7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம்
7TH TAMIL குற்றியலுகரம் குற்றியலிகரம்
- தமிழ் எழுத்துக்களை எத்தனை வகையாக பிரிப்பர் = இரண்டு. அவை,
- முதல் எழுத்து
- சார்பெழுத்து
முதலெழுத்துகள் என்றால் என்ன
- தமிழில் முதலெழுத்துகள் எனப்படுவது உயிர் எழுத்துக்கள் பனிரெண்டும், மெய் எழுத்துக்கள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துக்கள் ஆகும்.
- முதலெழுத்துகள் மொத்தம் முப்பது ஆகும்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சார்பெழுத்துக்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்
- சார்பெழுத்துக்கள் மொத்தம் பத்து ஆகும். அவை,
- உயிர்மெய்
- ஆய்தம்
- உயிரளபெடை
- ஒற்றளபெடை
- குற்றியலிகரம்
- குற்றியலுகரம்
- ஐகாரக்குறுக்கம்
- ஔகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக்குறுக்கம்
குற்றியலுகரம் என்றால் என்ன
- குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம்
- தனக்குரிய ஓசையில் இருந்து குறைந்து ஒலிக்கும் உகரம் “குற்றியலுகரம்” எனப்படும்.
- “கு, சு, டு, து, பு, று” ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும் பொழுது, ஒரு மாத்திரை அளவிற்கு பதிலாக அரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.
- எ.கா:
- காசு, ஏஃகு, பயறு, பாட்டு, பந்து, சால்பு
முற்றியலுகரம் என்றால் என்ன
- தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும்.
- வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும்.
- இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்.
- எ.கா.
- புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்
- குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைப் கொண்டு ஆறு வகையாக பிரிக்கப்படும். அவை,
- நெடில்தொடர்க் குற்றியலுகரம்
- ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்
- உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
- வன்தொடர்க் குற்றியலுகரம்
- மென்தொடர்க் குற்றியலுகரம்
- இடைத்தொடர்க் குற்றியலுகரம்
நெடில்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன
- தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘நெடில் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
- இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.
- ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும் குற்றியலுகரம் = நெடில்தொடர்க் குற்றியலுகரம்.
- எ.கா:
- பாகு, மாசு, பாடு, காது, ஆறு
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன
- ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
- எ.கா:
- எஃகு, அஃது
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன
- தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
- எ.கா:
- அரசு (ர = ர் + அ)
- ஒன்பது (ப = ப் + அ)
- வரலாறு (லா = ல் + ஆ)
வன்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன
- வல்லின (க், ச், ட், த், ப், ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘வன்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
- எ.கா:
- பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று
மென்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன
- மெல்லின (ங், ஞ், ண், ந், ம், ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘மென்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
- எ.கா:
- பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று
இடைத்தொடர்க் குற்றியலுகரம் என்றால் என்ன
- இடையின (ய், ர், ல், வ், ழ், ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ‘இடைத்தொடர்க் குற்றியலுகரம்’ எனப்படும்.
- எ.கா
- எய்து, மார்பு, சால்பு, மூழ்கு
எழுத்துக்களை குறிப்பிட சாரியை பயன்படுத்தல்
- தமிழில் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்கு கரம், கான், காரம், கேனம் ஆகிய எழுத்துச் சாரியைகளைப் பயன்படுத்துகிறோம்.
- குறில் எழுத்துகளைக் குறிக்க ‘கரம்’
- (எ.கா.) அகரம், இகரம், உகரம், ககரம், மகரம்
- நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘கான்’
- (எ.கா.) ஐகான், ஔகான்
- குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘காரம்’
- (எ.கா.) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஔகாரம்
- ஆய்த எழுத்தைக் குறிக்க ‘கேனம்’
- (எ.கா.) அஃகேனம்
- குறில் எழுத்துகளைக் குறிக்க ‘கரம்’
குற்றியலுகரத்தில் வராத சொற்கள்
- ‘வ்’ என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
- மேலும் சு, டு, று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.
குற்றியலிகரம் என்றால் என்ன
- குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்.
- ஒரு மாத்திரை அளவில் இருந்து குறுகி அரை மாத்திரை அளவில் ஒலிக்கும் இகரம் ‘குற்றியலிகரம்’ எனப்படும்.
குற்றியலிகரம் எத்தனை இடங்களில் வரும்
- குற்றியலிகரம் இரண்டு இடங்களில் மட்டுமே வரும்.
குற்றியலிகரம் வரும் இடங்கள்
- குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும். அந்த இகரம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும்.
- கொக்கு + யாது = கொக்கியாது
- தோப்பு + யாது = தோப்பியாது
- நாடு + யாது = நாடியாது
- ‘மியா’ என்பது ஓர் அசைச்சொல் (ஓசை நயத்திற்காக வருவது). இதில் ‘மி’ யில் (I = ம் + இ) உள்ள இகரம் குற்றியலிகரம் ஆகும். இது சொற்களில் இடம்பெறும் போது தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும்.
குற்றியலிகரம் குறிப்புகள்
- “மியா” என்னும் அசைச்சொல் வரும் இடங்களில் குற்றியலிகரம் வரும்,
- குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.
- தற்போது உரைநடை வழக்கில் இல்லாத சார்பெழுத்து = குற்றியலிகரம்.
- இலக்கியங்களில் மட்டுமே உள்ள சார்பெழுத்து = குற்றியலிகரம்.
-
- கல்வி அழகே அழகு
- புத்தியைத் தீட்டு
- பல்துறைக் கல்வி
- ஆன்ற குடிப்பிறத்தல்
- வேற்றுமை
- நிறுத்தற்குறிகள்
- திருக்கேதாரம்
- பாடறிந்து ஒழுகுதல்
- நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
- தமிழர் இசைக்கருவிகள்
- தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள்
- இணைச்சொற்கள்
- வளம் பெருகுக
- மழைச்சோறு
- கொங்குநாட்டு வணிகம்
- காலம் உடன் வரும்
- புணர்ச்சி
- படை வேழம்
- விடுதலைத் திருநாள்
- பாரத ரத்னா எம் ஜி இராமச்சந்திரன்
- அறிவுசால் ஔவையார்
- வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
- ஒன்றே குலம்
- மெய்ஞ்ஞான ஒளி
- அயோத்திதாசர் சிந்தனைகள்
- மனித யந்திரம்
- யாப்பு இலக்கணம்
- திருக்குறள்
- உயர்க்குணங்கள்
- இளைய தோழனுக்கு
- சட்டமேதை அம்பேத்கர்
- பால் மனம்
- அணி இலக்கணம்
7TH TAMIL