7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்

7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்

7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்

 

7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்

  • தென்னாட்டில் உள்ள தூத்துக்குடி அந்நாளில் எந்நாட்டவரும் அறிந்த துறைமுக நகரம்.
  • அந்நகரின் பெருமையைத் தம் பெருமையாக்கிக் கொண்டவர் சிதம்பரனார்
  • அவர் தன்னலம் துறந்த தனிப்பெரும் தொண்டர்.
  • இந்தியக் கடலாட்சி எமதே எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறிமயங்கக் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார்.
  • நாட்டிலே சுதந்திர உணர்ச்சியை ஊட்டியதற்காக அவரைச் சிறைக்கோட்டத்தில் மாட்டி மகிழ்ந்தது ஆங்கில அரசாங்கம்.
  • சிறைவாசம் தீர்ந்த பின்னர்த் தூத்துக்குடிக்குத் திரும்பினார் சிதம்பரனார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

கொற்கைப் பெருந்துறையின் வழித்தோன்றல்

  • கொற்கைப் பெருந்துறையின் வழித்தோன்றல் = தூத்துக்குடி துறைமுகம்.
  • கொற்கைக்கடல் முத்துவளம் கொழித்தது.
  • “வசையொழிய வாழ்வாரே வாழ்வார்” என்று கூறியவர் = திருவள்ளுவர்.
7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்
7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்

சுதேசக் கப்பல் கம்பனி

  • சுதேசக் கப்பல் கம்பெனி துவங்கப்பட்ட இடம் = தூத்துக்குடி.
  • மதுரையில் தமிழ்ச் சங்கத்தை அமைத்தவர் = பாண்டித்துரை தேவர்.
  • சுதேசக் கப்பல் கம்பெனியின் தலைவராக இருந்தவர் = பாண்டித்துரை தேவர்.
  • சுதேசக் கப்பல் கம்பெனியில் செயலாளராக பணியாற்றியவர் = வ.உ.சிதம்பரனார்.
  • சுதேசக் கப்பல் வெள்ளோட்டம் பார்பதற்காக சென்ற இடம் = தூத்துக்குடியில் இருந்து கொழும்பு துறைமுகம்.

நூறாயிரம் ரூபாய்

  • ஆங்கில அரசின் சார்பில், சுதேசக் கப்பல் கம்பெனியில் இருந்து சிதம்பரனார் விலகிக் கொள்ள நூறாயிரம் ரூபாய் தருவதாக கூறப்பட்டது.

திலகரும் பாரதியாரும்

  • “சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன்” என்று கூறியவர் பாலகங்காதர திலகர்.
  • “வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம்” என்றவர் = பாரதியார்.
7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்
7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்

சிறைத் தண்டனை

  • வெள்ளையர்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி, ஆங்கில அரசு சிதம்பரனாருக்கு “இரட்டைத் தீவாந்தர” தண்டனையை விதித்தது.
  • அப்பீல் கோர்ட்டில் இத்தண்டனை சிறை தண்டனையாக மாற்றப்பட்டது.
  • ஆறு ஆண்டுகள் கோவைச் சிறையிலும், கண்ணனூர்ச் சிறையிலும் அடைக்கப்பட்டார் சிதம்பரனார்.

சங்க இலக்கியங்கள்

  • தொல்காப்பியத்தைப் படித்துப் படித்து என் தொல்லை எல்லாம் மறந்தேன் என்றார் சிதம்பரனார்.
  • “இன்னிலை”யைக் கற்று என் இன்னல்களை எல்லாம் வென்றேன் என்றார் சிதம்பரனார்.

மனம் போல் வாழ்வு

  • ஆங்கில எழுத்தாளர் “ஆலன்” என்பவற்றின் நூலினை தமிழில் “மனம் போல் வாழ்வு” என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்தார் சிதம்பரனார்.
  • “மனம் போல் வாழ்வு” என்ற நூலின் ஆசிரியர் = சிதம்பரனார்.
7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்
7TH TAMIL கப்பலோட்டிய தமிழர்

மெய்யறிவு மெய்யறம்

  • வ.உ.சிதம்பரனார் சிறையில் இருந்த பொழுது எழுதிய நூல்கள் = மெய்யறம், மெய்யறிவு.

நீதிபதி பின்ஹே

  • நீதிபதி பின்ஹே = “’சிதம்பரனாரின் பிரசங்கத்தையும், பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர்பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்” என்று சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி பின்ஹேவின் கூற்று.

இரா.பி.சேது ஆசிரியர் குறிப்பு

  • இரா.பி.சேது தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப் பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
  • இவரைச் சொல்லின் செல்வர் எனப் போற்றுவர்.
  • செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே என்பர்.
  • இவரது தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும்.
  • ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம்- ஊரும் பேரும், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.
  • வ.உ. சிதம்பரனார் பேசுவதாக அமைந்த நம் பாடப்பகுதி கடற்கரையினிலே என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
  • “கடற்கரையினிலே” என்னும் நூலின் ஆசிரியர் = இரா.பி.சேதுப்பிள்ளை.

 

 

 

7TH TAMIL

 

Leave a Reply