7TH TAMIL பாஞ்சை வளம்
7TH TAMIL பாஞ்சை வளம்
- தமிழ்நாட்டில் பல வகையான நாட்டுப்புற இலக்கியங்கள் வழங்கி வருகின்றன.
- அவற்றுள் கதைப்பாடல் என்பது கதை தழுவிய நிலையில் அமையும் பாடல் ஆகும்
- அது சமூகக்கதைப் பாடல், வரலாற்றுக்கதைப் பாடல், புராணக்கதைப் பாடல் எனப் பலவகைப்படும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- சூரன் = வீரன்
- பொக்கிஷம் = செல்வம்
- சாஸ்தி = மிகுதி
- விஸ்தாரம் = பெரும்பரப்பு
- வாரணம் = யானை
- பரி = குதிரை
- சிங்காரம் = அழகு
- கமுகு = பாக்கு
பாடலின் பொருள்
- கட்டபொம்மன் ஆட்சி செய்யும் பகுதி = பாஞ்சாலங்குறிச்சி.
- மயில்கள் நாட்டின் வளத்தைக் கூறி விளையாடும்.
- பாஞ்சாலங்குறிச்சியில் முயலானது தன்னை பிடிக்க வரும் வேட்டை நாயை எதிர்த்து விரட்டி விடுகிறது.
- பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று நீர் அருந்துகின்றன.
கட்டபொம்மன் கதைப்பாடல்கள்
- கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பல வடிவங்களில் வழங்கி வருகின்றன.
- அவை பலரால் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
- “வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்” என்னும் நூலினை தொகுத்தவர் = நா. வானமாமலை.
7TH TAMIL