11TH TAMIL நற்றிணை

11TH TAMIL நற்றிணை

11TH TAMIL நற்றிணை
11TH TAMIL நற்றிணை

11TH TAMIL நற்றிணை

போதனார்

  • சங்ககாலப் புலவர்.
  • நற்றிணையில் 110ஆம் பாடலை மட்டும் பாடியுள்ளார்.
  • நற்றிணையின் பேரெல்லை 12 அடி.
  • விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்டதாக இவரது பாடல் அமைந்துள்ளது.

தலைவி கூற்று

  • தலைவி இல்லறம் ஆற்றும் செவ்வியைப் பாராட்டிச் செவிலித்தாய் நற்றாயிடம் கூறியது.

தலைவி கூற்று விளக்கம்

  • திருமணம் முடிந்து கணவன் வீட்டில் வசிக்கும் தலைவியைக் காணச் சென்றுவந்த செவிலி, நற்றாயிடம் மகள் வறுமையிலும் செம்மையாக வாழ்வதைச் சொல்லி, இத்தகைய இல்லற அறிவை எப்படிப் பெற்றாள் என வியந்து கூறுதல்.

மகள் நிரை உரைத்தல் துறை

  • “மகள் நிலை உரைத்தல்” என்பது தலைவனோடு உடன்போகிய விளையாட்டுப் பருவம் மாறாத மகள் இல்லறம் ஆற்றும் பாங்கை நற்றாயிடம் செவிலித்தாய் எண்ணிக் கூறுவது.
  • மகள் நிரை உரைத்தல் துறையை “மனைமருட்சி” என்றும் கூறுவர்.

அருஞ்சொற்பொருள்

  • பிரசம் – தேன்
  • புடைத்தல் – கோல்கொண்டு மிரட்டுதல்
  • கொழுநன் குடி – கணவனுடைய வீடு
  • வறன் – வறுமை
  • கொழுஞ்சோறு – பெருஞ்செல்வம்
  • உள்ளாள் – நினையாள்
  • மதுகை – பெருமிதம்

இலக்கணக்குறிப்பு

  • வெண்சுவை, தீம்பால் = பண்புத்தொகைகள்
  • விரிகதிர், ஒழுகுநீர் = வினைத்தொகைகள்
  • பொற்கலம், பொற்சிலம்பு = மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்
  • கொண்ட = பெயரெச்சம்
  • அறிவும் ஒழுக்கமும் = எண்ணும்மை
  • பந்தர் = பந்தல் என்பதன் ஈற்றுப்போலி.

பிரித்து எழுதுக

  • சிறுகோல் = சிறுமை + கோல்
  • பொற்சிலம்பு = பொன் + சிலம்பு

 

 

 

 

Leave a Reply