7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள்
7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள்
- ஒவ்வோர் எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய கால அளவு உண்டு. இதை மாத்திரை என்பர்
குறுக்கங்கள் என்றால் என்ன
- ஒவ்வோர் எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய கால அளவு உண்டு.
- இதை மாத்திரை என்பர்.
- ஆனால் எல்லா எழுத்துகளும் எல்லா இடங்களிலும் தமக்குரிய மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதில்லை.
- சில எழுத்துகள் சில இடங்களில் தமக்குரிய கால அளவைவிடக் குறைவாக ஒலிக்கும்.
- இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் குறுக்கங்கள் என்கிறோம்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்
- குறுக்கங்கள் நான்கு வகைப்படும். அவை,
- ஐகாரக்குறுக்கம்
- ஔகாரக்குறுக்கம்
- மகரக்குறுக்கம்
- ஆய்தக் குறுக்கம்
ஐகாரக்குறுக்கம் என்றால் என்ன
ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது = ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும். ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது = ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும். |
- ஐ, கை, பை என ஐகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
- வையம், சமையல், பறவை என சொற்களின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கிறது.
- இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம் ஐகாரக்குறுக்கம் எனப்படும்.
- ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது = ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.
- ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது = ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்.
ஔகாரக்குறுக்கம் என்றால் என்ன
சொற்களின் முதலில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கிறது |
- ஔ, வௌ என ஔகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
- ஔவையார், வௌவால் எனச் சொற்களின் முதலில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
- இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஔகாரம் ஔகாரக்குறுக்கம் எனப்படும்.
- ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.
- சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராத குறுக்கம் = ஔகாரக்குறுக்கம்.
- சொல்லின் முதலில் மட்டுமே வரும் குறுக்கம் = ஔகாரக்குறுக்கம்.
மகரக்குறுக்கம் என்றால் என்ன
தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது |
- அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
- வலம் வந்தான் என்பதில் மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வருவதால் மகரமெய்யானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
- போலும் என்னும் சொல்லைப் போன்ம் என்றும், மருளும் என்னும் சொல்லை மருண்ம் என்றும் செய்யுளில் ஓசைச் சீர்மைக்காகப் பயன்படுத்தினர்.
- இச்சொற்களில் மகரமெய்யானது ன், ண் ஆகிய எழுத்துகளை அடுத்து வருவதால் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
- இவ்வாறு குறைந்து ஒலிக்கும் மகரம் மகரக்குறுக்கம் எனப்படும்.
ஆய்தக் குறுக்கம் என்றால் என்ன
தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது. |
- அஃது, எஃகு ஆகிய சொற்களில் ஆய்த எழுத்து, தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
- முள் + தீது என்பது முஃடீது எனவும், கல் + தீது என்பது கஃறீது எனவும் சேரும். இச்சொற்களில் உள்ள ஆய்த எழுத்து, தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
- இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஆய்தம் ஆய்தக்குறுக்கம் எனப்படும்.
-
- கல்வி அழகே அழகு
- புத்தியைத் தீட்டு
- பல்துறைக் கல்வி
- ஆன்ற குடிப்பிறத்தல்
- வேற்றுமை
- நிறுத்தற்குறிகள்
- திருக்கேதாரம்
- பாடறிந்து ஒழுகுதல்
- நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்
- தமிழர் இசைக்கருவிகள்
- தொகைநிலை தொகாநிலைத் தொடர்கள்
- 7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள்
- 7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள்
- 7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள்
- 7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள்
- 7TH TAMIL நால்வகைக் குறுக்கங்கள்
- இணைச்சொற்கள்
- வளம் பெருகுக
- மழைச்சோறு
- கொங்குநாட்டு வணிகம்
- காலம் உடன் வரும்
- புணர்ச்சி
- படை வேழம்
- விடுதலைத் திருநாள்
- பாரத ரத்னா எம் ஜி இராமச்சந்திரன்
- அறிவுசால் ஔவையார்
- வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்
- ஒன்றே குலம்
- மெய்ஞ்ஞான ஒளி
- அயோத்திதாசர் சிந்தனைகள்
- மனித யந்திரம்
- யாப்பு இலக்கணம்
- திருக்குறள்
- உயர்க்குணங்கள்
- இளைய தோழனுக்கு
- சட்டமேதை அம்பேத்கர்
- பால் மனம்
- அணி இலக்கணம்
7TH TAMIL