பொது தமிழ் பகுதி ஆ பதினெண்கீழ்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பொருளடக்கம்

 1. நாலடியார்
 2. நான்மணிக்கடிகை
 3. இன்னா நாற்பது
 4. இனியவை நாற்பது
 5. திருக்குறள்
 6. திரிகடுகம்
 7. ஆசாரக்கோவை
 8. பழமொழி நானூறு
 9. சிறுபஞ்சமூலம்
 10. முதுமொழிக் காஞ்சி
 11. ஏலாதி
 12. கார் நாற்பது
 13. ஐந்திணை ஐம்பது
 14. ஐந்திணை எழுபது
 15. திணைமொழி ஐம்பது
 16. திணைமாலை நூற்றைம்பது
 17. கைந்நிலை, இன்னிலை
 18. களவழி நாற்பது

நாலடியார்

நாலடியாரின் உருவம்:

 • ஆசிரியர்= சமண முனிவர்கள்
 • தொகுத்தவர் = பதுமனார்
 • பாடல்கள் = 400
 • பொருள் = அறம்
 • பா வகை = வெண்பா

பெயர்க்காரணம்:

 • நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது

வேறு பெயர்கள்:

 • நாலடி
 • நாலடி நானூறு
 • வேளாண் வேதம்
 • திருக்குறளின் விளக்கம்

நூல் பகுப்பு:

 • இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது
 • அறத்துப்பால் = 13 அதிகாரங்கள்
 • பொருட்பால் = 24 அதிகாரங்கள்
 • இன்பத்துப்பால் = 3 அதிகாரங்கள்

நூலின் சிறப்பு:

 • முப்பெரும் அற நூல்கள் = 1) திருக்குறள் 2)நாலடியார் 3)பழமொழி நானூறு
 • இந்நூலை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
 • நூலின் பெருமையை கூறும் அடிகள்
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

 

பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்

பொதுவான குறிப்புகள்:

 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் இது.
 • நாலடியாரில் முதல் இயல் = துறவறவியல்
 • நூலை தொகுத்தவர் = பதுமனார்
 • நூலை முப்பாலாக பகுத்தவர் = தருமர்
 • நூலிற்கு உரை கண்டவர் = தருமர், பதுமனார்
 • முத்தரையர் பற்றி கூறுகிறது இந்நூல்
 • நாலடியாரின் உரைகளை உள்ளடக்கியது “நாலடியார் உரைவளம்” என்னும் நூல்.

முக்கிய அடிகள்:

 • கல்வி கரையில; கற்பவர் நாள்சில
 • ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப்
  பால்உண் குருகின் தெரிந்து
 • கல்வி அழகே அழகு

நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகையின் உருவம்:

 • ஆசிரியர் = விளம்பி நாகனார்
 • ஊர் =விளம்பி
 • பாடல்கள் = 2 + 104
 • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

 • நான்கு + மணி + கடிகை = நான்மணிக்கடிகை
 • கடிகை = துண்டு, ஆபரணம், தோள்வளை. நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற  தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.

கடவுள் வாழ்த்து:

 • முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.
 • கடவுள் வாழ்த்து திருமலைப் பற்றியது.

பொதுவான குறிப்புகள்:

 • ஒவ்வொரு பாடலிலும் நாலு கருத்துக்கள் உள்ளன.
 • நூலில் வடமொழி கலப்பு அதிகம்.
 • இந்நூல் தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
 • ஜி.யு.போப் இந்நூலின் 7,100 ஆகிய இரு பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
 • இந்நூலின் மிகப் பிரபலமான அடி = “யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”

முக்கிய அடிகள்:

 • யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி
 • இந்நிலத்தே மன்னுதல் வேண்டின் இசைநடுக
 • தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க
  வெல்வது வேண்டின் வெகுளிவிடல்
 • இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
 • வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
 • ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்
 • கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர்இல்
 • மனைக்கு விளக்கம் மடவாள்
  மடவாளுக்கு விளக்கம் புதல்வர்
  புதல்வர்க்கு விளக்கம் கல்வி
  கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு

இன்னா நாற்பது

இன்னா நாற்பதின் உருவம்:

 • ஆசிரியர் = கபிலர்
 • பாடல்கள் = 1 + 40
 • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

 • இன்னா = துன்பம். இன்னது இன்னது இன்னா என நாற்பது பாடல்களில் கூறுவதால்  இன்னா நாற்பது எனப்படுகிறது.

