6TH TAMIL வளர்தமிழ்
6TH TAMIL வளர்தமிழ்
- மூத்த தமிழ்மொழி என்றும் இளமையானது; எளிமையானது; இனிமையானது; வளமையானது; காலத்திற்கேற்பத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்வது; நினைக்கும்போதே நெஞ்சில் இனிப்பது; நம் வாழ்வைச் செழிக்கச் செய்வது;
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
உலக மொழிகள்
- உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன
- இவற்றுள் சில மொழிகள் மட்டுமே பேச்சு வடிவம், எழுத்து வடிவம் ஆகிய இரண்டையும் பெற்றுள்ளன.
செம்மொழி தமிழ்
- உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கியவளம் பெற்றுத் திகழும் மொழிகள் மிகச்சிலவே.
- அவற்றுள் செம்மை மிக்க மொழி என ஏற்றுக் கொள்ளப்பட்டவை சில மொழிகளே.
- தமிழ்மொழி அத்தகு சிறப்பு மிக்க செம்மொழியாகும்.
தமிழ்மொழியின் இனிமை
- தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை. ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை கொண்டவை
- “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தமிழின் இனிமையை கூறியவர் = பாரதியார்.
மூத்தமொழி தமிழ்
- “என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்!” என்று தமிழ்மொழியின் தொன்மையை புகழ்ந்தவர் = பாரதியார்.
- தமிழில் நமக்கு கிடைத்த மிகவும் பழமையான இலக்கண நூல் = தொல்காப்பியம்.
எளிய மொழி
- தமிழ்மொழி பேசவும் படிக்கவும் எழுதவும் உகந்த மொழி.
- எழுத்துகளைக் கூட்டி ஒலித்தாலே தமிழ் படித்தல் இயல்பாக நிகழ்ந்துவிடும்.
வலஞ்சுழி எழுத்துகள், இடஞ்சுழி எழுத்துகள்
- தமிழ்மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் “வலஞ்சுழி” எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
- வலஞ்சுழி எழுத்துகள் = அ, எ, ஔ, ண, ஞ
- இடஞ்சுழி எழுத்துகள் = ட, ய, ழ
சீர்மை மொழி
- “சீர்மை” என்பதன் பொருள் = ஒழுங்கு முறை.
- தமிழ் மொழியின் பலவகைச் சீர்மைகளுள் குறிப்பிடத்தக்கது = சொற்சிறப்பு.
- உயர்திணை, அஃறிணை என இருவகைத் திணைகளை அறிவோம்.
- உயர்திணையின் எதிர்ச்சொல் தாழ்திணை என அமையவேண்டும்.
- ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயர் இட்டனர் நம் முன்னோர்.
- பாகற்காய் கசப்புச்சுவை உடையது.
- அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல், இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) என வழங்கினர்.
இலக்கிய, இலக்கண வளம்
- இலக்கிய, இலக்கண வளம் நிறைந்தது தமிழ் மொழி.
- இலக்கண நூல் = தொல்காப்பியம், நன்னூல்
- சங்க இலக்கியம் = எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
- அறநூல்கள் = திருக்குறள், நாலடியார்
- காப்பியங்கள் = சிலப்பதிகாரம், மணிமேகலை
சொல் வளம்
- ஒரு பொருளின் பல நிலைகளுக்கும் வெவ்வேறு பெயர் சூட்டுவது தமிழ் மொழியின் சிறப்பாகும்.
- சான்றாக, பூவின் ஏழுநிலைகளுக்கும் தோன்றுவது முதல் உதிர்வது உதிர்வது வரை தனித்தனிப் பெயர்கள்தமிழில் உண்டு.
பூவின் ஏழு நிலைகள்
- பூவின் முதல் நிலை = அரும்பு
- பூவின் இரண்டாவது நிலை = மொட்டு
- பூவின் மூன்றாவது நிலை = முகை
- பூவின் நான்காவது நிலை = மலர்
- பூவின் ஐந்தாவது நிலை = அலர்
- பூவின் ஆறாவது நிலை = வீ
- பூவின் ஏழாவது நிலை = செம்மல்
மா என்னும் சொல்லின் பல்வேறு பொருள்
- மா என்னும் ஓரெழுத்து சொல்லின் பல்வேறு பொருள்கள் = மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு.
முத்தமிழ்
- இயல்தமிழ் = எண்ணத்தை வெளிப்படுத்தும்.
- இசைத்தமிழ் = உள்ளத்தை மகிழ்விக்கும்.
- நாடகத்தமிழ் = உணர்வில் கலந்து வாழ்வின் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டும்.
புதிய இலக்கிய வடிவங்கள்
- செய்யுள், கவிதை, புதுக்கவிதை, துளிப்பா = தமிழ்க் கவிதை வடிவங்கள்.
- கட்டுரை, புதினம், சிறுகதை = தமிழ் உரைநடை வடிவங்கள்.
