11TH TAMIL புதுக்கவிதை
11TH TAMIL புதுக்கவிதை
- யாப்பிலக்கண வரையறைக்கு உட்படாமல் சுதந்திரமான வெளிப்பாட்டோடும் கட்டற்ற தன்மையோடும் இன்றைய புதுக்கவிதை எழுதப்படுகிறது.
- இஃது உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், சிலேடை, முரண், இருண்மை முதலான பல்வேறு உத்திகளைத் தன்னகத்தே கொண்டு, கவிஞனின் விரிசிந்தனைக்கேற்பப் புதுப்புது வடிவமெடுக்கிறது.
- “சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது, சொற்புதிது சோதிமிக்க நவகவிதை”, என்று பாரதியார் பாடுவதைப் புதுக்கவிதைக்குரிய விளக்கமாகக் கொள்ளலாம்.
- புதுக்கவிதையில் கவிஞன் எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றித் தன் மனத்தில் தோன்றியதை, அதே உணர்வுடன் வெளிப்படுத்த முடிகிறது.
பாரதி தந்த புதுமை
- முதன் முதலில் தமிழ்க்கவிதைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டவர் = பாரதியார்.
- அவரின் கவிதை வடிவம் தமிழின் மரபான செய்யுள் வடிவமும் நாட்டார் பாடல்களின் ஓசை வடிவமும் கலந்தது.
- தமிழில் புதுமையான வடிவத்தில் அமைந்த முதல் வசன கவிதை நூல் = பாரதியாரின் “காட்சி”.
சிந்துவுக்கு தந்தை
- பாரதி, நாட்டுப்புறச் சிந்து இசையின் அடிப்படையில் அமைந்த கவிதைகளை பாடியதனால் “சிந்துவுக்கு தந்தை” என அழைக்கப்பட்டார்.
- பாரதியார், ஷெல்லியின் கவிதையால் கவரப்பட்டு தனது பெயரை “ஷெல்லிதாசன்” என மாற்றிக் கொண்டார்.
பாரதிதாசன்
- ‘பாரதியின் கவிதாமண்டலத்தைச் சேர்ந்தவர்’ என்று பாரதியாரால் முன்மொழியப்பட்டவர் பாரதிதாசன்.
- இவர், சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, தமிழ் வளர்ச்சி, மூடப்பழக்க வழக்கங்களை ஒழித்தல் முதலான கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.
- “புவியை நடத்து; பொதுவில் நடத்து” என்று முழங்கியவர் = பாரதிதாசன்.
தமிழ்நாட்டு இரசூல் கம்சதோவ்
- பாரதிதாசன் தன்மொழி, தன்னாடு, தன்மக்கள் எனப் பாடியதால் இரஷ்யக் கவிஞரான ‘இரசூல் கம்சதோவ்’ என்பவரோடு ஒப்பிடப்படுகிறார்.
- பாரதிதாசனைப் பின்பற்றி எழுதிய வாணிதாசன், முடியரசன், சுரதா போன்றோர் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
மணிக்கொடி காலம்
- பாரதியைத் தொடர்ந்து தமிழில் பல்வேறு கவிஞர்கள் புதுக்கவிதை எழுத முற்பட்டனர்.
- புதுக்கவிதை முன்னோடிகளான ந.பிச்சமூர்த்தி, கு.ப. ராசகோபாலன், க.நா. சுப்பிரமணியன், புதுமைப்பித்தன் போன்றோர் மணிக்கொடி இதழில் புதுக்கவிதைகளை எழுதினர்.
புதுக்கவிதையின் தந்தை
- ந.பிச்சமூர்த்தி ‘புதுக்கவிதையின் தந்தை’ என அறியப்படுகிறார்.
- ‘பெட்டிக்கடை நாரணன்’, ‘விஞ்ஞானி’ போன்ற கவிதைகளை ந. பிச்சமூர்த்தி எழுதினார்.