கடவுள் வாழ்த்து:

 • கடவுள் வாழ்த்தில் சிவன், பலராமன், திருமால், முருகன் என்னும் நான்கு கடவுளரையும் வணங்காமை துன்பம் எனக் கூறுகிறார்.

பொதுவான குறிப்புகள்:

 • இந்நூல் துன்பம் கொடுக்கும் செயல்களை தொகுத்துக் கூறும் நூல்.
 • இந்நூல் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.
 • கபிலரிடம் சைவவைணவ பேதம் இல்லை.
 • சங்க கால கபிலரும், இவரும் வேறு வேறு.
 • இந்நூலில் 164 இன்னாத செயல்கள் கூறப்பட்டுள்ளன.

ஐந்து கபிலர்:

 • பாரி மன்னனை பாடிய சங்கக் கபிலர்
 • இன்னா நாற்பது பாடிய கபிலர்
 • பதினொன்றாம் திருமுறையில் கூறப்படும் கபிலதேவநாயனார்
 • பன்னிரு பாட்டிலில் சில பாடல்களை பாடிய கபிலர்
 • அகவற்பா பாடிய கபிலர்.

முக்கிய அடிகள்:

 • உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்புஇன்னா
 • தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா
 • ஊனைத் தின்று ஊனைப்பெருக்கல் முன்னின்னா
 • குழவிகள் உற்றபிணி இன்னா
 • இன்னா பொருள் இல்லார் வண்மை புரிவு

இனியவை நாற்பது

இனியவை நாற்பதின் உருவம்:

 • ஆசிரியர் = பூதஞ்சேந்தனார்
 • பாடல்கள் = 1 + 40
 • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

 • இவை இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.

கடவுள் வாழ்த்து:

 • சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகள் மூவரையும் வணங்குதல் இனிது எனக் கூறுகிறது.

பொதுவான் குறிப்புகள்:

 • இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.
 • பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல் இனியவை நாற்பது.

முக்கிய அடிகள்:

 • ஊனைத்தின்று ஊனைப்பெருக்காமை முன் இனிதே
 • ஒப்பமுடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது
 • வருவாய் அறிந்து வழங்கல் இனிது
 • தடமெனத் பனணத் தோள் தளிர் இயலாரை
 • விடமென்று உணர்த்தல் இனிது

திருக்குறள்

திருக்குறளின் விளக்கம்:

 • ஆசிரியர் = திருவள்ளுவர்
 • பாவகை = குறள் வெண்பா

பெயர்க்காரணம்:

 • திரு + குறள் = திருக்குறள்
 • குறுகிய அடிகளை கொண்டதால் இப்பெயர் பெற்றது.
 • திருக்குறள் என்பது “அடையடுத்த கருவியாகு பெயர்”

திருக்குறளின் சிறப்பு கூறுபவை:

திருக்குறளின் முன்னோடி எனப்படுவது புறநானூறு
திருக்குறளின் விளக்கம் எனப்படுவது நாலடியார்(சமண முனிவர்கள்)
திருக்குறளின் பெருமையை கூறுவது திருவள்ளுவ மாலை
திருக்குறளின் சாரம் எனப்படுவது நீதிநெறிவிளக்கம்(குமரகுருபரர்)
திருக்குறளின் ஒழிபு எனப்படுவது திருவருட்பயன்(உமாபதி சிவம்)

திருக்குறளின் வேறு பெயர்கள்:

 • திருவள்ளுவம்
 • தமிழ் மறை
 • பொதுமறை
 • முப்பால்
 • பொய்யாமொழி
 • தெய்வநூல்
 • வாயுறைவாழ்த்து
 • உத்தரவேதம்
 • திருவள்ளுவப் பயன்(நச்சினார்க்கினியர்)
 • தமிழ் மாதின் இனிய உயர் நிலை
 • அறஇலக்கியம்
 • அறிவியல் இலக்கியம்
 • குறிக்கோள் இலக்கியம்
 • நீதி இல்லகியத்தின் நந்தாவிளக்கு

திருவள்ளுவரின் வேறு பெயர்கள்:

 • நாயனார்
 • தேவர்(நச்சினார்க்கினியர்)
 • முதற்பாவலர்
 • தெய்வப்புலவர்(இளம்பூரனார்)
 • நான்முகன்
 • மாதானுபாங்கி
 • செந்நாப்போதார்
 • பெருநாவலர்
 • பொய்யில் புலவன்

திருவள்ளுவரின் காலம்:

