8TH TAMIL அயோத்திதாசர் சிந்தனைகள்

8TH TAMIL அயோத்திதாசர் சிந்தனைகள்

8TH TAMIL அயோத்திதாசர் சிந்தனைகள்

 

8TH TAMIL அயோத்திதாசர் சிந்தனைகள்

  • ஒருவருடைய வாழ்க்கை என்பது பிறந்து, வாழ்ந்து, மறைவதோடு முடிந்துவிடுவதில்லை.
  • நேர்மையான சிந்தனையும் செயலும் ஒருவருக்கு வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற்றுத் தருகின்றன

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை

  • தென்னிந்திய சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் = அயோத்திதாச பண்டிதர்.
  • சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் = அம்பேத்கர், பெரியார்.
  • பெரியார், அம்பேத்கர் ஆகியோர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் = அயோத்திதாசர் பண்டிதர்.

அயோத்திதாசர் வாழ்க்கை குறிப்பு

  • பிறந்த நாள் = 20.05.1845
  • பிறந்த ஊர் = சென்னை.
  • அயோத்திதாசரின் இயற்பெயர் = காத்தவராயன்.
  • இவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்.
  • இவர் “அயோத்திதாசப் பண்டிதர்” என்பவரிடம் கல்வியும், சித்த மருத்துவமும் பயின்றார்.
  • காத்தவராயன் யாரிடம் சித்த மருத்துவம் பயின்றார் = அயோத்திதாசப் பண்டிதர்.
  • தம்மீது அன்பு காட்டிய ஆசிரியர் பெயரையே தனக்கு சூட்டிக் கொண்டார்.
8TH TAMIL அயோத்திதாசர் சிந்தனைகள்
8TH TAMIL அயோத்திதாசர் சிந்தனைகள்

பர்மா தமிழர்கள்

  • சிறிது காலம் நீலகிரி சென்று வாழ்ந்த அயோத்திதாசர், திருமணத்திற்கு பின்பு பர்மா சென்று வாழ்ந்தார்.
  • பர்மாவில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வந்த தமிழர்களின் உரிமைக்காக பாடுபட்டார் அயோத்திதாசர்.

சிந்தனைகளின் அடித்தளம்

  • அயோத்திதாசர் அறிந்த மொழிகள் = தமிழ், பாலி, வடமொழி, ஆங்கிலம்.
  • அயோத்திதாசர் கற்றறிந்த துறைகள் = இலக்கியம், இலக்கணம், கணிதம், மருத்துவம், சமயத் தத்துவம்.

ஒருபைசாத்தமிழன்

  • அயோத்திதாசர் துவக்கிய இதழின் பெயர் = ஒருபைசாத்தமிழன்,
  • ஒருபைசாத்தமிழன் இதழ் துவங்கப்பட்ட ஆண்டு = 1907 (சென்னை).
  • அயோத்திதாசர் ஒரு வருடத்திற்கு பிறகு (1908) “ஒருபைசாத்தமிழன்” இதழை “தமிழன்” என்று பெயர் மாற்றம் செய்தார்.
8TH TAMIL அயோத்திதாசர் சிந்தனைகள்
8TH TAMIL அயோத்திதாசர் சிந்தனைகள்

பகுத்தறிவு ஊட்டல்

  • அயோத்திதாசர் தமது “தமிழன்” இதழ் மூலம் தமிழ்நாடு மட்டுமின்றி மைசூர், கோலார், ஐதராபாத், இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் பகுத்தறிவுத் சிந்தனை, இன உணர்வு, சமோகச் சிந்தனை ஆகியவற்றை ஊட்டினார்.