எழுத்து இதழ்
- “எழுத்து” இதழை துவங்கியவர் = சி.சு.செல்லப்பா.
- எழுத்து இதழ் புதிய கவிஞர்களின் கவிதைகளுக்குக் களம் அமைத்துக்கொடுத்தது. புதுக்கவிதை குறித்த பல திறனாய்வுக் கட்டுரைகளும் அதில் வெளியாகின.
- மயன், சிட்டி, வல்லிக்கண்ணன், வேணுகோபாலன், டி.கே.துரைஸ்வாமி (நகுலன்), தருமுசிவராமு (பிரமிள்), சி.மணி, சுந்தரராமசாமி (பசுவய்யா), எஸ். வைத்தீஸ்வரன் போன்றோர் எழுத்து இதழில் எழுதியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
புதுக்குரல்கள்
- தமிழில் புதுக்கவிதைத் தொகுப்பாகப் ‘புதுக்குரல்கள்’ என்னும் நூல் வெளிவந்தது.
- இக்கவிதைத் தொகுப்பு உருவத்திலும் உள்ளடக்கத்திலும் பாரதியைப் பின்பற்றியது.
- 24 கவிஞர்களால் எழுதப்பட்ட 63 கவிதைகளைக் கொண்டது.
புதுக்கவிதையின் உத்திகள்
- புதுக்கவிதையின் உத்திகள் = உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், சிலேடை, இருண்மை
உவமை என்றால் என்ன
- தெரிந்த பொருளைக் கொண்டு தெரியாத பொருளை உணர்த்துவது உவமை ஆகும்.
- பொருள் உணர்த்தும் முறைகளில் உவமை முதலிடம் பெறுகிறது.
உருவகம் என்றால் என்ன
- உவமையும் பொருளும் வேறுவேறல்ல, ஒன்றே எனக்கருதுமாறு செறிவுற அமைவது உருவகமாகும்.
படிமம் என்றால் என்ன
- உவமை, உருவகம் என்பன மேன்மேலும் இறுகிய நிலையில்தான் படிமம் தோன்றுகிறது.
- முற்றுருவகப் பாங்கில் அமைந்து, தெளிவானதோர் அகக் காட்சியை வழங்கும் ஆற்றலுடையதே படிமம் ஆகின்றது.
குறியீடு என்றால் என்ன
- ஒரு குறிப்பிட்ட கருத்தைச் சொல்வதற்குப் பதிலாக அக்கருத்தைத் தன்னகத்தே மறைமுகமாகக் கொண்ட சொற்களையோ, காட்சிகளையோ குறியீடாகப் பயன்படுத்தி எழுதப்படும் கவிதை.
அங்கதம் என்றால் என்ன
- அங்கதம் என்பது நகைப்புடன் கூடிய எள்ளலாகும்.
- இது தீங்கையும் அறிவின்மையையும் கண்டனம் செய்வதாகவும், சமகால நிகழ்வுகளில் எதிரிடைப் பதிவுகளாகவும் அமையும்.
- குற்றங்களைக் கடிந்துரைக்காமல் நகைச்சுவையுடன் சுட்டித் திருத்தவல்ல திறனுடையது அங்கதம்.
முரண் என்றால் என்ன
- ஒன்றுக்கு ஒன்று எதிரானவற்றைக் கொண்டு அமைப்பது முரண் என்னும் உத்தியாகும்.
- மரபுக் கவிதைகளில் இது முரண்தொடை எனக் கூறப்படும்.
- மாறுபட்ட இரு பொருள்களை அடுத்தடுத்து இணைத்துப் பார்ப்பதில் சுவையும் கூடும்; நினைவிலும் நிற்கும்.
சிலேடை என்றால் என்ன
- சிலேடை என்பது ஒருசொல் இருபொருள்பட வருவதாகும்.