 • கி.மு.1 = வி.ஆர்.ஆர்.தீட்சிதர்
 • கி.மு.31 = மறைமலை அடிகள்(இதனை நாம் பின்பற்றுகிறோம்)
 • கி.மு.1-3 = இராசமாணிக்கனார்

நூல் பகுப்பு முறை:

 • பால் = 3(அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்)
 • அதிகாரம் = 133
 • மொதப்பாடல்கள் = 1330
 • இயல்கள் = 9

அறத்துப்பால்:

 • அறத்துப்பால் 38 அதிகாரங்களையும் 4 இயல்களையும்  உடையது.
 • பாயிரவியல் = 4 அதிகாரங்கள்
 • இல்லறவியல் = 20 அதிகாரங்கள்
 • துறவறவியல் = 13 அதிகாரங்கள்
 • ஊழியல் = 1 அதிகாரங்கள்

பொருட்பால்:

 • பொருட்பாலில் 70 அதிகாரங்களையும் 3 இயல்களையும்  உள்ளது.
 • அரசியல் = 25 அதிகாரங்கள்
 • அங்கவியல் = 32 அதிகாரங்கள்
 • குடியியல் = 13 அதிகாரங்கள்

இன்பத்துப்பால்:

 • இன்பத்துப்பால் 25 அதிகாரங்களையும் 2 இயல்களையும்  உடையது.
 • களவியல் = 7 அதிகாரங்கள்
 • கற்பியல் = 18 அதிகாரங்கள்

திருக்குறளின் உரைகள்:

 • திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்
தருமர் மணக்குடவர், தாமத்தர், நச்சர்,
பரிதி, பரிமே லழகர், – திருமலையர்,
மல்லர், பரிப்பெருமாள், கலிங்கர் வள்ளுவர்நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்
 • திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் முந்தியவர் = தருமர்
 • திருக்குறளுக்கு உரை எழுதியவருள் காலத்தால் பிந்தியவர் = பரிமேழலகர்
 • மு.வ, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை ஆகியோரும் உரை எழுதியுள்ளனர்.

பொதுவான குறிப்புகள்:

 • திருக்குறள் “அ”கரத்தில் தொடங்கி “ன”கரத்தில் முடிகிறது.
 • சிவசிவ வெண்பா, தினகர வெண்பா, வடமலை வெண்பா போன்ற பல நூல்கள் திருக்குறளின் பெருமையை கூறுகின்றன.
 • திருக்குறளை முதலில் பதிப்பித்தவர் = மலயத்துவான் மகன் ஞானப்பிரகாசம் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.
 • தை 2ம் நாள் = திருவள்ளுவர் தினம்
 • தமிழிற்கு “கதி” எனப்படுவது = க – கம்பராமாயணம், தி – திருக்குறள்
 • திருக்குறளில் 12000 சொற்கள் உள்ளன. இவற்றில் வட சொற்கள் ஐம்பதிற்கும் குறைவு. ஏறத்தாழ அவை 0.4% ஆகும்.

திருக்குறள் மொழிப்பெயர்ப்பு;

 • இலத்தின் = வீரமாமுனிவர்
 • ஜெர்மன் = கிரால்
 • ஆங்கிலம் = ஜி.யு.போப், வ.வே.சு.ஐயர், இராஜாஜி
 • பிரெஞ்ச் = ஏரியல்
 • வடமொழி =அப்பாதீட்சிதர்
 • இந்தி = பி.டி.ஜெயின்
 • தெலுங்கு = வைத்தியநாத பிள்ளை

சிறப்பு:

 • பாரதியார் வள்ளுவரை பாராட்டுதல்
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகல் கொண்ட தமிழ்நாடு
 • பாரதியார் மேலும், “கம்பனைப் போல், வள்ளுவனைப் போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணும் பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை” என்கிறார்.
 • மனோன்மணியம் சுந்தரனார் வள்ளுவரை புகழ்தல்
வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் ருணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி

சுத்தானந்தபாரதி கூறுவது

எம்மதம் எவ்வினமும் எந்நாளும்
சம்மதம் என்று ஏற்கும் தமிழ்வேதம்

திரு.வி.க கூற்று:

 • திருக்குறள் ஒரு வகுப்பாற்கோ, ஒரு மதத்தாற்கோ, ஒரு நிறத்தாற்கோ, ஒரு மொழியார்க்கோ, ஒரு நாட்டாற்கோ உரியதன்று; அது மன்பதைக்கு உலகுக்குப் பொது.

