இந்திய கவுன்சில் சட்டம் 1909

இந்திய கவுன்சில் சட்டம் 1909

இந்திய கவுன்சில் சட்டம் 1909: 

இந்திய கவுன்சில் சட்டம் 1909

  • சட்டமன்ற கவுன்சிலில் சீர்திருத்தம் செய்வதற்கும், இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்திய கவுன்சில் சட்டம் 1909 கொண்டு வரப்பட்டது
  • இச்சட்டத்தினை “மின்டோ – மார்லி சீர்திருத்த சட்டம் 1909” எனவும் கூறுவர்
  • இந்திய அரசு செயலராக இருந்தவர் = மார்லி பிரபு
  • இந்திய வைசிராயாக இருந்தவர் = மின்டோ பிரபு

இந்திய கவுன்சில் சட்டம் 1909 – சட்டத்தின் தேவை:

  • 1905-ம் ஆண்டு கர்சன் பிரபுவால் கொண்டுவரப்பட்ட வங்கப் பிரிவினையால் தேசம் முழுவதும் நடந்த கலவரம்,
  • விலைவாசி உயர்வு, பஞ்சம், பிளேக் நோய் தாக்கம் போன்றவை மக்களின் துயரத்தை அதிகரித்தது
  • காங்கிரஸ் கட்சியில் தீவிரவாதிகளின் வளர்ச்சியை தடுக்க மிதவாதிகள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவை பெறவேண்டி இருந்தது

மின்டோ – மார்லி சீர்திருத்த சட்டம் 1909– சட்டதின் சிறப்பியல்புகள்:

இந்திய கவுன்சில் சட்டம் 19௦9

மைய சட்டமன்றத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்:

  • மைய சட்டமன்றத்தில் நான்கு வகை உறுப்பினர்கள் இருந்தனர்
    • தங்கள் பதவியால் உறுப்பினர்களாக இருந்தவர்கள். வைசிராய், படைத் தலைவர், மாநில பிரதிநிதிகள் போன்றோர் (Ex-Officio members)
    • நியமன அதிகாரிகள் (Nominated Officials)
    • நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அல்லாதோர் (Nominated Non-Officials)
    • தேர்தல் மூலம் தேர்வு செயப்பட்டவர்கள் (Elected members)
  • மைய சட்டமன்றத்தில் இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 16-ல் இருந்து 6௦ ஆக உயர்ந்தது
  • இதன் மூலம் மொத்த மையசட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை = 69 ஆனது

மாகாண சட்டமன்றம்:

  • மாகாண சட்டமன்றத்தில் உறுபினர்களின் எண்ணிக்கை அந்தந்த மாகாணத்தை பொருத்து அமைக்கப் பட்டது
  • மதராஸ், பம்பாய், வங்காளம் ஆகிய பெரிய மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களில் அதிகப் படியாக இருக்க வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 5௦ ஆக உயர்த்தப்பட்டது

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்:

  • நிலக்கிழார்கள், தோட்ட முதலாளிகள், ஜமீன்தார்கள், முஸ்லீம்கள் என பல தொகுதிகளாக மக்கள் பிரிக்கப்பட்டனர்
  • முஸ்லிம் இனத்தவர்களுக்கு தனியாக (Separate and Discriminatory Electorate) அவர்களின் பிரதிநிதிகளை அவர்களே தேர்வுசெய்யலாம் என்ற அடிப்படையில், முஸ்லிம்களுக்கு “வகுப்புவாரி பிரதிநிதித்துவக்” (Communal Representation) கொள்கை கொண்டுவரப்பட்டது

இந்திய கவுன்சில் சட்டம் 19௦9

  • இதன் மூலம் “வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் தந்தை” என மின்டோ பிரபு (Lord Minto, the Father of Communal Electorate) அழைக்கப்படுகிறார்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம்:

  • மைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது (Deliberative Functions). அரசின் வரவு செலவு திட்டங்கள் பற்றி கேள்வி கேட்கவும், விவாதிக்கவும் உரிமை அளிக்கப்பட்டது
  • துணைக் கேள்விகளை கேட்கவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடன் வழங்குதல், புதிய வரிகள் விதிப்பது ஆகியவை தொடர்பாக தீர்மான்கள் கொண்டு வரலாம்.

தேர்தல் முறை:

  • தேர்தல் நடத்தும் முறையை முடிவு செய்யும் அதிக்கறம் வைசிராய்க்கு வழங்கப்பட்டது
  • வாக்குரிமை எல்லாருக்கும் வழங்கப்படவில்லை
  • சொத்து, கல்வி = ஆகியவற்றின் அடிப்படையில் வாக்கு அளிக்கும் உரிமை அளிக்கப்பட்டது
  • தேர்தல் நேரடி முறையில் இல்லாமல் சுற்றான முறையில் இருந்தது

சத்யேந்திர பிரசாத் சின்கா:

  • வைசிராயின் நிர்வாகக்குழுவின் இந்தியர்களுக்காக ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. இதன்படி வைசிராயின் நிர்வாகக்குழுவின் இடம் பிடித்த முதல் இந்தியர் = சத்யேந்திர பிரசாத் சின்கா (Satyendra Prasad Sinha, became the First Indian to join the Viceroy’s Executive Council as a Law Member)
  • இவர் சட்ட உறுப்பினராக சேர்க்கப்பட்டார்

இந்திய கவுன்சில் சட்டம் 19௦9

இந்திய கவுன்சில் சட்டம் 1909 – குறிப்பு:

  • பாராளுமன்ற (Parlimentary) முறையானது நேரடியாகவோ, மறைமுகமாகவோ இந்தியாவில் ஏற்படுவதற்கு இச்சட்டம் காரணமாகும்
  • இந்தியாவில் மக்களாட்சியை புகுத்தியதில் இச்சட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • முதன் முறையாக தேர்தல் மூலமாக தேர்வுசெய்யப்படும் உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றங்கள் அமைய இச்சட்டம் வழிவகை செய்தது.
  • வகுப்புவாரி பிரதிநிதித்துவதை வழங்கி இந்து-முஸ்லிம் இடையே விரிசலை உருவாக்கியது இச்சட்டம்
  • அரசுப் பதவி சார்பு உடையவர்களே அவையின் கவுரவ உறுப்பினர்களாக இதுவரை இருந்தனர். கே.ஜி.குப்தா மற்றும் ஹூசேன் பில்கிராமி ஆகிய இரு இந்தியர்கள் கவுரவ உறுப்பினர்களாக இருந்தனர்
  • இச்சட்டம் காங்கிரஸ் மிதவாதிகளின் தலைவரான “கோபால கிருஷ்ண கோகலே” அவர்களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது

 

 

Leave a Reply