8TH வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

8TH வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

8TH வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
8TH வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

8TH வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

  • ஒரு சொல்லின் முதலெழுத்து க, ச, த, ப ஆகிய வல்லின எழுத்து வரிசைகளுள் ஒன்றாக இருந்தால், அதற்கு முன்னால் உள்ள சொல்லின் இறுதியில் வல்லின மெய் சேர்த்து எழுத வேண்டும்

வல்லின மெய்களை சேர்த்து எழுதுவதன் நோக்கம்

  • படிப்பதற்கு எளிமையாக இருக்க வேண்டும்.
  • செய்திகளில் கருத்துப் பிழையோ, பொருள் குழப்பமோ ஏற்படாமல் இருப்பதற்கும் வல்லினம் மிகுதலும் மிகாமையும் உதவுகின்றன.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

சந்திப்பிழை என்றால் என்ன

  • சந்திப்பிழை என்பதனை “ஒற்றுப்பிழை” என்றும் கூறுவர்.
  • வல்லினம்மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும் தவறாகும்.
  • இதனைச் சந்திப் பிழை அல்லது ஒற்றுப்பிழை எனக் குறிப்பிடுவர்.

வல்லினம் மிகும் இடங்கள்

  • அந்த இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்.
    • (எ.கா.) அந்தப்பக்கம். இந்தக்கவிதை.
  • எந்த என்னும் வினாத்திரிபை அடுத்து வல்லினம் மிகும்.
    • (எ.கா.) எந்தத்திசை?, எந்தச்சட்டை?
  • இரண்டாம் வேற்றுமை உருபாகிய ஐ வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.
    • (எ.கா.) தலையைக் காட்டு. பாடத்தைப்படி.
  • நான்காம் வேற்றுமை உருபாகிய கு வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்.
    • (எ.கா.) எனக்குத் தெரியும். அவனுக்குப் பிடிக்கும்.
  • இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும்.
    • (எ.கா.) எழுதிப் பார்த்தாள். ஓடிக் களைத்தான்.
  • உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்.
    • (எ.கா.) பெற்றுக் கொண்டேன். படித்துப் பார்த்தார்.
  • எதிர்மறைப் பெயரெச்சத்தின் இறுதி எழுத்து கெட்டு வருவது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் ஆகும். இதில் வல்லினம் மிகும்.
    • (எ.கா.) செல்லாக்காசு, எழுதாப்பாடல்.
  • உவமைத்தொகையில் வல்லினம் மிகும்.
    • (எ.கா.) மலர்ப்பாதம், தாய்த்தமிழ்.
  • உருவகத்தில் வல்லினம் மிகும்.
    • (எ.கா.) தமிழ்த்தாய், வாய்ப்பவளம்.
  • எண்ணுப்பெயர்களில் எட்டு, பத்து ஆகிய இரண்டு பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்.
    • (எ.கா.) எட்டுப்புத்தகம், பத்துக்காசு.
  • அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும்.
    • (எ.கா.) அப்படிச்செய், இப்படிக்காட்டு, எப்படித்தெரியும்?
  • திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்.
    • (எ.கா.) கிழக்குக்கடல், மேற்குச்சுவர், வடக்குத்தெரு, தெற்குப்பக்கம்.
  • மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த மகர மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்.
    • (எ.கா.) மரம் + சட்டம் = மரச்சட்டம், வட்டம் + பாறை = வட்டப்பாறை.

வல்லினம் மிகா இடங்கள்

  • எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
    • (எ.கா.) தம்பி படித்தான், யானை பிளிறியது.
  • அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
    • (எ.கா.) அது சென்றது. இது பெரியது, எது கிடைத்தது?
  • பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது.
    • (எ.கா.) எழுதிய பாடல், எழுதாத பாடல்.
  • இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் (இரண்டாம் வேற்றுமைத்தொகை) வல்லினம் மிகாது.
    • (எ.கா.) இலை பறித்தேன், காய் தின்றேன்.
  • உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத்தொடர்க் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது.
    • (எ.கா.) தின்று தீர்த்தான், செய்து பார்த்தாள்.
  • வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
    • (எ.கா.) எழுதுபொருள், சுடுசோறு
  • அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தவிர, படி என முடியும் பிறசொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
    • (எ.கா.) எழுதும்படி சொன்னேன். பாடும்படி கேட்டுக்கொண்டார்.
  • உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது.
    • (எ.கா.) தாய்தந்தை, வெற்றிலைபாக்கு

 

 

 

 

Leave a Reply