கி.ஆ.பெ.விஸ்வநாதம் கூற்று:

 • திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஓர் நூல் தோன்றியிராவிட்டால் தமிழ்மொழி உலகிற்கு தெரிந்திருக்காது.

முக்கிய அடிகள்:

 • அறத்தான் வருவதே இன்பம்
 • மனத்துக்கண் மாசிலன் ஆகுதல் அறம்
 • திருவேறு தெள்ளியராதலும் வேறு
 • பெண்ணிற் பெருந்தக்க யாவுள்
 • ஊழிற் பெருவழி யாவுள
 • முயற்சி திருவினை யாக்கும்
 • இடுக்கண் வருங்கால் நகுக
 • கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
 • அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
 • ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்

திரிகடுகம்

திரிகடுகத்தின் உருவம்:

 • ஆசிரியர் = நல்லாதானர்
 • பாடல்கள் = 100 + 1
 • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

 • சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பான. அதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும்.
 • திரி = மூன்று
 • கடுகம் = காரமுள்ள பொருள்

ஆசிரியர் குறிப்பு:

 • இவர் திருநெல்வேலி மாவட்டம் “திருத்து” என்னும் ஊரை சேர்ந்தவர்.
 • “செருஅடுதோள் நல்லாதன்” எனப் பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது

பொதுவான குறிப்புகள்:

 • “திரிகடுகம்=சுக்கு, மிளகு, திப்பிலி” என திவாகர நிகண்டு கூறுகிறது
 • இந்நூலின் கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றி கூறுகிறது.
 • இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் “இம்மூன்றும்” அல்லது “இம்மூவர்” என்னும் சொல் வருகிறது.
 • மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.
 • இந்நூலில் 66 பாடகளில் நன்மை தருபவை எவை என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
 • இந்நூலில் 34 பாடல்களில் தீமை தருபவை எவை எனக் கூறப்பட்டுள்ளது.
 • கணவன் மனைவி வாழ்க்கை பற்றியே 35 பாடல்கள் உள்ளன.
 • 300 அறக்கருத்துக்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய அடிகள்:

 • நெஞ்சம் அடங்குதல் வீடாகும்
 • வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
 • தாளாளன் என்பான் கடன்பட வாழாதான்
 • நிறை நெஞ்சம் உடையானை நல்குரவு அஞ்சும்
 • நட்பின் கொழுநனை பொய் வழங்கின் இல்லாகும்
 • கொண்டான் குறிப்பரிவாள் பொண்டாட்டி

ஆசாரக்கோவை

ஆசாரக்கோவையின் உருவம்:

 • ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார்
 • பாடல்கள் = 100
 • பாவகை = பல்வேறு வெண்பா வகைகள்

பெயர்க்காரணம்:

 • கொள்ளத்தக்க ஆசாரம் என்றும் தள்ளத் தக்க ஆசாரம் என்றும் இரு நோக்கில் ஆசிரியர் அருளியுள்ளார்.
 • நீராடல், ஆடல் அணிதல், உணவு முறைமை, உண்ணும் திசை போன்றவை கொள்ளத் தக்க ஆசாரங்கள்.
 • எச்சிலுடன் செய்யத் தகாதவை, நின்று கிடந்தது உண்ணாமை ஆகியவை தள்ளத் தக்க ஆசாரங்கள்.

பொதுவான குறிப்புகள்:

 • ஆசாரம் = ஒழுக்கம், கோவை = தொகுப்பு
 • வட நூல்களான “சுகர ஸ்மிருதி, போதாயான தர்ம சூத்திரம்” போன்ற நூல்களின் சாரமே இந்நூல்.
 • ஒழுக்கங்களை அடுக்கிக் கூறுகிறது.
 • பல வெண்பாக்கள் கலந்து பாடப்பட்ட நூல் இது.
 • “கயத்தார் பெருவாயின் முள்ளியார்” என அழைக்கப்படுபவர்.
 • இந்நூலின் கடவுள் வாழ்த்து சிவபெருமானைப் பற்றியது.