- பொதுவாகப் புதுக்கவிதை சொல்லலங்காரத்தை விரும்புவதில்லை.
இருண்மை என்றால் என்ன
- சொல்லுக்கும் அஃது உணர்த்தும் பொருளுக்கும் இடையிலான தொடர்பு தெளிவற்றிருக்கும்.
- படிப்பவர்தம் அறிவுக்கும் உணர்வுக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப அது வெவ்வேறு பொருளைத் தரும்.
புதிய கவிதை வடிவங்கள்
- உலகளாவிய கவிதை வடிவங்களைப் பின்பற்றித் தமிழ்ச்சூழலுக்கேற்ற உள்ளடக்கங்களுடன் ஹைக்கூ, லிமெரிக், லிமெரைக்கூ, சென்ரியூ ஆகிய வடிவங்களில் கவிதைகள் எழுதப்படுகின்றன.
ஹைக்கூ என்றால் என்ன
- 16 ஆம் நூற்றாண்டில் ஜப்பானில் தோன்றிய பழைமையான ‘ரென்கா’ பாடல் மரபிலிருந்து ‘ஹைக்கூ’ கவிதை உருவானது.
- “ரென்கா” என்ற பாடல் மரபில் இருந்து உருவான கவிதை வடிவம் = ஹைக்கூ
- ஹைக்கூ கவிதை வடிவத்தினைத் முதன் முதலில் தமிழுக்கு அறிமுகம் செய்தவர் = பாரதியார்.
- ஹைக்கூ கவிதைக்கு “துளிப்பா” என்று பெயரிட்டவர் = பாரதியார்.
- தமிழில் ஐக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்படுகிறது.
- 1916 – அக்டோபர், 16 ல் “சுதேசமித்திரன்” இதழில் “ஜப்பானிய கவிதை “எனும் இரண்டு பக்க அளவிலான சிறு கட்டுரையை முதன் முதலில் மகாகவி பாரதியார் தமிழில் வெளியிட்டதுதான் தமிழ் ஹைக்கூ பற்றிய முதல் அறிமுகம்.
- தமிழில் வெளிவந்த முதல் ஹைக்கூ நூல் = 1984 ஆகஸ்ட்டில் ஓவியக் கவிஞர் அமுதபாரதி அவர்கள் “புள்ளிப் பூக்கள்” எனும் தனது ஹைக்கூ நூலை வெளியிட்டார்.
- தமிழ் மொழியில் வெளி வந்த முதல் ஹைக்கூ கவிதை இதழ் = கரந்தடி
- ஹைக்கூ கவிதைக்கு “சிந்தர்” எனப் பெயரிட்டவர் = கவிக்கோ அப்துல் ரகுமான்.
- முதன் முதலில் மொழிபெயர்ப்பு இன்றி நேரடி தமிழில் ஹைக்கூ கவிதையை எழுதியவர் = கவிக்கோ அப்துல் ரகுமான். அவர் எழுதிய 5 ஹைக்கூ கவிதை “பால்வீதி” நூலில் இடம் பெற்றது.
- ஹைக்கூ கவிதை மூன்று வரிகளால் ஆனது.
- முதல் இரண்டு வரிகளில் கூறப்படும் கருத்தை மூன்றாவதுவரி விடுவிக்கும்.
- மிக நுணுக்கமான ஒருகாட்சி அல்லது ஓர் அனுபவப் பதிவைக் கொண்டிருக்கும் ஹைக்கூ, கடைசி வரியில் படிப்பவரின் மனத்தில் வெளிச்சமான ஓர் உணர்வை ஏற்படுத்திவிடும்.
சென்ரியு கவிதை என்றால் என்ன
- சென்ரியூ கவிதை என்பது ஹைக்கூ கவிதையின் பரிணாமமாகும்.
- ஹைக்கூவின் கட்டுப்பாடுகளை உதறிவிட்டு, அது சுதந்திரமாக இயங்குகிறது.
