7TH TAMIL வழக்கு
7TH TAMIL வழக்கு
- எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும்
- நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.
வழக்கு எத்தனை வகைப்படும்
- வழக்கு இரண்டு வகைப்படும். அவை,
- இயல்பு வழக்கு
- தகுதி வழக்கு
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இயல்பு வழக்கு என்றால் என்ன
- ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும்.
இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்
- இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். அவை,
- இலக்கணமுடையது
- இலக்கணப்போலி
- மரூஉ
தகுதி வழக்கு என்றால் என்ன
- ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும்.
தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்
- தகுதி வழக்கு மூன்று வகைப்படும். அவை,
- இடக்கரடக்கல்
- மங்கலம்
- குழூஉக்குறி
இயல்பு வழக்கு தகுதி வழக்கு
இயல்பு வழக்கு |
தகுதி வழக்கு |
ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும். |
ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும். |
மூன்று வகை = இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ |
மூன்று வகை = இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி |
இலக்கணமுடையது என்றால் என்ன
- இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல் இலக்கணமுடையது ஆகும்
- எ.கா:
- நிலம், மரம், வான், எழுது
- இவை தமக்குரிய பொருளை எவ்வகை மாறுபாடும் இல்லாமல் இயல்பாகத் தருகின்றன.
இலக்கணப்போலி என்றால் என்ன
- இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.
- இலக்கணப்போலி என்பது பெரும்பாலும் சொற்களின் முன்பின் பகுதிகள் இடம்மாறி வருவதையே குறிக்கும்.
சொற்கள் முன்பின் இடம் மாறி வருவது = இலக்கணப்போலி |
- எனவே, இலக்கணப் போலியை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்.
- எ.கா:
- புறநகர் (நகர்ப்புறம்)
- கால்வாய் (வாய்க்கால்)
- தசை (சதை)
- கடைக்கண்
- இல்முன் (முன்றில்)
- கிளைநுனி (நுனிக்கிளை)
- வாயில் (இல்வாய்)
மரூஉ என்றால் என்ன
- இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
- எ.கா:
- தஞ்சை (தஞ்சாவூர்)
- நெல்லை (திருநெல்வேலி)
- குடந்தை (கும்பகோணம்)
- எந்தை (என் தந்தை)
- போது
- சோணாடு
வாயில் வாசல்
- வாயில் = இலக்கணப்போலி
- வாசல் = மரூஉ
- இல்லத்துக்குள் நுழையும் வழி இல்வாய் (இல்லத்தின் வாய்) எனக் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால் அதனை வாயில் என வழங்குகிறோம். இது இலக்கணப் போலியாகும்.
- வாயில் என்னும் சொல்லைப் பேச்சு வழக்கில் வாசல் என வழங்குகிறோம். இது மரூஉ ஆகும்.
இடக்கரடக்கல் என்றால் என்ன
- பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.
- எ.கா:
- கால் கழுவி வந்தேன்.
- குழந்தை வெளியே போய்விட்டது.
- ஒன்றுக்குப் போய் வந்தேன்.
மங்கலம் என்றால் என்ன
- மங்கலமில்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பதை மங்கலம் என்பர்.
- எ.கா:
- செத்தார் = துஞ்சினார், இயற்கை எய்தினார்
- ஓலை = திருமுகம்
- கறுப்பு ஆடு = வெள்ளாடு
- விளக்கை அணை = விளக்கைக் குளிரவை
- சுடுகாடு = நன்காடு
குழூஉக்குறி என்றால் என்ன
- பலர் கூடியிருக்கும் இடத்தில் சிலர் மட்டும் தமக்குள் சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் மற்றவர்கள் புரிந்துகொள்ள இயலாத வகையில் சொற்களைப் பயன்படுத்துவர்.
- இவ்வாறு ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும்.
- எ.கா:
- பொன்னைப் பறி எனல் (பொற்கொல்லர் பயன்படுத்துவது)
- ஆடையைக் காரை எனல் (யானைப்பாகர் பயன்படுத்துவது)
இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி
- இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி மூன்றும் ஒரு சொல்லுக்கு மாற்றாக வேறு சொல்லைப் பயன்படுத்தும் முறைகளாகும்.
- நாகரிகம் கருதி மறைமுகமாகக் குறிப்பிடுதல் = இடக்கரடக்கல்
- மங்கலமற்ற சொற்களை மாற்றி மங்கலச் சொற்களால் குறிப்பிடுதல் = மங்கலம்
- பிறர் அறியாமல் ஒரு குழுவுக்கு மட்டும் புரியும் வகையில் குறிப்பிடுதல் = குழூஉக்குறி
போலி என்றால் என்ன
- சொல்லின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ இயல்பாக இருக்க வேண்டிய ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து இடம்பெற்று அதே பொருள் தருவது போலி எனப்படும்.
- போலி என்னும் சொல் போல இருத்தல் என்பதிலிருந்து தோன்றியது.
- எ.கா:
- அறம் செய விரும்பு- இஃது ஒளவையார் வாக்கு.
- அறன் வலியுறுத்தல் என்பது திருக்குறள் அதிகாரங்களுள் ஒன்று.
- இத்தொடர்களில் அறம், அறன் ஆகிய சொற்களில் ஓர் எழுத்து மாறியுள்ளது. ஆனால் பொருள் மாறுபடவில்லை.
போலி எத்தனை வகைப்படும்
- போலி மூன்று வகைப்படும். அவை,
- முதற்போலி
- இடைப்போலி
- கடைப்போலி
முதற்போலி என்றால் என்ன
- சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது முதற்போலியாகும்.
- எ.கா:
- பசல் – பைசல்
- மஞ்சு – மைஞ்சு
- மயல் – மையல்
இடைப்போலி என்றால் என்ன
- சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது இடைப்போலியாகும்.
- எ.கா:
- அமச்சு – அமைச்சு
- இலஞ்சி – இலைஞ்சி
- அரயர் – அரையர்
கடைப்போலி என்றால் என்ன
- சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறு ஓர் எழுத்து அமைந்து அதே பொருள் தருவது கடைப்போலியாகும்.
- எ.கா:
- அகம் – அகன்
- நிலம் – நிலன்
- முகம் – முகன்
- பந்தல் – பந்தர்
- சாம்பல் – சாம்பர்
- கடைப்போலி குறிப்புகள்
- அஃறிணைப் பெயர்களின் இறுதியில் நிற்கும் மகர எழுத்திற்குப் பதிலாக னகரம் கடைப்போலியாக வரும்.
- லகர எழுத்திற்குப் பதிலாக ரகரம் கடைப்போலியாக வரும்
முற்றுப்போலி என்றால் என்ன
- ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.
- எ.கா:
- ஐந்து – அஞ்சு
- இதில் அஞ்சு என்னும் சொல் ஐந்து என்னும் சொல்லின் போலி வடிவமாகும்.
- அஞ்சு என்ற சொல்லில் உள்ள எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டு இருந்தாலும் அஃது ஐந்து என்னும் பொருளையே தருகிறது.
7TH TAMIL
-
- எங்கள் தமிழ்
- ஒன்றல்ல இரண்டல்ல
- பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
- 7TH TAMIL வழக்கு
- 7TH TAMIL வழக்கு
- 7TH TAMIL வழக்கு
- 7TH TAMIL வழக்கு
- 7TH TAMIL வழக்கு
- 7TH TAMIL வழக்கு
- சொலவடைகள்
- குற்றியலுகரம் குற்றியலிகரம்
- காடு
- அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
- விலங்குகள் உலகம்
- இந்திய வனமகன்
- நால்வகைக் குறுக்கங்கள்