10TH TAMIL புறப்பொருள் இலக்கணம்
10TH TAMIL புறப்பொருள் இலக்கணம்
- அகப்பொருள் என்பது “அன்பின் ஐந்திணை” பற்றியது.
- அன்பின் ஐந்திணை = குறுஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
புறத்திணை என்றால் என்ன
- புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை எனப்படும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
புறத்திணை வகைகள்
- புறத்திணை 12 வகைகள் ஆகும்.
- புறத்திணை வகைகள் = வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை.
வெட்சித் திணை
ஆநிரையை கவர்தல் = வெட்சித் திணை |
- ஒரு குழுவினரிடமிருந்து மற்றொரு குழவினர் அவர்களின் ஆநிரையை (மாடுகளை) கவர்ந்து வருவது வெட்சித் திணை எனப்படும்.
- ஆநிரையை கவர்ந்து வரும் பொழுது “வெட்சிப் பூவினை” சூடி செல்வர்.
- “ஆநிரையை கவர்தல்” வெட்சித் திணை எனப்படும்.
- போரை துவங்கும் நிகழ்வு = ஆநிரை கவர்தல்.
- போர்த்திணைகள் படிப்படியாக வளர்ந்த நிலையில், போரைத் தொடங்கும் நிகழ்வாக “ஆநிரை கவர்தல்” மேற்கொள்ளப்படும்.
வெட்சிப்பூ
- வெட்சிப்பூவை “இட்லிப்பூ” என்றும் அழைப்பர்.
- அழகுச்செடியாக வீட்டுத் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் வளர்க்கப்படுவது = வெட்சிப்பூ ஆகும்.
- வெட்சிப்பூவின் நிறம் = சிவப்பு.
- “இட்லிப்பூ” எனப்படும் பூ = வெட்சிப்பூ.
கரந்தைத் திணை
ஆநிரையை மீட்டல் = கரந்தைத் திணை |
- கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரையை மீட்க வீரர்கள் “கரந்தைப் பூவை” சூடி மீட்கச் செல்வர்.
- “ஆனிரையை மீட்டல்” கரந்தைத் திணை எனப்படும்.
கரந்தைப் பூ
- சிறிய முட்டை வடிவில் கொத்தாகப் பூக்கக் கூடிய கரந்தை ஒரு சிறிய செடி ஆகும்.
- நறுமணம் மிக்க இது செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு ஆகிய நிறங்களில் பூக்கும்.
- கரந்தைப் பூவினை “கொட்டைக் கரந்தை” என்றும் அழைப்பர்.
வஞ்சித்திணை
பகை நாட்டினை கவர்தல் = வஞ்சித்திணை |
- மண்ணாசைக் காரணமாக பகைவர் நாட்டினை கவர்தல்.
- பகைவர் நாட்டினை கவர செல்லும் பொழுது வீரர்கள் “வஞ்சிப்பூவினை” சூடி செல்வர்.
- “பகை நாட்டினை கவர்தல்” வஞ்சித்திணை ஆகும்.
வஞ்சிப் பூ
- பளபளப்பான, மெல்லிய பூவின் இதழ்களில் வெள்ளிய பஞ்சு போன்ற நுண்மயிர் அடர்ந்துள்ளது வஞ்சிப் பூ ஆகும்.
காஞ்சித் திணை
பகை நாட்டினரிடம் போரிடல் = காஞ்சித்திணை |
- தன நாட்டை கைப்பற்ற வந்த எதிர் நாட்டு அரசனோடு, “காஞ்சிப் பூ”வை சூடிக்கொண்டு போரிடல்.
காஞ்சிப் பூ
- காஞ்சி என்பது ஒருவகை குறு மரம் ஆகும்.
- கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீலநிற மலர்கள் கொண்ட அழகான மணமுள்ள மரம், “காஞ்சி மரமாகும்”.
நொச்சித்திணை
பகை நாட்டவரிடம் இருந்து கோட்டையை காத்தல் = நொச்சித்திணை |
- நாட்டைக் (மண்ணை) காக்க கோட்டைகள் கட்டப்பட்டன.
- கோட்டையை காத்தல் வேண்டி, உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு நொச்சிப்பூவை சூடிக் கொண்டு போரிடுவது.
- பகை நாட்டவரிடம் இருந்து கோட்டையை காத்தல் “நொச்சித்திணை” ஆகும்.
நொச்சிப்பூ
- மருத நிலத்திற்குரிய பூ = நொச்சிப்பூ
- மருத நிலத்திற்குரிய நொச்சி, கொத்து கொத்தான நீலநிறப் பூக்கள் கொண்டது.