கணினிக்கு ஏற்ற மொழி
- மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது “எண்களின்” அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
- கணினி, இணையம் போன்றவற்றில் பயன்படுத்தக்கூடிய மொழியாக தமிழ் திகழ்கிறது.
தமிழ் என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்ற நூல்
- “தமிழ்” என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்றுள்ள நூல் = தொல்காப்பியம்.
- சான்று:
- “தமிழென் கிளவியும் அதனோ ரற்றே” (தொல்காப்பியம் : 386)
தமிழ்நாடு என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்ற நூல்
- தமிழ்நாடு என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்றுள்ள நூல் = சிலப்பதிகாரம் (வஞ்சிக்காண்டம்).
- சான்று:
- “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்” (சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம் : 165)
தமிழன் என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்ற நூல்
- தமிழன் என்ற சொல் முதன் முதலில் இடம்பெற்றுள்ள நூல் = அப்பர் தேவாரம் (திருத்தாண்டகம்)
- சான்று:
- “தமிழன் கண்டாய்” (அப்பர் தேவாரம், திருத்தாண்டகம் : 23)
தாவர இலைப் பெயர்கள்
- ஆல், அரசு, மா, பலா, வாழை = இலை
- அகத்தி, பசலை, முருங்கை = கீரை
- அருகு, கோரை = புல்
- நெல், வரகு = தாள்
- மல்லி = தழை
- சப்பாத்திக் கள்ளி, தாழை = மடல்
- கரும்பு, நாணல் = தோகை
- பனை, தென்னை = ஓலை
- கமுகு (பாக்கு) = கூந்தல்
இரண்டாயிரம் ஆண்டுகளாக வழக்கில் உள்ள தமிழ்ச்சொற்கள்
வ.எண் |
சொல் | இடம்பெற்ற நூல் |
1 | வேளாண்மை |
கலித்தொகை 101, திருக்குறள் 81 |
2 |
உழவர் | நற்றிணை 4 |
3 | பாம்பு |
குறுந்தொகை-239 |
4 |
வெள்ளம் | பதிற்றுப்பத்து-15 |
5 | முதலை |
குறுந்தொகை-324 |
6 |
கோடை | அகநானூறு-42 |
7 | உலகம் |
தொல்காப்பியம், கிளவியாக்கம்- 56, திருமுருகாற்றுப்படை-1 |
8 |
மருந்து | அகநானூறு-147, திருக்குறள் 952 |
9 | ஊர் |
தொல்காப்பியம், அகத்திணையியல் -41 |
10 |
அன்பு | தொல்காப்பியம், களவியல் 110, திருக்குறள் 84 |
11 | உயிர் |
தொல்காப்பியம், கிளவியாக்கம்- 56, திருக்குறள் 955 |
12 |
மகிழ்ச்சி | தொல்காப்பியம், கற்பியல்-142, திருக்குறள் 531 |
13 | மீன் |
குறுந்தொகை 54 |
14 |
புகழ் | தொல்காப்பியம், வேற்றுமையியல் 71 |
15 | அரசு |
திருக்குறள் 554 |
16 |
செய் | குறுந்தொகை 72 |
17 | செல் |
தொல்காப்பியம், 75 புறத்திணையியல் |
18 |
பார் | பெரும்பாணாற்றுப்படை, 435 |
19 | ஒழி |
தொல்காப்பியம், கிளவியாக்கம் 48 |
20 |
முடி |
தொல்காப்பியம், வினையியல் 206 |
- நால்வகைக் குறுக்கங்கள்
- திருக்குறள்
- புலி தங்கிய குகை
- பாஞ்சை வளம்
- தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ முத்துராமலிங்கத்தேவர்
- 6TH TAMIL வளர்தமிழ்
- 6TH TAMIL வளர்தமிழ்
- 6TH TAMIL வளர்தமிழ்
- 6TH TAMIL வளர்தமிழ்
- கப்பலோட்டிய தமிழர்
- வழக்கு
- கலங்கரை விளக்கம்
- கவின்மிகு கப்பல்
- தமிழரின் கப்பற்கலை
- ஆழ்கடலின் அடியில்
- இலக்கியவகைச் சொற்கள்
- இன்பத்தமிழ்க் கல்வி
- அழியாச் செல்வம்
- வாழ்விக்கும் கல்வி
- பள்ளி மறுதிறப்பு
- ஓரெழுத்து ஒருமொழி பகுபதம் பகாப்பதம்
- ஒரு வேண்டுகோள்
- கீரைப்பாத்தியும் குதிரையும்
- பேசும் ஓவியங்கள்
- தமிழ் ஒளிர் இடங்கள்
- தொழிற்பெயர்
- விருந்தோம்பல்
- வயலும் வாழ்வும்
- திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
- திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
- அணி இலக்கணம்
- புதுமை விளக்கு
- அறம் என்னும் கதிர்
- ஒப்புரவு நெறி
- அணி இலக்கணம்
- திருக்குறள்
- மலைப்பொழிவு
- தன்னை அறிதல்
- கண்ணியமிகு தலைவர்
- பயணம்
- ஆகுபெயர்