மேற்கோள்:

 • விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை
 • இவர்க்கு ஊன் கொடுத்தல்லால் உண்ணாரே என்றும்
  ஒழுக்கம் பிழையா தவர்
 • பகல் தெற்கு நோக்கார் இராவடக்கு நோக்கார்
 • பகற்பொய்யார் தீயினுள் நீர்
 • உமிழ்வும் உயர்ந்துழி ஏறலும் பாக்கும்
 • வகையில் உறையும் வளர்ச்சியும் ஐந்தும்
  புணரார் பெரியார் அகத்து

பழமொழி நானூறு

பழமொழி நானூறின் உருவம்:

 • ஆசிரியர் = முன்றுறை அரையனார்
 • பாடல்கள் = 400
 • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

 • ஒரு கதையோ, வரலாற்று நிகழ்வோ கட்டி உரைக்கப்பட்டு பாடலின் இறுதியில் பழமொழி நீதி சுட்டப்படுவதாலும், நானூறு பாடல்களை உடையதாலும் பழமொழி நானூறு எனப் பெயர்பெற்றது.

வேறு பெயர்கள்:

 • பழமொழி
 • உலக வசனம்

ஆசிரியர் குறிப்பு:

 • முன்றுறை என்பது ஊர் பெயர் என்றும், அரையன் என்ற பட்டம் பெற்றவர் என்றும் கூறுவர் சிலர்.

நூல் பகுப்பு முறை:

 • இந்நூலின் பெரும் பிரிவுகள் = 5, இயல்கள் = 34
 • பிரிவு 1 = கல்வி, ஒழுக்கம், புகழ் பற்றியது (9 இயல்கள்)
 • பிரிவு 2 = சான்றோர், நட்பின் இயல்பு பற்றியது (7  இயல்கள்)
 • பிரிவு 3 = முயற்சி, பொருள் பற்றியது (8  இயல்கள்)
 • பிரிவு 4 = அரசர், அமைச்சர், பாடல் பற்றியது (6 இயல்கள்)
 • பிரிவு 5 = இல்வாழ்க்கை, உறவினர், வீடுநெறி பற்றியது (4 இயல்கள்)

பொதுவான குறிப்புகள்:

 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள முப்பெரும் அறநூல்கள் = திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு
 • தொல்காப்பியர் பழமொழியை “முதுமொழி” என்கிறார்.
 • பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது.
 • இந்நூலை பதிப்பித்தவர் = செல்வசேகர முதலியார்
 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் மிகுதியாக வரலாற்று குறிப்புகளை கூறும் நூல் இதுவே

மேற்கோள்:

 • அணியெல்லாம் ஆடையின் பின்
 • கடன் கொண்டும் செய்வார் கடன்
 • கற்றலின் கேட்டலே நன்று
 • குன்றின்மேல் இட்ட விளக்கு
 • தனிமரம் காடாதல் இல்
 • திங்களை நாய்க் குரைத் தற்று
 • நுணலும் தன் வாயால் கெடும்

சிறுபஞ்சமூலம்

சிறுபஞ்சமூலத்தின் உருவம்:

 • ஆசிரியர் = காரியாசான்
 • பாடல்கள் = கடவுள் வாழ்த்து 1, பாயிரங்கள் 2, செய்யுட்கள் 102
 • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

 • கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய வேர்கள் இணைந்து மனிதனின் நோயை குணப்பதுவது போல இந்நூல் மனிதனின் உள்ளப்பிணியை நீக்குகிறது.

பொதுவான குறிப்புகள்;

 • மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.
 • பஞ்சம் = ஐந்து, மூலம் = வேர்
 • ஐந்து வேர்கள் = கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி
 • சிறுபஞ்சமூலம் போன்றே பெருபஞ்சமூலம் என்ற ஒன்றும் உண்டு. அவை 1.வில்வம்,2.பெருங்குமிழ்,3.பாதிரி,4.தழுதாழை,5.வாகை
 • காரியாசனும் ஏலாதியின் ஆசிரியருமான கணிமேதாவியாரும் மதுரைத் தமிழ் ஆசிரியர் மாகாயானரின் ஒரு சாலை மாணவர்கள்.
 • இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிடும் “அம்மை” என்ற வனப்பிற்கு உரியது.

மேற்கோள்:

 • நூற்கு இயைத்த சொல்லின் வனப்பே வனப்பு
 • பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு

முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக்காஞ்சியின் உருவம்:

 • ஆசிரியர் = மதுரைக் கூடலூர்க்கிழார்
 • பாடல்கள் = 100
 • பாவகை = குறள் தாழிசை

பெயர்க்காரணம்;

 • முதுமொழி = மூத்தோர் சொல், காஞ்சி = மகளிர் இடையணி
 • மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி எனப்படுகிறது.