கல்வி அறிவு அவசியம்

  • “ஒரு மனிதன் அறிவு வளர்ச்சி பெற வேண்டுமானால், கல்வி அறிவு அவசியம்” என்று கருதியவர் அயோத்திதாசர்.
  • “நிலவு நாளும் வளர்ந்து முழுநிலவாகி ஒளிவீசுவதுபோல் கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்கும் நூல்கள் கற்பிக்கப்படவேண்டும்” என்று கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
  • “மரம் வளர்த்தல்” பற்றி கற்க வேண்டும் என்று கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
  • “சங்ககாலப் பெண்களைப்போலவே, இக்காலப் பெண்களும் கல்விகற்றுத் தம் வாழ்க்கையைத் தாமே அமைத்துக்கொள்ளும் உரிமையைப் பெறவேண்டும்” என்று கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.

புலியும் பசுவும் ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தும்

  • “ஊர்கள் அன்பும் ஆறுதலும் பெறுமானால் நாடு முழுவதும் அன்பும் ஆறுதலும் பெற்றுத் திகழும்” என்று கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
  • “நல்ல நாட்டில் புலியும் பசுவும் ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தும்” என்று கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.

மக்களும் மழையும்

  • மக்களையும் மழையையும் தொடர்புபடுத்தி அயோத்திதாசர் ஒழுக்கம் தொடர்பான கருத்துக்களை கூறியுள்ளார்.
  • “நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கைகூட உதவாது” எனக் கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
8TH TAMIL அயோத்திதாசர் சிந்தனைகள்
8TH TAMIL அயோத்திதாசர் சிந்தனைகள்

திராவிட மகாஜன சங்கம்

  • அயோத்திதாசர் தமது கொள்கைகளை வலியுறுத்தவும் ஒடுக்கப்பட்டோர் உரிமைகளைப் பாதுகாக்கவும் 1892 ஆம் ஆண்டு திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்.
  • “திராவிட மகாஜன சங்கத்தை” துவக்கியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
  • “திராவிட மகாஜன சங்கத்தை” அயோத்திதாசர் துவக்கிய ஆண்டு = 1892.

அரசியல் விடுதலையும் மக்கள் உரிமையும்

  • “விடுதலை என்பது வெறும் ஆட்சிமாற்றம் மட்டுமன்று. அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமையவேண்டும்” என்று கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
  • “சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக்கூடாது; மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அஃது அமையவேண்டும்” என்று கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.
  • “மக்கள் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய, நாடு முன்னேற முடியாது” என்று கூறியவர் = அயோத்திதாசர் பண்டிதர்.

தனித்தன்மை உடைய சிந்தனையாளர்

  • பகுத்தறிவு, இலக்கியம், சமூகம், சமயம், அரசியல், வரலாறு, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றில் அக்கறைகொண்டு புதிய சிந்தனைகளை விதைத்தவர் = அயோத்திதாசர்.
  • அயோத்திதாசரை, அன்றைய தமிழர்கள் தனித்தன்மை உடைய சிந்தனையாளராக மதித்தனர்.

ஒரு நாட்டின் தலைவன்

  • ஒரு நாட்டின் தலைவன் வீரம், விடாமுயற்சி, ஈகை, ஆராய்ந்து அறியும் ஆற்றல் ஆகியவற்றைப் பெற்றவனாக விளங்குதல் வேண்டும்.
  • அவன் அறம் அல்லாதவற்றை நீக்கி, அறத்தை நிலைநிறுத்த வேண்டும் எனக் கூறுகிறார் அயோத்திதாசர்.

அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள்

  • அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் = போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்திரனச் சுருக்கம், பாலவாகடம்.

பெரியாரின் முன்னோடி

  • “என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள்” என்று கூறியவர் தந்தை பெரியார்
  • தந்தை பெரியாருக்கு முன்னோடியாக இருந்தவர்கள் = பண்டிதமணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும்.

அயோத்திதாசர் எழுதிய நூல்கள்

  • அயோத்திதாசர் எழுதிய நூல்கள் = புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா முதலியன.
  • திருவள்ளுவர், ஔவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் பௌத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்.

அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை

  • சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை உள்ள இடம் = சென்னை தாம்பரம்.

 

 

Leave a Reply