6TH TAMIL பெயர்ச்சொல்

Table of Contents

6TH TAMIL பெயர்ச்சொல்

6TH TAMIL பெயர்ச்சொல்

6TH TAMIL பெயர்ச்சொல்

  • மரம், பள்ளிக்கூடம், சித்திரை, கிளை, இனிப்பு, பாடுதல் ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
  • இவை அனைத்தும் பெயரைக் குறிக்கின்றன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

பெயர்ச்சொல் என்றால் என்ன

  • ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.

பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்

6TH TAMIL பெயர்ச்சொல்
6TH TAMIL பெயர்ச்சொல்
  • பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை,
    • பொருட்பெயர்
    • இடப்பெயர்
    • காலப்பெயர்
    • சினைப்பெயர்
    • பண்புப்பெயர்
    • தொழிற்பெயர்

பொருட்பெயர் என்றால் என்ன

6TH TAMIL பெயர்ச்சொல்
6TH TAMIL பெயர்ச்சொல்
  • பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்.
  • எ.கா:
    • மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.

இடப்பெயர் என்றால் என்ன

  • ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்.
  • எ.கா:
    • சென்னை, பள்ளி, பூங்கா, தெரு.

காலப்பெயர் என்றால் என்ன

  • காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.
  • எ.கா
    • நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.

சினைப்பெயர் என்றால் என்ன

  • பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்.
  • எ.கா:
    • கண், கை, இலை, கிளை

பண்புப்பெயர் என்றால் என்ன

  • பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும்.
  • எ.கா:
    • வட்டம், சதுரம், செம்மை, நன்மை.

தொழிற்பெயர் என்றால் என்ன

  • தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
  • எ.கா:
    • படித்தல், ஆடுதல், நடித்தல்.

அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கான சான்றுகள்

  • காவியா புத்தகம் படித்தாள் = பொருட்பெயர்
  • காவியா பள்ளிக்குச் சென்றாள் = இடப்பெயர்
  • காவியா மாலையில் விளையாடினாள் = காலப்பெயர்
  • காவியா தலை அசைத்தாள் = சினைப்பெயர்
  • காவியா இனிமையாகப் பேசுவாள் = பண்புப்பெயர்
  • காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் = தொழிற்பெயர்

இரு வகை பெயர்ச்சொல்

6TH TAMIL பெயர்ச்சொல்
6TH TAMIL பெயர்ச்சொல்
  • நம் முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என இருவகைப்படுத்தினர்.

இடுகுறிப்பெயர் என்றால் என்ன

  • நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர்.
  • அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும்.
  • எ.கா:
    • மண், மரம், காற்று

இடுகுறிப்பெயர் எத்தனை வகைப்படும்

  • இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும். அவை,
    • இடுகுறிப் பொதுப்பெயர்
    • இடுகுறிச் சிறப்புப்பெயர்

இடுகுறிப் பொதுப்பெயர் என்றால் என்ன

  • ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும்.
  • எ.கா:
    • மரம், காடு.

இடுகுறிச் சிறப்புப்பெயர் என்றால் என்ன

  • ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும்.
  • எ.கா:
    • மா, கருவேலங்காடு.

காரணப்பெயர் என்றால் என்ன

  • நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர்.
  • இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும்.
  • எ.கா:
    • நாற்காலி, கரும்பலகை

காரணப்பெயர் எத்தனை வகைப்படும்

  • காரணப்பெயர் இரண்டு வகைப்படும். அவை,
    • காரணப் பொதுப்பெயர்
    • காரணச் சிறப்புப்பெயர்

காரணப் பொதுப்பெயர் என்றால் என்ன

  • காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர் எனப்படும்.
  • எ.கா:
    • பறவை, அணி

காரணச் சிறப்புப்பெயர் என்றால் என்ன

  • குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும்.
  • எ.கா:
    • வளையல், மரங்கொத்தி

 

 

 

Leave a Reply