வேறு பெயர்:

 • அறவுரைக்கோவை
 • ஆத்திச்சூடியின் முன்னோடி

பொதுவான குறிப்புகள்:

 • பத்துப் பிரிவும், பிரிவுக்கு பத்து பாடலுமாக உள்ளது.
 • சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப்பத்து, துவ்வாப்பத்து, அல்லபத்து, இல்லை பத்து, பொய்யாப்பத்து, எளிய பத்து, நல்கூர்ந் பத்து, தாண்டாப்பத்து
 • ஒவ்வொரு பத்தும், “ஆர்கலி உலகத்து” என்று தொடங்குகிறது.
 • இதன் பாடல்கள் குறள்வெண் செந்துறை என்ற யப்பால் ஆனவை.

மேற்கோள்:

 • ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
 • ஓதலிற்  சிறந்ததன்று ஒழுக்கம் உடைமை
 • வன்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை
 • மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை
 • ஈரம் உடைமை ஈகையின் அறிப

ஏலாதி

ஏலாதியின் உருவம்:

 • ஆசிரியர் = கணிமேதாவியார்
 • பாடல்கள் = பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80
 • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

 • ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.

பொதுவான குறிப்புகள்:

 • இவர் எழுதிய மற்றொரு நூல் = திணைமாலை நூற்றைம்பது
 • உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.
 • நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில் = எடுத்தல், முடக்கல், நிமிர்தல், நிலைத்தல், படுத்தல், ஆடல்

மேற்கோள்:

 • தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி
  வாய்இழந்த வாழ்வினர், வணிகம் போய்இழந்தார்
  கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்குஈந்தார்
  வைத்து வழங்கிவாழ் வார்
 • சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது
  மேவல் எளிது; அரிது மெய்போற்றல்

கார் நாற்பது

கார் நாற்பதின் உருவம்:

 • ஆசிரியர் = மதுரைக் கன்னங் கூத்தனார்
 • பாடல்கள் = 40(அகநூல்களில் அளவில் சிறியது)
 • திணை = அகத்திணை – முல்லைத்திணை
 • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

 • கார் = கார் காலம், மழைக்காலம்

பொதுவான குறிப்புகள்:

 • கார் நாற்பது நாடகப் பாங்கு கொண்டு அமைந்தவை.
 • அகப்பொருள் கூறும் நூல்களுள் மிகவும் சிறியது.
 • ஆசிரியரின் இயற்பெயர் = கூத்தன்
 • இவர் தனது நூலில் திருமால், பலராமன், ஆகியோரை குறிப்பிடுவதால் இவரை வைணவர் என்பர்.
 • சிவனுக்குரிய கார்த்திகை விளக்கிடுதல் பற்றியும் நூல் கூறுகிறது.
 • நூலில் கூறப்படும் துறை = வினைமேற் சென்று திரும்பும் தலைவன் பாகனோடு பேசி விரைந்து வருதல்
 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒருதிணையை(முல்லை) மட்டும் பாடிய நூல்.
 • நன்னூல் உரையாசிரியர் மயிலைநாதர் இந்நூலில் மேற்கோள் சான்று காட்டியுள்ளார்.

முக்கிய அடிகள்:

 • செல்வர்  மனம்போல் கவின் ஈன்ற, நல்கூர்ந்தார்
  மேனிபோல் புல்என்ற காடு
 • தூதோடு வந்த மழை
 • பாடுவண்டு ஊதும் பருவம் பனணத்தோளி
 • வாடும் பசலை மருந்து

ஐந்திணை ஐம்பது

ஐந்திணை ஐம்பதின் உருவம்:

 • ஆசிரியர் = மாறன் பொறையனார்
 • பாடல்கள் = 50(5 X 10 = 50)
 • திணை = ஐந்து அகத்திணை
 • திணை வைப்பு முறை = முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல்
 • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

 • ஐந்து தினைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் ஐம்பது பாடல்கள் பாடப்பட்டதால் ஐந்திணை ஐமபது எனப் பெயர் பெற்றது.

பொதுவான குறிப்புகள்:

 • முல்லைத் தினையை முதலாவதாக கொண்ட பதினெண்கீழ்க்கணக்கு இது மட்டுமே ஆகும்.
 • இந்நூலின் பாயிரத்தில், கூறப்படுவது.
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
செந்தமிழ் சேராதவர்
 • நச்சினார்கினியரரும், பேராசிரியரும் தங்கள் உரையில் இந்நூலின் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளனர்
 • தொல்காப்பியர் கூறாத பாலைத்திணை நான்காவதாக வைத்துப் பாடப்பட்டுள்ளது.

