S K தார் கமிசன்

S K தார் கமிசன்

S K தார் கமிசன்
S K தார் கமிசன்

         இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, பல மாநிலங்களில் அதிகமாக மக்கள பேசும் மொழியில் அடிப்படியில் மாநிலத்தை பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் பிற பகுதிகளுடன் சுதேச அரசுகளை (Princely States) ஒருங்கிணைப்பது முற்றிலும் தற்காலிக ஏற்பாடாக தான் இருந்தது. மொழியியல் அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைக்க பல்வேறு பிராந்தியங்களிலிருந்து, குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து கோரிக்கை பலமாக எழுந்தது.

S K தார் கமிசன்

       இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்தில் (Indian Constitution Assembly) மொழிவாரி மாநிலக் கோரிக்கை பிரச்சனை தலைத்தூக்கியது. எனவே அரசியலமைப்பு சட்ட மன்றத் (President of Constituent assembly) தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் எஸ்.கே.தார் (S.K. Dhar) தலைமையில் “மொழி வாரி மாநிலங்கள் ஆணையம் 1948” (The Linguistic Provinces Commission, 1948)  அமைத்து உத்தரவிட்டார்.

மொழி வாரி மாநிலங்கள் ஆணையம்

                மொழி வாரி மாநிலங்கள் ஆணையத்தை, “தார் கமிசன்” என்றும் அழைத்தனர். இக்குழுவின் தலைவர் எஸ்.கே.தார் ஆவார்.

  1. எஸ்.கே.தார், தலைவர் (ஓய்வு பெற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி)
  2. பன்னாலால், உறுப்பினர் (ஓய்வு பெற்ற ஐ.சி.எஸ் அதிகாரி)
  3. ஜகத் நாராயண் லால் (அரசியலமைப்பு சட்டமன்ற உறுப்பினர்)
  4. பி.சி.பானர்ஜி, குழுவின் செயலர்

தி.ஏ. ராமலிங்க செட்டியார்

       இக்குழு ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து ஒரு நபரை, அம்மாநிலத்தின் சார்பாக கோரிக்கை விவரங்களை அளிக்க தேர்வுசெய்தது. அதன் படி, மதராஸ் மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் = தி.ஏ. ராமலிங்க செட்டியார் (அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்)

S K தார் கமிசன் செயல்பாடு

       தார் கமிசன் மொழிவழி மாகாணங்கள் அமைக்கப்படுவது பற்றியும், அவ்வாறு மறுசீரமைப்பு செய்வதால் ஏற்படக் கூடிய நிர்வாக, நிதி மற்றும் பிற விளைவுகள் பற்றியும் அறிந்துக் கொள்ள, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மொழியை அடிப்படையாகக் கொண்டு மாகாணங்களை உருவாக்குவது தொடர்பாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து, பல்வேறு “கருத்துக்  குறிப்புகள்” அக்குழுவிடம் வழங்கப்பட்டன.

தார் கமிசன்
தார் கமிசன்

S K தார் கமிசன் அறிக்கை

       இக்குழு தனது அறிக்கையை, அரசியல் நிர்ணய சபையிடம் 1948, டிசம்பரில் சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டதாவது,

  • உடனடியாக மொழிவழி மாகாணங்கள் அமைப்பது நல்லதல்ல
  • ஏற்கனவே இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடிகளில் உள்ளது. அது மேலும் கடுமை ஆகிவிடும் என்று கூறியது.
  • மன்னர் மாநிலங்கலான் சுதேச அரசுகள் இன்னும் முழுமையாக இந்தியாவுடன் இணையவில்லை
  • மொழிவழி மாகாண மறுசீரமைப்பால் ஏற்படக்கூடிய பொருளாதார நிர்வாகச் செலவுகளைத் தாங்கக் கூடிய நிலையில் நாடு இல்லை என்று தெரிவித்தது
  • ஆனால் சில மாகாணங்களை நிர்வாக காரணங்களுக்காக மாற்றி அமைக்கலாம் என்றும் கூறியது. அதாவது,
    • புவியியல் தொடர்ச்சி (geographical contiguity)
    • நிதி தன்னிறைவு (financial self sufficiency)
    • நிர்வாக எளிமை (ease of administration)
    • வளர்ச்சிக்கான சாத்தியம் (Potential for development)

           போன்ற காரணங்களுக்காக மாநிலங்களை பிரிக்கலாம் என்றது.

 

 

4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION

 

 

5. SCHEDULES OF INDIAN CONSTITUTION

6. PARTS OF THE INDIAN CONSTITUTION

7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION

8. PREAMBLE OF INDIAN CONSTITUTION

 

TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS:

 

Leave a Reply