சமத்துவம்

சமத்துவம்

சமத்துவம்
சமத்துவம்

சமத்துவம் என்றால் என்ன

                சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டம் தண்டனை அளித்தாலும் அல்லது பாதுகாப்பு அளித்தாலு, பிறப்புப் போன்ற காரணங்களுக்காக பேதமின்றி அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். அத்துடன், குடிமக்கள் அனைவரையும், அவர்களுடைய திறமையையும், பண்பினையும், ஆற்றலையும் பொறுத்துத்தான், அரசுப் பதவிகளையோ, பிற பொறுப்புகளையோ, கவுரவங்களையோ பெறுவதற்கு தகுதி பெற்றவர்களாக கருத வேண்டும்.

       இந்திய அரசியலமைப்பின் (Indian Constitution) முகவுரையில் (Preamble) கூறப்பட்டுள்ளவாறு, இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அந்தஸ்து, மரியாதை மற்றும் சமமான வைப்பு ஆகியவற்றை உறுதி செய்யப்படும். இது மூன்று வித பரிமாணங்களை கொண்டுள்ளது, அவை, குடிமை சமத்துவம் (Civic Equality), அரசியல் சமத்துவம் (political Equality) மற்றும் பொருளாதார சமத்துவம் (Economic Equality) ஆகும்.

குடிமை சமத்துவம்

         குடிமை சமத்துவம் ஆனது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், அடிப்படை உரிமைகளில் (Fundamental Rights), கீழ்க்கண்ட உரிமைகளை குடிமை சமத்துவத்தின் கீழ் அளிக்கிறது.

  1. விதி 14 = சட்டத்தின் முன் அனைவரும் சமம் (Equality before law)
  2. விதி 15 = சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் காரணமாக வேற்றுமை காட்டுதலுக்குத் தடை (Prohibition of discrimination on grounds of religion, race, caste, sex or place of birth)
  3. விதி 16 = பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு வழங்குதல் (Equality of opportunity in matters of public employment)
  4. விதி 17 = தீண்டாமை ஒழிப்பு (Abolition of Untouchability)
  5. விதி 18 = விருதுப்பட்டங்கள் ஒழிப்பு (Abolition of titles)

அரசியல் சமத்துவம்

   அரசியல் சமத்துவம் வழங்க, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கீழ்க்கண்ட இரண்டு விதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

  1. விதி 325 = சமயம், இனம், சாதி அல்லது பாலினம் காரணமாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கோ, தனியுறு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமெனக் கோருவதற்க்கோ எவரும் தகுமை அட்ட்றவர் ஆகார் (No person to be ineligible for inclusion in, or to claim to be included in a special, electoral roll on grounds of religion, race, caste or sex)
  2. விதி 326 = மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டமன்றப் பேரவைகளுக்குமான தேர்தல்கள் வயது வந்தோருக்கு வாக்குரிமை என்ற அடிப்படையில் இருக்கும் (Elections to the House of the people and to the Legislative assemblies of States to be on the basis of adult suffrage)

பொருளாதார சமத்துவம்

      பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த, இந்திய அரசியல் சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகளில் (Directive Principles of State Policy) வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  1. விதி 39 (a) = இந்திய குடிமக்கள் அனைவருக்கும் வாழ்வியலுக்குத் தேவையான ஆதார வசதிகளைப் போதுமான அளவுக்கு கொடுத்தல் (The right to adequate means of livelihood for all citizens)
  2. விதி 39 (d) = ஆண் பெண் வேறுபாடின்றி சம உழைப்புக்கு சம சம்பளம் கொடுக்கப்படல் (equal pay for equal work for men and women)

 

 

 

 

 

 INDIAN POLITY HISTORICAL BACKGROUND / வரலாற்றுப் பின்னணி

3. INDIAN POLITY – FORMATION OF CONSTITUENT ASSEMBLY / அரசியலமைப்பு உருவாக்கம்

4. SALIENT FEATURES OF INDIAN CONSTITUTION

 

 

5. SCHEDULES OF INDIAN CONSTITUTION

6. PARTS OF THE INDIAN CONSTITUTION

7. ARTICLES OF THE INDIAN CONSTITUTION

8. PREAMBLE OF INDIAN CONSTITUTION

 

TNPSC INDIAN POLITY OLD NOTES MATERIALS:

 

Leave a Reply