சுதந்திரம்

சுதந்திரம்

சுதந்திரம்

சுதந்திரம் என்றால் என்ன

       ‘லிபர்’ என்ற லத்தின் சொல்லில் இருந்து உருவான ‘லிபர்டி’ (Liberty) என்ற சொல்லுக்கு சிறையிலிருந்தும், கைதி நிலையில் இருந்தும், அடிமைத்தனத்தில் இருந்தும், அடக்குமுறையில் இருந்தும் விடுபெறுவது என்று பொருள். தமிழில் சுதந்திரம் என்று சொல்லலாம். தொழில், வாணிப சுதந்திரங்களில் கட்டுப்பாடு இல்லாதிருப்பது, தொழில் – வாணிகங்களில் சமவாய்ப்புகள், ஒப்பந்தம் மற்றும் போட்டிகளில் சுதந்திரம் என்று பலவாறாகப் பொருள் கொள்ளப்படுகிறது. தனிமனிதனின் செயல்பாடு உரிமைகளில் அரசு தலையிடாமல் இருப்பதே சுதந்திரம் என ஏற்றுக் கொள்ளப்படுகிறது

       அனால் நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் முகவுரையில் உள்ள “சுதந்திரம்” என்ற சொல்லுக்கு தனிநபர்களின் கட்டுப்பாடு இல்லாத நடவடிக்கைகள், அதே நேரத்தில் தனிநபரின் ஆளுமை (Individual Personalities) வளர்சிக்கு தேவையான வாய்ப்புகளை வழங்குதல் சுதந்திரம் ஆகும். இந்தியாவில் உள்ள அணைத்து குடிமக்களுக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகள் மூலம் சுதந்திரமான சிந்தனை, நம்பிக்கை, தெய்வ வழிப்பாடு போன்றவற்றை உறுதி செய்யப்படும் என அரசியலமைப்பின் முகவுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது (The Preamble secures to all citizens of India liberty of thought, expression, belief, faith and worship, through their Fundamental Rights, enforceable in court of law, in case of violation).

       அடிப்படை உரிமைகள் பகுதியில் இடம் பெற்றுள்ள சுதந்திரங்களையும், தனிமனிதனின் மேம்பாட்டுக்கும் நாட்டின் மேம்பாட்டுக்கும் அத்தியாவசியமானவை எனக் கருதப்படும் சுதந்திரங்களையும் உள்ளடக்கியதாக சுகந்திரம் திகழ்கிறது. 19-வது (Article 19) பிரிவானது பேச்சுரிமை (Freedom of Speech), கருத்து வெளிப்பாட்டு உரிமை போன்றவற்றை பாதுகாக்க உத்திரவாதம் அளிக்கிறது. இதைப்போலவே 25 முதல் 28 வரையுள்ள பிரிவுகள் சமய நம்பிக்கை, வழிபாடு உள்ளிட்ட அணைத்து விதமான சமய உரிமைகளையும் (Religious Freedom) உள்ளடக்கியுள்ளன.

       அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ள சிந்தனை, கருத்து வெளிப்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு போன்றவற்றிற்கான சுதந்திரம், நாட்டின் பாதுகாப்பையும், பொதுநலனையும் பாதிக்காதவாறு கட்டுப்படுதப்படவும் வேண்டும்.

 

 

 

 

 INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி

3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்

4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION

 

 

5. SCHEDULES OF INDIAN CONSTITUTION

6. PARTS OF THE INDIAN CONSTITUTION

7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION

8. PREAMBLE OF INDIAN CONSTITUTION

 

TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS:

 

      

Leave a Reply