- ஹைக்கூவின் தத்துவமும் கருத்தாழமும் அதில் குறைவு.
- அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளில் குறும்புத்தனமும் நகைச்சுவையும் கலந்து சென்ரியூ எழுதப்படுகிறது.
- சென்ரியு கவிதையை “நகைப்பா” என்று அழைப்பர்.
- சென்ரியு கவிதைகளை தமிழில் முதல் முதலாக அறிமுகப்படுத்தியவர் = ஈரோடு தமிழன்பன் ஆவார்.
- தமிழில் வெளிவந்த முதல் சென்ரியு கவிதை நூல் = ஈரோடு தமிழன்பன் அவர்களின் “ஒரு வண்டி சென்ரியு” (2001) என்னும் கவிதை நூல் ஆகும்.
- தமிழன்பனின் இக்கவிதை நூலே சென்ரியு கவிதைகளை ஹைக்கூ கவிதைகள் என்று அழைக்கும் அறியாமையைப் போக்கியது.
லிமெரிக் கவிதை என்றால் என்ன
- லிமெரிக் கவிதை ஐந்து அடிகளைக் கொண்டிருக்கும்.
- முதல், இரண்டாம் மற்றும் கடைசி அடிகளில் உள்ள கடைசிச்சொற்கள் தம்முள் ஒலி ஒற்றுமை கொண்டு, மழலையர் பாடல்கள் போல் இருக்கும்.
- இவை நகைச்சுவை, எள்ளல் ஆகிய கூறுகளைக் கொண்டமைபவை ஆகும்.
- லிமெரிக் கவிதையை “இயைபுக் குறும்பா” என்று அழைப்பர்.
- லிமெரிக் (Limerick) என்பது ஆங்கில மொழியில் உள்ள ஒரு பாவகை ஆகும்.
- எட்வர்ட் லியர் என்பவர் லிமெரிக் பாடல்களைப் படைத்த முதல் கவிஞராகக் கருதப்படுகிறார்.
- தமிழில் லிமெரிக் கவிதை வடிவத்தை முதன் முதலில் அறிமுகம் செய்தவர் = ஈழத்து கவிஞர் மகாகவி ஆவார். இவர் இதனை குறும்பா எனும் பெயரால் அறிமுகப்படுத்துகிறார்.
- குறும்பாக்களை (லிமெரிக்) முதன் முதலில் தமிழில் அறிமுகம் செய்தவர் = ஈழத்து கவிஞர் மகாகவி
லிமெரைக்கூ என்றால் என்ன
- ஹைக்கூ கவிதையின் மூவடி எல்லையையும், லிமெரிக் கவிதையின் இயைபையும் கொண்டது லிமெரைக்கூ.
- இது வாழ்வியலை நகைச்சுவையோடு வெளிப்படுத்துவது.
- லிமெரைக்கூ கவிதையை “இயைபுத்துளிப்பா” என்று அழைப்பர்.
- ஆங்கில மொழியில் ஹைக்கூ மற்றும் லிமரிக் வடிவங்களையும் இணைத்து ஒரு கலப்பு இனக் குறும்பா கண்டுபிடிக்கப் பட்டது.
- உலகில் முதன் முதலில் லிமெரைக்கூ கவிதை வடிவை உருவாக்கியவர் = டெட் பாக்கர் (Ted Pauker) என்னும் கவிஞர்.
- இவர் தம் கலப்பு இனக் குறும்பாவுக்கு லிமரைக்கூ (லிமரிக்+ஹைக்கூ) என்று பெயரிட்டார்.
- தமிழில் முதன் முதலில் லிமெரைக்கூ கவிதையை எழுதியவர் = ஈரோடு தமிழன்பன்.
- தமிழில் இத்தகைய கவிதை வடிவத்தை அறிமுகம் செய்த பெருமை தமிழன்பனுக்கு உரியதாகும்.
