6TH TAMIL பெயர்ச்சொல்
6TH TAMIL பெயர்ச்சொல்
- மரம், பள்ளிக்கூடம், சித்திரை, கிளை, இனிப்பு, பாடுதல் ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.
- இவை அனைத்தும் பெயரைக் குறிக்கின்றன.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பெயர்ச்சொல் என்றால் என்ன
- ஒன்றன் பெயரைக் குறிக்கும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்
- பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை,
- பொருட்பெயர்
- இடப்பெயர்
- காலப்பெயர்
- சினைப்பெயர்
- பண்புப்பெயர்
- தொழிற்பெயர்
பொருட்பெயர் என்றால் என்ன
- பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்.
- எ.கா:
- மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.
இடப்பெயர் என்றால் என்ன
- ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்.
- எ.கா:
- சென்னை, பள்ளி, பூங்கா, தெரு.
காலப்பெயர் என்றால் என்ன
- காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.
- எ.கா
- நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.
சினைப்பெயர் என்றால் என்ன
- பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்.
- எ.கா:
- கண், கை, இலை, கிளை
பண்புப்பெயர் என்றால் என்ன
- பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும்.
- எ.கா:
- வட்டம், சதுரம், செம்மை, நன்மை.
தொழிற்பெயர் என்றால் என்ன
- தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
- எ.கா:
- படித்தல், ஆடுதல், நடித்தல்.
அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கான சான்றுகள்
- காவியா புத்தகம் படித்தாள் = பொருட்பெயர்
- காவியா பள்ளிக்குச் சென்றாள் = இடப்பெயர்
- காவியா மாலையில் விளையாடினாள் = காலப்பெயர்
- காவியா தலை அசைத்தாள் = சினைப்பெயர்
- காவியா இனிமையாகப் பேசுவாள் = பண்புப்பெயர்
- காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும் = தொழிற்பெயர்
இரு வகை பெயர்ச்சொல்
- நம் முன்னோர் பெயர்ச்சொற்களை அவை வழங்கும் அடிப்படையில் இடுகுறிப்பெயர், காரணப்பெயர் என இருவகைப்படுத்தினர்.
இடுகுறிப்பெயர் என்றால் என்ன
- நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர்.
- அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள் ஆகும்.
- எ.கா:
- மண், மரம், காற்று
இடுகுறிப்பெயர் எத்தனை வகைப்படும்
- இடுகுறிப்பெயர் இரண்டு வகைப்படும். அவை,
- இடுகுறிப் பொதுப்பெயர்
- இடுகுறிச் சிறப்புப்பெயர்
இடுகுறிப் பொதுப்பெயர் என்றால் என்ன
- ஓர் இடுகுறிப்பெயர் அத்தன்மை உடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும்.
- எ.கா:
- மரம், காடு.
இடுகுறிச் சிறப்புப்பெயர் என்றால் என்ன
- ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும்.
- எ.கா:
- மா, கருவேலங்காடு.
காரணப்பெயர் என்றால் என்ன
- நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர்.
- இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர் எனப்படும்.
- எ.கா:
- நாற்காலி, கரும்பலகை
காரணப்பெயர் எத்தனை வகைப்படும்
- காரணப்பெயர் இரண்டு வகைப்படும். அவை,
- காரணப் பொதுப்பெயர்
- காரணச் சிறப்புப்பெயர்
காரணப் பொதுப்பெயர் என்றால் என்ன
- காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர் எனப்படும்.
- எ.கா:
- பறவை, அணி
காரணச் சிறப்புப்பெயர் என்றால் என்ன
- குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர் ஆகும்.
- எ.கா:
- வளையல், மரங்கொத்தி
-
- இன்பத்தமிழ்
- தமிழ்க்கும்மி
- வளர்தமிழ்
- கனவு பலித்தது
- தமிழ் எழுத்துக்களின் வகையும் தொகையும்
- சிலப்பதிகாரம்
- காணி நிலம்
- சிறகின் ஓசை
- முதலெழுத்தும் சார்பெழுத்தும்
- திருக்குறள்
- அறிவியல் ஆத்திச்சூடி
- கணியனின் நண்பன்
- ஒளி பிறந்தது
- மொழி முதல் இறுதி எழுத்துகள்
- மூதுரை
- துன்பம் வெல்லும் கல்வி
- கல்விக்கண் திறந்தவர்
- நூலகம் நோக்கி
- இன எழுத்துகள்
- ஆசாரக்கோவை
- கண்மணியே கண்ணுறங்கு