6TH TAMIL துன்பம் வெல்லும் கல்வி
6TH TAMIL துன்பம் வெல்லும் கல்வி
- “கல்வி அழகே அழகு” என்பர் பெரியோர்.
- கற்றபடி நிற்பதே அந்த அழகைப் பெறுவதற்கான வழி
- கல்வி, அறிவை வளர்ப்பதோடு பண்படுத்தவும் செய்யும்.
- எவ்வளவுதான் கற்றிருந்தாலும் பண்பாடு இல்லாவிட்டால் அந்தக் கல்வி பயனற்றுப் போகும். பண்பட்ட மனிதரின் புகழே பல்லாண்டு நிலைத்திருக்கும்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
அருஞ்சொற்பொருள்
- தூற்றும்படி = இகழும்படி
- மூத்தோர் = பெரியோர்
- மேதைகள் = அறிஞர்கள்
- மாற்றார் = மற்றவர்
- நெறி = வழி
- வற்றாமல் = குறையாமல்
பாடலின் பொருள்
- நாம் நூல்களைக் கற்றதோடு இருந்துவிடக்கூடாது.
- கற்றதன் பயனை மறக்கக் கூடாது.
- நம் நாட்டின் நெறி தவறி நடக்கக் கூடாது.
- நல்லவர்கள் குறைசொல்லும்படி வளரக் கூடாது.
- பெரியோர் கூறும் அறிவுரைகளை மீறக் கூடாது.
- பிறரிடம் பழகும் முறையிலும் பேசும் முறையிலும் பண்புநெறி மாறக் கூடாது.
- பிறர் உழைப்பை நம்பி வாழக் கூடாது.
- தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக் கூடாது.
- துன்பத்தை நீக்கும் கல்வியினைக் கற்க வேண்டும்.
- சோம்பலைப் போக்கிட வேண்டும்.
- பிறருடன் வம்பு செய்யும் வழக்கம் இருந்தால் அதை விட்டுவிட வேண்டும்.
- வானைத் தொடும் அளவுக்கு அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆசிரியர் குறிப்பு
- எளிய தமிழில் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
- திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
- மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர்.
- இன்பத்தமிழ்க் கல்வி
- அழியாச் செல்வம்
- வாழ்விக்கும் கல்வி
- பள்ளி மறுதிறப்பு
- ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- ஒரு வேண்டுகோள்
- கீரைப்பாத்தியும் குதிரையும்
- பேசும் ஓவியங்கள்
- தமிழ் ஒளிர் இடங்கள்
- தொழிற்பெயர்
- விருந்தோம்பல்
- வயலும் வாழ்வும்
- திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
- திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
- அணி இலக்கணம்
- புதுமை விளக்கு
- அறம் என்னும் கதிர்
- ஒப்புரவு நெறி
- அணி இலக்கணம்
- திருக்குறள்
- மலைப்பொழிவு
- தன்னை அறிதல்
- கண்ணியமிகு தலைவர்
- பயணம்
- ஆகுபெயர்