- இது மணிநொச்சி, கருநொச்சி, மலைநொச்சி, வெண் நொச்சி என பல வகைகள் உள்ளன.
உழிஞைத் திணை
பகை நாட்டின் கோட்டையை கைப்பற்ற சுற்றி வளைத்தல் = உழிஞைத் திணை |
- மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் அதனை சுற்றி வளைத்தல்.
உழிஞைப் பூ
- வேலிகளில் ஏறிப் படரும் நீண்ட கொடி = உழிஞைக் கொடி.
- உழிஞைக் கொடியின் கூட்டு இலைகளும், மலர்களும் சிறியவை.
- உழிஞைப் பூவின் நிறம் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
- “முடக்கத்தான்” எனப்படும் பூ = உழிஞைப் பூ ஆகும்.
- உழிஞைப் பூவினை “முடக்கத்தான்” (முடக்கொற்றான்) எனக் கூறுவர்.
தும்பைத் திணை
பகைவேந்தர் இருவரும் தனது வலிமை நிலை நாட்டல் = தும்பைத் திணை |
- பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவினை சூடி போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத் திணை ஆகும்.
- போரிடுகின்ற அரசர்கள் இருவரும் தும்பைப் பூ மாலையையே சூடியிருப்பார்கள்.
தும்பைப்பூ
- சிறிய வகை செடி வகை = தும்பை.
- எல்லா இடங்களிலும் வளரக் கூடிய தூய வெண்ணிற மலர்களைக் கொண்ட சிறிய செடி தும்பை ஆகும்.
போர்த்திணைகள்
- போர்த்திணைகள் படிப்படியாக வளர்ந்த நிலையில், போரைத் தொடங்கும் நிகழ்வாக “ஆநிரை கவர்தல்” மேற்கொள்ளப்படும்.
- போரை தொடங்கும் நிகழ்வு = ஆநிரை கவர்தல்.
வாகைத்திணை
போரில் வெற்றி பெற்ற மன்னன் சூடுதல் = வாகைத்திணை |
- போரில் வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூவை சூடி மகிழ்வது, வாகைத் திணை ஆகும்.
- “வாகை” என்பதன் பொருள் = வெற்றி.
வாகைப்பூ
- மங்கிய வெண்ணிற நறுமணம் கொண்ட கொத்து கொத்தாக பூக்கும் பூ = வாகைப்பூ.
பாடாண்திணை என்றால் என்ன
- “பாடாண்திணை” பிரித்து எழுதுதல் = பாடு + ஆண் + திணை
- பாடுவதற்கு தகுதியுடைய ஓர் ஆண் மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலானவற்றை போற்றிப் பாடுவது “பாடாண்திணை” எனப்படும்.
- போரை மட்டும் குறிப்பிடாமல் பிற மாண்புகளையும் கூறும் திணை = பாடாண்திணை.
பொதுவியல் திணை என்றால் என்ன
- வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளில் “பொதுவானது மற்றும் அவற்றுள் கூறப்படாதது” ஆகியவற்றை கூறுவது பொதுவியல் திணை ஆகும்.
கைக்கிளை திணை என்றால் என்ன
- கைக்கிளைத் திணை என்பது “ஒருதலை காமம்” பற்றியது ஆகும்.
பெருந்திணை என்றால் என்ன
- பெருந்திணை என்பது “பொருந்தாக் காமம்” பற்றியது ஆகும்.
- அன்னை மொழியே
- தமிழ்ச் சொல் வளம்
- இரட்டுற மொழிதல்
- உரைநடையின் அணிகலன்
- எழுத்து, சொல்
- கேட்கிறதா என் குரல்
- முல்லைப்பாட்டு
- புயலிலே ஒரு தோணி
- தொகைநிலைத் தொடர்கள்
- விருந்து போற்றுதும்
- காசிக்காண்டம்
- மலைபடுகடாம்
- கோபல்லபுரத்து மக்கள்
- பெருமாள் திருமொழி
- பரிபாடல்
- விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை
- இலக்கணம் – பொது
- மொழிபெயர்ப்புக் கல்வி
- நீதிவெண்பா
- திருவிளையாடல் புராணம்
- வினா விடை வகைகள் பொருள்கோள்
- பூத்தொடுத்தல்
- முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ்
- கம்பராமாயணம்
- பாய்ச்சல்
- அகப்பொருள் இலக்கணம்
- சிற்றகல் ஒளி
- ஏர் புதிதா
- மெய்க்கீர்த்தி