10TH TAMIL பா வகை அலகிடுதல்

10TH TAMIL பா வகை அலகிடுதல்

10TH TAMIL பா வகை அலகிடுதல்

10TH TAMIL பா வகை அலகிடுதல்

  • யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும் = ஆறு வகைகள்
  • யாப்பின் உறுப்புகள் யாவை = எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை.
  • பாக்கள் எத்தனை வகைப்படும் = நான்கு வகை.
  • நால்வகைப் பாக்கள் யாவை = வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

பாவின் ஓசை

  • பாக்களை ஓசைகளைக் கொண்டும் அறிந்துக் கொள்ளலாம்.
  • ஒவ்வொரு பாவும் ஓசையால் வேறுபட்டது.

ஓசை எத்தனை வகைப்படும்

  • ஓசை, நான்கு வகைப்படும். அவை,
    • செப்பல் ஓசை (வெண்பா)
    • அகவல் ஓசை (ஆசிரியப்பா)
    • துள்ளல் ஓசை (கலிப்பா)
    • தூங்கல் ஓசை (வஞ்சிப்பா)

செப்பல் ஓசை என்றால் என்ன

  • வெண்பாவின் ஓசை = செப்பல் ஓசை.
  • திருக்குறளும், நாலடியாரும் வெண்பாவால் அமைந்த அறம் கூறும் நூல்களாகும்.

அகவல் ஓசை என்றால் என்ன

  • அகவல் ஓசை பெற்று வரும் பா = ஆசிரியப்பா.
  • ஆசிரியப்பாவின் ஓசை = அகவல் ஓசை.
  • ஆசிரியப்பாவின் மற்றொரு பெயர் = அகவற்பா.
  • இலக்கணக் கட்டுக்கோப்பு குறைவாகவும், கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா.
  • இலக்கணக் கட்டுக்கோபு குறைவாக உள்ள பா வகை = அகவற்பா.
  • கவிதை வெளியீட்டிற்கு எளிதாக இருக்கும் பா வகை = அகவற்பா.
  • அகவர்பாவின் அமைந்த சங்க இலக்கியங்கள் = சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை.

துள்ளல் ஓசை என்றால் என்ன

  • கலிப்பாவிற்கு உரிய ஓசை = துள்ளல் ஓசை.
  • துள்ளல் ஓசை பெற்று வரும் பா = கலிப்பா.
  • செய்யுளில் இடையிடையே உயர்ந்து வரும் ஓசை வகை = துள்ளல் ஓசை.

தூங்கல் ஓசை என்றால் என்ன

  • வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை = தூண்கள் ஓசை.
  • தூங்கல் ஓசை பெற்று வரும் பா வகை = வஞ்சிப்பா.

வெண்பா எத்தனை வகைப்படும்

  • வெண்பா ஐந்து வகைப்படும். அவை,
    • குரல் வெண்பா
    • சிந்தியல் வெண்பா
    • நேரிசை வெண்பா
    • இன்னிசை வெண்பா
    • பஃறொடை வெண்பா.

ஆசிரியப்பா எத்தனை வகைப்படும்

  • ஆசிரியப்பா நான்கு வகைப்படும். அவை,
    • நேரிசை ஆசிரியப்பா
    • இணைக்குறில் ஆசிரியப்பா
    • நிலைமண்டில ஆசிரியப்பா
    • அடிமறி மண்டில ஆசிரியப்பா

வெண்பா, ஆசிரியப்பா பொது இலக்கண அட்டவணை

10TH TAMIL பா வகை அலகிடுதல்
10TH TAMIL பா வகை அலகிடுதல்

பொது இலக்கணம்

வெண்பா ஆசிரியப்பா
ஓசை செப்பல் ஓசை

அகவல் ஓசை

சீர்

ஈற்றடி முச்சீர்

ஏனைய அடிகள் நாற்சீர்

இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்

ஈரசைச் சீர் மிகுதியாகவும்

காய்ச்சீர் குறைவாகவும் வரும்.

தளை இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே பயின்று வரும்.

ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை விரவியும் வரும்.

அடி

2 அடி முதல் 12 அடி வரை வரும்.

கலிவெண்பா 13 அடிக்கு மேற்பட்டு வரும்.

3 அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப அமையும்.
முடிப்பு ஈற்றுச் சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாட்டில் முடியும்.

ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு.

குறள் வெண்பா

  • குறள் வெண்பா என்பது வெண்பாவின் பொது இலக்கணம் அமையப் பெற்று இரண்டு அடிகளாய் வரும்.
  • முதலடி நான்கு சீர்களாய் வரும் = அளவடி.
  • இரண்டாம் அடி மூன்று சீர்களாய் வரும் = சிந்தடி.

அலகிடுதல் என்றால் என்ன

  • அலகிடுதல் என்பது சீரைப் பிரித்து அசை பார்த்து, அசைக்கேற்ற வாய்ப்பாடு காணுதல் ஆகும்.

ஓரசைச்சீர்

  • நேர் = நாள்
  • நிரை = மலர்
  • நேர்பு = காசு
  • நிரைபு = பிறப்பு

ஈரசைச்சீர்

  • நேர் நேர் = தேமா
  • நிரை நேர் = புளிமா
  • நிரை நிரை = கருவிளம்
  • நேர் நிரை = கூவிளம்

மூவசைச்சீர்

  • நேர் நேர் நேர் = தேமாங்காய்
  • நிரை நேர் நேர் = புளிமாங்காய்
  • நிரை நிரை நேர் = கருவிளங்காய்
  • நேர் நிரை நேர் = கூவிளங்காய்
  • நேர் நேர் நிரை = தேமாங்கனி
  • நிரை நேர் நிரை = புளிமாங்கனி
  • நிரை நிரை நிரை = கருவிளங்கனி
  • நேர் நிரை நிரை = கூவிளங்கனி.
10TH TAMIL பா வகை அலகிடுதல்
10TH TAMIL பா வகை அலகிடுதல்

யாப்போசை தரும் பாவோசை

  • “யாப்பதிகாரம்” என்ற நூலை எழுதியவர் = புலவர் குழந்தை.
    • செப்பலோசை = இருவர் உரையாடுவது போன்ற ஓசை.
      • இருவர் உரையாடுவது போன்ற ஓசை = செப்பலோசை.
    • அகவலோசை = ஒருவர் பேசுதல் போன்ற ஓசை.
      • ஒருவர் சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை = அகவலோசை.
      • ஒருவர் பேசுதல் போன்ற ஓசை = அகவலோசை.
    • துள்ளலோசை = கன்று துள்ளினாற்போலச் சீர்தோறும் துள்ளிவரும் ஓசை.
      • தாழ்ந்து உயர்ந்து வரும் ஓசை = துள்ளலோசை.
    • தூங்கலோசை = சீர்தோறும் துள்ளாது தூங்கிவரும் ஓசை.
      • தாழ்ந்தே வரும் ஓசை = தூங்கலோசை.

 

Leave a Reply