6TH TAMIL கணியனின் நண்பன்

6TH TAMIL கணியனின் நண்பன்

6TH TAMIL கணியனின் நண்பன்

6TH TAMIL கணியனின் நண்பன்

  • எல்லாம் எந்திரமயமாகி வருகிற காலம் இது
  • மனிதர்கள் தாங்கள் செய்யும் செயல்களை எந்திரங்களைக் கொண்டு செய்யும் வகையில் பலவற்றை உருவாக்கி வருகிறார்கள்.
  • மனிதர்கள் செய்ய முடியாத பணிகளையும் எந்திரங்கள் செய்கின்றன.
  • வீடு, அலுவலகம், தொழிற்சாலை, மருத்துவமனை என்று பல இடங்களிலும் எந்திரங்கள் பணியாற்றுகின்றன.
  • கணக்குப்போடும் எந்திரம், கற்றுத்தரும் எந்திரம், வேலை செய்யும் எந்திரம், விளையாடும் எந்திரம் என்று எங்கெங்கும் எந்திரங்கள்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

ரோபோ என்ற சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர்

  • ரோபோ” என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் = காரல் கபெக் (Karel Capek).
  • காரல் கபெக் என்பவர் “செக்” நாட்டைச் சேர்ந்த நாடக ஆசிரியர். இவர் 1920 ஆம் ஆண்டு உருவாக்கிய தனது நாடகத்தில் “ரோபோ” என்ற என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார்.
  • “ரோபோ” என்ற சொல்லின் பொருள் = அடிமை.

தானியங்கி என்றால் என்ன

  • நுட்பமான, கடினமான, ஒரே மாதிரியான வேலைகளை மனிதரை விட விரைவாகத் தானே செய்து முடிக்கும் எந்திரமே “தானியங்கி” ஆகும்.
  • ஒவ்வொரு தானியங்கியிலும் ஒரு கணினி இணைந்து இருக்கும்.
  • தானியங்கியின் செயல்களை அந்தக் கணினி கட்டுப்படுத்தும்.
6TH TAMIL கணியனின் நண்பன்
6TH TAMIL கணியனின் நண்பன்

நுண்ணுணர்வுக் கருவிகள்

  • தானியங்கிகள் பயன்படும் இடத்திற்கு ஏற்ற வகையில் எந்திரக் கைகள், நகரும் கால்கள், சூழ்நிலைகளை உணர்வதற்கான “நுண்ணுனர்வுக் கருவிகள்” (Sensors) ஆகியவற்றுடன் உருவாக்கப்படுகின்றன.

எந்திர மனிதர்கள்

  • எந்திர மனிதர்களுக்கும், தானியங்கிகளுக்கும் உள்ள வேறுபாடு = செயற்கை நுண்ணறிவு.
  • செயற்கை நுண்ணறிவு என்பது மனிதர்களை போலச் செயல்பட ஏதுவாக சில கட்டளைகள் வடிவமைத்து மனித எந்திரத்தில் வைக்கப்படும். இதன் மூலம் எந்திர மனிதன், மனிதர்களை போல செயல்பட துவங்கும்.

டீப் புளூ கணினி

  • 1997 ஆம் ஆண்டு அப்போதைய உலக சதுரங்க வெற்றியாளரான கேரி கேஸ்புரோவ் என்பவருடன் “டீப் புளூ” என்ற மீத்திறன் கணினி மோதி, இறுதியாக டீப் புளூ கணினி வெற்றிபெற்றது.

குடியுரிமை பெற்ற உலகின் முதல் ரோபோ

6TH TAMIL கணியனின் நண்பன்
6TH TAMIL கணியனின் நண்பன்
  • உலகிலேயே முதன்முதலாக சவூதி அரேபியா நாட்டின் சார்பில் “சோபியா” என்னும் ரோபோவிற்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் “புதுமைகளின் வெற்றியாளர்” என்னும் பட்டம், இந்த சோபியா ரோபோவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • உயிரற்ற ஒரு பொருளுக்கு ஐ.நா சபை பட்டம் வழங்குவது இது தான் முதன் முறை ஆகும்.

 

 

 

 

 

Leave a Reply