10TH TAMIL காலக்கணிதம்

10TH TAMIL காலக்கணிதம்

10TH TAMIL காலக்கணிதம்

10TH TAMIL காலக்கணிதம்

  • கவிஞன் என்பவன் யார்? அவன் குணம் என்ன? அவன் பணி என்ன?
  • மனம் என்னும் வயலில், சொல்லேர் உழவனாக, சிந்தனை விதையைத் தூவி, மடமைக் களை பறித்து, தத்துவ நீர் பாய்ச்சி, அறம் என்னும் கதிர் அறுப்பவன் கவிஞன்.
  • காலத்தைக் கணிப்பதால் காலத்தை வென்றவனாகிறான்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

கண்ணதாசனின் காலக்கணிதம்

10TH TAMIL காலக்கணிதம்
10TH TAMIL காலக்கணிதம்

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;

நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!

கண்ணதாசன் ஆசிரியர் குறிப்பு

  • கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் = முத்தையா.
  • ‘முத்தையா’ என்னும் இயற்பெயரைக் கொண்ட கண்ணதாசன் இன்றைய சிவகங்கை மாவட்டத்தின் சிற்றூரான சிறுகூடல்பட்டியில் பிறந்தவர்.
  • இவரது பெற்றோர் சாத்தப்பன் – விசாலாட்சி ஆவர்.
  • 1949ஆம் ஆண்டு “கலங்காதிரு மனமே” என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார்.
  • திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் கண்ணதாசன்.
  • இவர் சிறந்த கவியரங்கக் கவிஞராகவும் பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.
  • தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர்.
  • சேரமான் காதலி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
  • இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார்.

 

 

 

Leave a Reply