் எத்தனை வகைப்படும்
- பகுபதம் இரண்டு வகைப்படும். அவை,
- பெயர்ப் பகுபதம்
- வினைப் பகுபதம்
பெயர்ப் பகுபதம் என்றால் என்ன
- பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் பெயர்ப்பகுபதம் ஆகும்.
பெயர்ப் பகுபதம் எத்தனை வகைப்படும்
- பெயர்ப் பகுபதம் ஆறு வகைப்படும்.
- இதனை, பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படுத்துவர்.
- எ.கா:
- பொருள் – பொன்னன் (பொன் + அன்)
- இடம் – நாடன் (நாடு + அன்)
- காலம் – சித்திரையான் (சித்திரை + ஆன்)
- சினை – கண்ணன் (கண் + அன்)
- பண்பு – இனியன் (இனிமை + அன்)
- தொழில் – உழவன் (உழவு + அன்)
வினைப் பகுபதம் என்றால் என்ன
- பகுபதமாக அமையும் வினைச்சொல் வினைப்பகுபதம் ஆகும்.
- எ.கா:
- உண்கின்றான் – உண் + கின்று + ஆன்
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்
- பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை,
- பகுதி
- விகுதி
- இடைநிலை
- சந்தி
- சாரியை
- விகாரம்
பகுதி என்றால் என்ன
- பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி ஆகும்.
- வினைப்பகுபதத்தின் பகுதி கட்டளையாகவே அமையும்.
விகுதி என்றால் என்ன
- பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால், எண், இடம் ஆகியவற்றையோ, முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும்.
இடைநிலை என்பது யாது
- பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது இடைநிலை ஆகும்.
- காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு = இடைநிலை.
சந்தி என்பது யாது
- பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்படும்.
சாரியை என்றால் என்ன
- பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும்.
விகாரம் என்றால் என்ன
- பகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.
பகுபத உறுப்புகள் எடுத்துக்காட்டு
- வந்தனன் – வா(வ) + த் (ந்) + த் + அன் + அன்
- வா = பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்
- த் = சந்தி. இது ந் எனத் திரிந்து இருப்பது விகாரம்
- த் = இறந்தகால இடைநிலை
- அன் = சாரியை
- அன் = ஆண்பால் வினைமுற்று விகுதி
பகாப்பதம் என்றால் என்ன
- பகுபத உறுப்புகளாகப் பிரிக்கமுடியாத சொல் பகாப்பதம் எனப்படும்.
- பகாப்பதம் அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லாக இருக்கும்.
- எ.கா:
- மரம், கழனி, உண், எழுது
- இவற்றை மேலும் சிறிய உறுப்புகளாகப் பிரிக்க முடியாது.
பகாப்பதம் எத்தனை வகைப்படும்
- பகாப்பதம் நான்கு வகைப்படும். அவை,
- பெயர்ப் பகாப்பதம்
- வினைப் பகாப்பதம்
- இடைப் பகாப்பதம்
- உரி பகாப்பதம்
- எ.கா:
- பெயர்ப் பகாப்பதம் = நிலம், நீர், நெருப்பு, காற்று
- வினைப் பகாப்பதம் = நட, வா, படி, வாழ்
- இடைப் பகாப்பதம் = மன், கொல், தில், போல்
- உரிப் பகாப்பதம் = உறு, தவ, நனி, கழி
- குற்றியலுகரம் குற்றியலிகரம்
- காடு
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
- விலங்குகள் உலகம்
- இந்திய வனமகன்
- நால்வகைக் குறுக்கங்கள்
- திருக்குறள்
- புலி தங்கிய குகை
- பாஞ்சை வளம்
- தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்
- 7TH TAMIL ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- 7TH TAMIL ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- 7TH TAMIL ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- 7TH TAMIL ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- 7TH TAMIL ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- கப்பலோட்டிய தமிழர்
- வழக்கு
- கலங்கரை விளக்கம்
- கவின்மிகு கப்பல்
- தமிழரின் கப்பற்கலை
- ஆழ்கடலின் அடியில்
- இலக்கியவகைச் சொற்கள்
- இன்பத்தமிழ்க் கல்வி
- அழியாச் செல்வம்
- வாழ்விக்கும் கல்வி
- பள்ளி மறுதிறப்பு