முக்கிய அடிகள்:

 • வெஞ்சுடர் அன்னானையான்கண்டேன் கண்டாளாம்
 • தண்சுடர் அன்னாளைத் தான்
 • சுனைவாய்ச் சிறுநீரை எய்தாது என்று எண்ணிப்
 • பிணைமான் இனிது உண்ண வேண்டிக் கலைமான்தன்
 • கள்ளத்தின் ஊச்சம் கரம் என்பர் காதலர்
 • உள்ளம் படர்ந்த நெறி

ஐந்திணை எழுபது

ஐந்திணை எழுபதின் உருவம்:

 • ஆசிரியர் = மூவாதியார்
 • பாடல்கள் = 70(5*14=70)
 • திணை = ஐந்து அகத்தினணகளும்
 • திணை வைப்பு முறை = குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்
 • பாவகை  = வெண்பா

பொதுவான குறிப்புகள்:

 • தும்முதல், பெண்களின் இடக்கண் துடித்தல், ஆந்தை அலறுதல் முதலான நிமித்தங்கள் கூறப்பட்டுள்ளன.
 • மணமகள் மணமகனிடம் இருந்து உறுதிப்பத்திரம் எழுதி வாங்கியதை இந்நூல் பதிவு செய்துள்ளது.
 • திணைக்கு பதினான்கு பாடல்கள் வீதம் மொத்தம் எழுபது பாடல்கள் உள்ளன.
 • இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலில் விநாயகர் வணக்கம் கூறப்பட்டுள்ளது.
 • இந்நூலில் நான்கு பாடல்கள் கிடைக்கவில்லை(முல்லையில் இரண்டு, நெய்தலில் இரண்டு)

முக்கிய அடிகள்:

 • நன்மலை நாட! மறவல் வயங்கிழைக்கு
 • நின்னலது இல்லையால் ஈயாயோ கண்ணோட்டத்து
 • இன்னுயிர் தாங்கும் மருந்து
 • செங்கதிர் செல்வன் சினங்காத்த போழ்தினாற்
 • பைங்கொடி முல்லை மனங்கமழ வண்டிமிர்
 • காரோடலமருங் கார்வானங் காண்டோறும்
 • நீரோடலம் வருங் கண்

திணைமொழி ஐம்பது

திணைமொழி ஐம்பதின்  உருவம்:

 • ஆசிரியர் = கண்ணஞ் சேந்தனார்
 • பாடல்கள் = 50(5*10=50)
 • திணை = ஐந்து அகத்திணைகளும்
 • திணை வைப்பு முறை = குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்
 • பாவகை   = வெண்பா

பெயர்க்காரணம்:

 • திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது.

பொதுவான குறிப்புகள்:

 • இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
 • இந்நூலில் 46 பாடல்கள் இன்னிசை வெண்பா ஆகும்.
 • 4 பாடல்கள் நேரிசை வெண்பா ஆகும்
 • குறிஞ்சித் திணையை முதலாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
 • சேந்தனாரின் தந்தை சாத்தந்தையார் என்பார் சோழன் போரவைக்கொப்பெருனற் கிள்ளியை பாடியவர் என உ.வே.சா கூறுகிறார்.

நூலின் சிறப்பு:

 • நூலின் அனைத்துப் பாடல்களும் எதுகை, மோனை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
 • நச்சினார்கினியரரால் இந்நூலின் சில பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன

முக்கிய அடிகள்:

 • அரிபரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்
 • தெரிவார்யார் தேடும் இடத்து
 • துணிகடல் சேர்ப்பான் துறந்தான்கொல் தோழி!
 • தணியும் என்தோள் வளை

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பதின் உருவம்:

 • ஆசிரியர் = கணிமேதாவியார்
 • பாடல்கள் = 150(5*30=150)
 • திணை = ஐந்து அகத்திணைகளும்
 • திணை வைப்பு முறை = குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம்
 • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

 • திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப் பெயர் பெற்றது.

