சிற்றிலக்கியங்கள்
சிற்றிலக்கியங்கள்
- தமிழ் இலக்கியங்கள் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என இரு வகைப்படும்.
- பாட்டுடைத் தலைவனின் வாழ்வில், சிறுகூறினை மட்டும் எடுத்துக்கொண்டு அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு உறுதிப்பொருள்களுள் ஒன்று அமையப்பாடுவது சிற்றிலக்கியம்.
- இது தொண்ணூற்றாறு வகைப்படும்.
வகையும் தொகையும்
- சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தையும் எண்ணிக்கையையும் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன.
- ஒவ்வொரு பாட்டியல் நூலும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையைக் கூறுமிடத்து வேறுபடுகின்றன.
- இருப்பினும் பிரபந்த மரபியல், பிரபந்தத் தீபிகை, சதுரகராதி, தொன்னூல் விளக்கம் ஆகியன 96 எனக் குறிப்பிடுகின்றன.
அந்தாதி
- ஒரு பாடலின் இறுதி எழுத்தோ , அசையோ, சீரோ, அடியோ அடுத்த பாடலின் அல்லது அடுத்த அடியின் தொடக்கமாகக் கொண்டு பாடப்படுவது அந்தாதி.
- அந்தம்+ஆதி = அந்தாதி. ; அந்தம்-இறுதி; ஆதி- தொடக்கம்.
- இது “சொற்றொடர்நிலை” எனப் பெயர்பெறும்.
- “அருணகிரி அந்தாதி” எழுதியவர் = குகை நமச்சிவாயர்
கலம்பகம்
- அம்மானை, கார், ஊசல், கைக்கிளை, புயவகுப்பு முதலான 18 உறுப்புகள் அமையப் பாடப்படுவது கலம்பகம் ஆகும்.
- கலம் + பகம் = கலம்பகம்
- கலம் = 12
- பகம் = 6
- பாட்டுடைத் தலைவனை ஒரு பெண் புகழ்ந்துப் பாட, மற்றொரு பெண் அது தொடர்பான ஒரு வினா கேட்டு, மூன்றாம் பெண் ஒரு கருத்தை கூறி அதை முடிப்பது அம்மானை ஆகும்.
- “திருக்காவலூர்க் கலம்பகம்” நூலை இயற்றியவர் = வீரமாமுனிவர்
பரணி
- போரில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரனின்மேல் பாடப்படுவது பரணி. போரில் தோற்ற அரசனது நாட்டின் பெயரால் இந்நூல் வழங்கப்பெறும்.
- தக்கயாகப்பரணி நூலின் ஆசிரியர் = ஒட்டக்கூத்தர்
கோவை
- அகப்பொருளுக்குரிய துறைகள் பலவற்றை 400 கட்டளைக் கலித்துறையால் சங்கிலித்தொடர் போலப் பாடப்பட்டது கோவையாகும்.
- கடவுளரையோ அரசரையோ படைத்தலைவரையோ வள்ளல்களையோ பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்படுவது.
- தஞ்சாவூரில் பிறந்த சந்திரவாணன், பாண்டிவள நாட்டைச்சார்ந்த குலசேகர பாண்டியனின் அமைச்சராக விளங்கினான். இவன் புலவர்களைப் புரக்கும் வள்ளலாக விளங்கினமையால் பொய்யாமொழிப்புலவர் இவன் பெயரில் தஞ்சைவாணன் கோவையை எழுதினார்.
- தஞ்சைவாணன் கோவை நூலை எழுதியவர் = பொய்யாமொழி புலவர்
சதகம்
- சதகம் தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் அகப்பொருள் அல்லது புறப்பொருள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு நூறு பாடல்களால் பாடப்படுவதே சதகம் என்பது பாட்டியல் நூல்களில் சொல்லப்படும் இலக்கணம்.
- சதம் என்பது நூறு எனப் பொருள்படும். நூறு பாடல்களைக் கொண்ட சிற்றிலக்கியம் சதகம் எனப்பட்டது.
- “அறப்பளீசுர சதகம்” நூலை இயற்றியவர் = அம்பலவாணக் கவிராயர்
பிள்ளைதமிழ்
- கடவுளரையோ அரசரையோ பிறரையோ குழந்தையாகக் கருதி அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப்பருவங்களாகப் பகுத்துப் பருவத்திற்குப் பத்து ஆசிரிய விருத்தங்களாகப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.
- இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும்.
- காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை ஆகிய பத்துப் பருவங்களை அமைத்துப் பாடுவது ஆண்பாற் பிள்ளைத்தமிழ் என்பர்.
