10TH TAMIL சிலப்பதிகாரம்

10TH TAMIL சிலப்பதிகாரம்

10TH TAMIL சிலப்பதிகாரம்
10TH TAMIL சிலப்பதிகாரம்

10TH TAMIL சிலப்பதிகாரம்

  • “மருவூர்ப் பாக்கக்” காட்சி இடம் பெற்றுள்ள காதை = இந்திரவிழா ஊரெடுத்த காதை.
  • இந்திரவிழா ஊரெடுத்த காதை இடம்பெற்றுள்ள காண்டம் = புகார்க் காண்டம்.
  • “மாசு அறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு” என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல் = சிலப்பதிகாரம்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

சிலப்பதிகாரம் மருவூர்ப்பாக்கம்

  • மருவூர்ப்பாக்கம் அமைந்துள்ள நகரம் = புகார் நகரம்.
  • “நுண்வினைக் காருகர்” எனப்படுபவர்கள் = கைத்தொழில் வல்லுனர்களான நெசவாளர்கள்.
  • “ஆரமும் அகிலும்” என்பதில் “ஆரம்” என்பதன் பொருள் = சந்தனம்.
  • சிலப்பதிகாரம் குறிப்பிடும் தானிய வகைகள் = எட்டு.
  • “காழியர்” என்பதன் பொருள் = பிட்டு வாணிகம் செய்பவர்
  • “கூவியர்” என்பதன் பொருள் = அப்பம் சுடுவோர்.
  • “கள்நொடை ஆட்டியர்” என்பதன் பொருள் = கள் விற்கும் வலைச்சியர்.
  • “பாசவர்” என்பதன் பொருள் = வெற்றிலை விற்பவர்
  • “வாசவர்” என்பதன் பொருள் = ஏலம் முதலான ஐந்து நறுமணப் பொருள்கள் விற்பவர்.
  • “ஓசுநர்” என்பதன் பொருள் = எண்ணெய் விற்பவர்.
  • “கஞ்ச காரரும்” என்பதன் பொருள் = வெண்கலப் பாத்திரம் செய்பவர்.
  • “மண்ணீட்டு ஆளரும்” என்பதன் பொருள் = சிற்பி.
  • “துன்னர்” என்பதன் பொருள் = தையல்காரர்.
10TH TAMIL சிலப்பதிகாரம்
10TH TAMIL சிலப்பதிகாரம்

இசை எத்தனை வகைப்படும்

  • இசை எத்தனை வகைப்படும் = ஏழு
  • ஏழ்வகை இசை யாவை = குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்.

அருஞ்சொற்பொருள்

  • சுண்ணம் = நறுமணப்பொடி
  • காருகர் = நெய்பவர் (சாலியர்)
  • தூசு = பட்டு
  • துகிர் = பவளம்
  • வெறுக்கை = செல்வம்
  • நொடை = விலை
  • பாசவர் = வெற்றிலை விற்போர்
  • ஓசுநர் = எண்ணெய் விற்போர்
  • கண்ணுள் வினைஞர் = ஓவியர்
  • மண்ணீட்டாளர் = சிற்பி
  • கிழி = துணி

இலக்கணக்குறிப்பு

  • வண்ணமும் சுண்ணமும் = எண்ணும்மை
  • பயில்தொழில் = வினைத்தொகை

ஐம்பெருங்காப்பிய முறை வைப்பு

10TH TAMIL சிலப்பதிகாரம்
10TH TAMIL சிலப்பதிகாரம்

“சிந்தா மணியாம் சிலப்பதிகா ரம்படைத்தான்

கந்தா மணிமே கலைபுனைந்தான் – நந்தா

வளையா பதிதருவான் வாசவனுக் கீந்தான்

திளையாத குண்டலகே சிக்கும்”

–    திருத்தணிகையுலா

  • ஐம்பெருங்காப்பிய முறை வைப்பு பற்றி கூறும் நூல் = திருத்தணிகை உலா.