பொதுவான குறிப்புகள்:

 • நூலாசிரியர் கணிமேதாவியார் சமண சமயத்தார். ஆனால் சமண சமயத்தார் வெறுத்து ஒதுக்கிய காதல், மணம், குடும்பம் போன்றவற்றின் மீது கொண்ட வெறுப்பு நீங்குமாறு இதனை படைத்துள்ளார்.
 • இந்நூலின் ஆசிரியரே ஏலாதி என்னும் நூலையும் எழுதியுள்ளார்.
 • இவர் பாண்டிய வேந்தன் ஒருவனால் ஆதரிக்கப்பட்டவர்.
 • ஒவ்வொரு தினைக்கும் முப்பது பாடல்கள் வீதும் நூற்றைம்பது பாடல்கள் உடையது.
 • பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்களில் இந்நூலே பெரியது.
 • இப்பாடலின் சில கருத்துக்கள் சுந்தரர் தேவாரத்திலும், மாணிக்கவாசகரின் திருக்கோவையாரிலும் காணமுடிகிறது.
 • நூலில் உள்ள மொதப் பாடல்கள் = 153
 • மூன்று பாடல்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை

முக்கிய அடிகள்:

 • ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக
 • இருகடரும் போந்தன என்றார்
 • பொருள் பொருள் என்றால் சொல்
 • பொன்போலப் போற்றி
 • அருள் பொருள் ஆகாமையாக – அருளால்
 • வளமை கொணரும் வகையினால் மற்றோர்
 • இளமை கொணர இசை
 • நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்நாட
 • கோள்வேங்கை போல்கொடியார் என்ஐயன்மார் – கோள்வேங்கை
  அன்னையால் நீயும், அருந்தழையாம் ஏலாமைக்கு
  என்னையோ? நாளை எளிது

கைந்நிலை

கைந்நிலையின் உருவம்:

 • ஆசிரியர் = மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லாங்காடனார்
 • பாடல்கள் = 60(5*12=60)
 • திணை = ஐந்து அகத்திணைகளும்
 • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

 • கை = ஒழுக்கம்
 • ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.

பொதுவான குறிப்புகள்:

 • இந்நூலின் சில பாடல்கள் சிதைந்து விட்டன
 • தற்போது உள்ளவை 43 வெண்பாக்களே
 • வடசொல் கலப்பு மிகுந்த நூல்
 • ஆசிரியர் பாண்டியனை “தென்னவன் கொற்கை” என்னும் தொடரால் குறிப்பிடுகிறார்

மேற்கோள்:

 • ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக்
 • குற்றம் ஒரூஉம குணத்தளாக் – கற்றறிஞர்ப்
  பேணும் தகையாளாக் கொண்கன் குறிப்பறிந்து
  நாணும் தகையளாம் பெண்

களவழி நாற்பது

களவழி நாற்பதின் உருவம்:

 • ஆசிரியர் = பொய்கையார்
 • பாடல் = 40
 • திணை = புறத்திணை – வாகைத்திணை
 • பாவகை = வெண்பா

பெயர்க்காரணம்:

 • களம் = போர்க்களம்.
 • போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப் பெயர் பெற்றது.
 • இதனை தொல்காப்பியம்,
ஏரோர் களவழி அன்றிக் களவழித்
தேரோர் தோன்றிய வென்றியும்
– தொல்காப்பியம்

வேறு பெயர்:

 • பரணி நூலின் தோற்றுவாய்

பொதுவான குறிப்புகள்:

 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல்.
 • சோழன் செங்கணாணும் சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போரிட்ட இடம் = போர்ப்புறம்(கழுமலம்)
 • சேரமான் சிறை வைக்கப்பட்ட இடம் = குடவாயில் கோட்டம்
 • சேரமானை விடுவிப்பதற்காக பொய்கையார் களவழி நாற்பது, சோழன் மீது பாடினார்.
 • நூலிற்கு பரிசாக சேரமானை விடுதலை செய்ய வேண்டினார். சோழனும் சம்மதம் தெரிவித்தான்.
 • ஆனால் சிறையில் தன்னை தரக்குறைவாக நடுதியதால் மானம் பெரிதென எண்ணி உயிர் விட்டான்.
 • சேரமான் புறநானூற்றில் பாடிய பாடல்,
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளில் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத் தீத்தணியத்
தாம்இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே
 • இந்நூலில் கார்த்திகைத் திருவிழா சிறப்பாக உவமிக்கப்பட்டுள்ளது.
 • களவழி நாற்பதின் நாற்பது பாடல்களும் “அட்ட களத்து” என முடிவது தொல்காப்பியர் கூறும் அம்மை என்னும் வனப்பு வகையை சேர்ந்தது.

முக்கிய அடிகள்:

 • கடிகாவில் காற்று உற்று அறிய, வெடிபட்டு
 • வீற்றுவீற்று ஓடும் மயிலினம் போல் நாற்றிசையும்
 • கேளிர் இழந்தார் அலறுபவே, செங்கண்
 • சினமால் பொறுத்த களத்து

 

Leave a Comment

Your email address will not be published.