- தமிழின் முதல் லிமரைக்கூ கவிதை நூல் = ஈரோடு தமிழன்பனின் ”சென்னிமலை கிளியோபாத்ராக்கள்” நூலாகும்.
- தமிழில் முதன் முதலாக ஈரோடு தமிழன்பன் ‘லிமரைக்கூ’வைப் படைத்துள்ளார்.
- தமிழில் முதன் முதலாக ‘லிமரைக்கூ’வைப் படைத்த ஈரோடு தமிழன்பன் ஆங்கிலத்தின் ‘லிமரிக்’ வடிவத்தையும் / உள்ளடக்கத்தையும் [லிமரிக்கில் பயின்று வரும் இயைபுத் தொடையை 1 (முதல்) மற்றும் 3 (இறுதி) அடிகளில் இணைத்து] ஜப்பானிய ‘ஹைக்கூ’வின் வடிவத்தையும் இணைத்து 3 அடிகள் கொண்டு ‘லிமரைக்கூ’ என்ற புதிய தமிழ்க் கவிதை வடிவத்தை தமிழில் ஆரம்பித்து வைத்தார்.
மீராவின் குறும்பாக்கள்
- ஈழத்துக் கவிஞர் மகாகவி எழுதிய லிமெரிக் கவிதைகளினால் பெரிதும் கவரப்பட்ட கவிஞர் மீரா, அதன் தாக்கத்தில் குறும்பாக்களை எழுதினார்.
- லிமெரிக்கின் ஓசை இயைபுகளை மாதிரியாகக் கொண்டு எழுதப்பட்ட அக்கவிதைகள், ‘குக்கூ’ எனும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளன.
- சித்திரகவி
- திருக்குறள்
- தமிழக கல்வி வரலாறு
- பிள்ளைக்கூடம்
- நற்றிணை
- தொல்காப்பியம்
- இதழாளர் பாரதி
- இலக்கணம் – படைப்பாக்க உத்திகள்
- சான்றோர் சித்திரம் – ஜி யு போப்
- ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
- சீறாப்புராணம்
- அகநானூறு
- பிம்பம்
- இலக்கணம் – பா இயற்றப் பழகலாம்
- சான்றோர் சித்திரம் – இரசிகமணி தி கே சிதம்பரனார்
- காலத்தை வென்ற கலை
- ஆத்மாநாம் கவிதைகள்
- குற்றாலக் குறவஞ்சி
- திருச்சாழல்
- இசைத்தமிழர் இருவர்
- 11TH TAMIL புதுக்கவிதை
- 11TH TAMIL புதுக்கவிதை
- 11TH TAMIL புதுக்கவிதை
- 11TH TAMIL புதுக்கவிதை
- 11TH TAMIL புதுக்கவிதை
- 11TH TAMIL புதுக்கவிதை
- 11TH TAMIL புதுக்கவிதை
- 11TH TAMIL புதுக்கவிதை
- கலைச்சொல்லாக்கம்
- இலக்கணம் – நிறுத்தக்குறிகள்
- சான்றோர் சித்திரம் – சங்கரதாசு சுவாமிகள்
- காற்றில் கலந்த பேரோசை
- புரட்சிக்கவி
- பதிற்றுப்பத்து
- சிந்தனைப் பட்டிமன்றம்
- இலக்கணம் – ஆக்கப்பெயர்கள்
- சான்றோர் சித்திரம் – மயிலை சீனி வேங்கடசாமி
- தாகூரின் கடிதங்கள்
- ஒவ்வொரு புல்லையும்
- தொலைந்து போனவர்கள்
- மனோன்மணியம்
- செல்வி
- இலக்கணம் – மெய்ப்புத் திருத்தக் குறியீடுகள்
- சான்றோர் சித்திரம் – திரு வி கலியாணசுந்தரனார்
- 11 ஆம் வகுப்பு நூல் நூலாசிரியர்கள்