பெருங்குணத்துக் காதலாள் நடந்த பெருவழி

  • “பெருங்குணத்துக் காதலாள்” யார்? = கண்ணகி.
  • காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து கண்ணகியும் கோவலனும் திருவரங்கம் மற்றும் உறையூர் வழியாகக் கொடும்பாளூர் என்னும் இடத்தை அடைந்தனர்.
  • தென்னவன் சிறுமலையின் வலப்பக்கம் வழியாகச் சென்றால் மதுரையை அடையலாம்.
  • தென்னவன் சிறுமலையின் இடப்பக்க வழியாகச் சென்றால் திருமால்குன்றம் (அழகர் மலை) வழியாக மதுரை செல்லலாம்.
  • “திருமால்குன்றம்” எனப்படுவது = அழகர் மலை.
  • இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட வழியில், சோலைகள் மிகுந்த ஊர்களும் காடுகளும் உள்ளன. அவ்வழியாகச் சென்றால் மூன்று வழிகளும் சந்திக்கும் மதுரைப் பெருவழியை அடைந்து, மதுரை செல்லலாம்.
  • கோவலனையும் கண்ணகியையும் கவுந்தியடிகள் இடைப்பட்ட வழியிலேயே அழைத்துச் சென்றார்.
  • கோவலனையும் கண்ணகியையும் மதுரைக்கு அழைத்து சென்றவர் = கவுந்தியடிகள்.
  • மதுரையில் கணவனை இழந்த கண்ணகி, மதுரையிலிருந்து வைகையின் தென்கரை வழியாக நெடுவேள் குன்றம்(சுருளி மலை) சென்று வேங்கைக் கானல் என்னுமிடத்தை அடைந்தாள்.
  • “நெடுவேள் குன்றம்” எனப்படும் மலை = சுருளி மலை.

உரைப்பாட்டு மடை என்றால் என்ன

  • உரைப்பாட்டு மடை என்பது சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை.
  • இது உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு.
  • “சிலப்பதிகாரத்தில் வரும் தமிழ்நடை” = உரைப்பாட்டு மடை.
  • உரைநடைப்பாங்கில் அமைந்திருக்கும் பாட்டு = உரைப்பாட்டு மடை.
  • வாய்க்காலில் பாயும் நீரை வயலுக்குத் திருப்பிவிடுவது மடை.
  • உரை என்பது பேசும் மொழியின் ஓட்டம்.
  • இதனைச் செய்யுளாகிய வயலில் பாய்ச்சுவது உரைப்பாட்டு மடை.
  • “உரைப்பாட்டு மடை” என்பது = உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் ஆகும்.
  • உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனப்படும் நூல் = சிலப்பதிகாரம்.

சிலப்பதிகாரம் நூல் குறிப்பு

  • ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.
  • இது முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது.
  • மூவேந்தர் பற்றிய செய்திகளைக் கூறுகிறது.
  • இது புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களையும் முப்பது காதைகளையும் உடையது
  • கோவலன், கண்ணகி, மாதவி வாழ்க்கையைப் பாடுவது.
  • மணிமேகலைக் காப்பியத்துடன் கதைத்தொடர்பு கொண்டிருப்பதால் இவையிரண்டும் இரட்டைக் காப்பியங்கள் எனவும் அழைக்கப் பெறுகின்றன.

இளங்கோவடிகள் ஆசிரியர் குறிப்பு

  • சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள், சேர மரபைச் சேர்ந்தவர்.
  • மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார்.
  • சீத்தலைச்சாத்தனார் கோவலன் கண்ணகி கதையைக் கூறி, ‘அடிகள் நீரே அருளுக’ என்றதால் இளங்கோவடிகளும் ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச்செய்யுள்’ என இக்காப்பியம் படைத்தார் என்பர்.

 

 

Leave a Reply