- முதல் ஏழு பருவங்களோடு இறுதியில் உள்ள மூன்று பருவங்களுக்குப் பதிலாக அம்மானை, நீராடல், ஊசல் ஆகிய பருவங்கள் அமைத்துப் பாடுவது பெண்பாற் பிள்ளைத்தமிழ் என்றும் குறிப்பிடுவர்.
- “பாவேந்தர் பிள்ளைத்தமிழ்” நூலை இயற்றியவர் = புலவர் புலமைப்பித்தன்
- “பாவேந்தர் பிள்ளைத்தமிழ்” நூலை இயற்றியவர் = கவிஞர் மணிமேகலை குப்புசாமி
பள்ளு
- சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் வாய்ந்த ஓர் இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும்.
- உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம் பள்ளு இலக்கியம் எனப்படும்.
சிற்றிலக்கிய வகைகள் 96
- அகப்பொருள்கோவை
- அங்கமாலை
- அட்டமங்கலம்
- அநுராகமாலை
- அரசன் விருத்தம்
- அலங்கார பஞ்சகம்
- ஆற்றுப்படை
- இணைமணி மாலை
- இயன்மொழி வாழ்த்து
- இரட்டை மணிமாலை
- இருபா இருபஃது
- உலா
- உலாமடல்
- உழத்திப்பாட்டு
- உழிஞைமா
- உற்பவ மாலை
- உசல்
- ஊர் நேரிசை
- ஊர் வெண்பா
- ஊரின்னிசை
- எண் செய்யுள்
- எழு கூற்றிருக்கை
- ஐந்திணைச் செய்யுள்
- ஒருபா ஒருபஃது
- ஒலியல் அந்தாதி
- கடிகை வெண்பா
- கடைநிலை
- கண்படை நிலை
- கலம்பகம்
- காஞ்சி மாலை
- காப்பியம்
- காப்பு மாலை
- குழமகன்
- குறத்திப்பாட்டு
- கேசாதி பாதம்
- கைக்கிளை
- கையறுநிலை
- சதகம்
- சாதகம்
- சின்ன ப் பூ
- செருக்கள வஞ்சி
- செவியறிவுறுஉ
- தசாங்கத்தயல்
- தசாங்கப்பத்து
- தண்டக மாலை
- தாண்டகம்
- தாரகை மாலை
- தானை மாலை
- தும்பை மாலை
- துயிலெடைநிலை
- தூது
- தொகைநிலைச் செய்யுள்
- நயனப்பத்து
- நவமணி மாலை
- நாம மாலை
- நாற்பது
- நான்மணி மாலை
- நூற்றந்தாதி
- நொச்சிமாலை
- பதிகம்
- பதிற்றந்தாதி
- பயோதரப்பத்து
- பரணி
- பல்சந்த மாலை
- பவனிக்காதல்
- பன்மணி மாலை
- பாதாதி கேசம்
- பிள்ளைக்கவி (பிள்ளைத்தமிழ்)
- புகழ்ச்சி மாலை
- புறநிலை
- புறநிலை வாழ்த்து
- பெயர் நேரிசை
- பெயர் இன்னிசை
- பெருங்காப்பியம்
- பெருமகிழ்ச்சிமாலை
- பெருமங்கலம்
- போர்க்கெழு வஞ்சி
- மங்கல வள்ளை
- மணிமாலை
- முதுகாஞ்சி
- மும்மணிக்கோவை
- மும்மணிமாலை
- மெய்க்கீர்த்தி மாலை
- வசந்த மாலை
- வரலாற்று வஞ்சி
- வருக்கக் கோவை
- வருக்க மாலை
- வாமடல் – மடவேறுதல்
- வாகை மாலை
- வாதோரண மஞ்சரி
- வாயுறை வாழ்த்து
- விருத்த இலக்கணம்
- விளக்கு நிலை
- வீர வெட்சி மாலை
- வெற்றிக் கரந்தை மஞ்சரி
- வேனில் மாலை
சிற்றிலக்கியங்கள் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
- ஐம்பெரும் காப்பியம்
- ஐஞ்சிறுங் காப்பியம்
- கம்பராமாயணம்
- இராவண காவியம்
- 20 ஆம் நூற்றாண்டு காப்பியங்கள்
- நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
- திருவிளையாடற்புராணம்
- தேம்பாவணி
- சீராபுரணம்
- சிற்றிலக்கியங்கள்
- மனோன்மணியம்
- பாஞ்சலிசபதம்
- காளமேகப் புலவர்
- அழகிய சொக்கநாதர்
- நாட்டுபுறப்பட்டு
- பன்னிருதிருமுறைகள்
- தண்டியலங்காரம்